Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
உங்க குழந்தை நன்றாக சாப்பிட வேண்டுமா? அப்போ அன்னபூரணியை வழிபடுங்கள்..!
விரதங்களில் அன்னபூரணி விரதம் மிகவும் விசேஷமாகும். அன்னபூரணியை வேண்டிக்கொண்டு விரதம் இருந்தால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். வாழ்வில் இருக்கும் பஞ்சத்தைப் போக்கும் அன்னபூரணி, பசி, பட்டினி, நோய், வறுமை போன்ற விஷயங்களை தடுக்கக்கூடிய தெய்வமாகும்.
பொதுவாக சில குழந்தைகள் சோறு ஊட்டும் பொழுது சாப்பிடாது. குழந்தைகள் நல்ல முறையில் உணவு உண்ணவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க அன்னபூரணியை வழிபட வேண்டும்.

அன்னபூரணி தேவியை செவ்வாய் வெள்ளிக்கிழமையில் வழிபட வேண்டும்..
அன்னபூரணி தேவி செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது மிகவும் விசேஷமாகும். குறிப்பாக பெண்கள் விரதமிருந்து வழிபட்டு பூஜை செய்தால் குடும்பத்தில் பல நன்மைகள் ஏற்படும். பஞ்சம் வராமல் இருக்க அன்னபூரணியின் ஆசீர்வாதம் அவசியமாகும். அன்னபூரணி விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய முறை குறித்து இங்கே காண்போம்.
அன்னபூரணி தேவியை வீட்டில் எப்படி வழிபடுவது?
சிறிய அளவிலான அன்னபூரணி விக்ரகங்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம். அன்னபூரணி விக்ரஹம் வைத்திருப்பவர்கள் கட்டாயம் அதன் அடியில் சிறிய அளவிலான தாம்பூலம் வைக்க வேண்டும். பலரும் இதனை சாதாரணமாக பூஜை அறையில் வெறுமனே வைத்து விடுகிறார்கள். இவ்வாறு செய்யக்கூடாது. அப்புறம் அதில் கட்டாயம் சிறிதளவு அரிசியையோ அல்லது நெல்லை கொட்டி வைக்க வேண்டும்..
அன்னபூரணியின் கையிலிருக்கும் கரண்டியிலும் ஒன்றிரண்டு அரிசிகளைப் போட்டு வைக்க வேண்டும். வழிபாட்டின் பொழுது முதலில் விநாயகர் மந்திரங்களை உச்சரித்த பின், அன்னபூரணியின் ஸ்லோகங்களையும் துதிகளையும் உச்சரிக்க வேண்டும். வாசனை மிக்க மலர்களால் அர்ச்சிக்க அன்னபூரணியின் அருள் நமக்கு விரைவாக கிடைக்கும். கற்கண்டு, வாழைப்பழம், பாயாசம் ஆகியவற்றை கொண்டு நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
எடைக்கு எடை வெல்லம்
அதோடு மட்டுமல்லாமல் குருவாயூர் மற்றும் நின்ற கோலத்து விஷ்ணு ஆலயங் களுக்குச் சென்று, குழந்தையின் எடைக்கு எடை வெல்லமும், பச்சரிசியும் கொடுத்து, இறைவனை அர்ச்சித்து வழிபட்டால் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் நன்றாக உணவு உண்ணத் தொடங்கும்.
அன்னதானம்
உணவு ஊட்டும் முன்னால் தினமும் குழந்தையின் கையால் ஒருபிடி அரிசியை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். 45 நாட்கள் தொடர்ந்து அன்னபூரணி படத்தின் முன் அந்த அரிசியைச் சேர்த்து வைக்க வேண்டும். ஒரு மண்டல அரிசி சேர்ந்த பிறகு, அதோடு நாமும் கொஞ்சம் அரிசியைச் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானம் செய்யலாம். வீட்டிற்கு யாசகம் கேட்டு வருபவர்களுக்கு பணமாக கொடுக்காமல் அரிசியாக கொடுத்து அனுப்புங்கள். இவற்றையெல்லாம் கடைபிடித்தால் அன்னபூரணியின் அருள் கிடைத்து வறுமை இல்லா வாழ்வு பெறலாம்.



Click it and Unblock the Notifications