Latest Updates
-
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கர்ப்பிணிப் பெண்களின் மன அழுத்தத்தைத் தடுப்பது எப்படி!
கர்ப்ப காலத்தில் கொஞ்சம் மன அழுத்தம் ஏற்படுவது இயற்கை. வீங்கிய கணுக்கால், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தூங்குவதற்கு வசதியான நிலையைக் கண்டுபிடிக்க முடியாது. மனநிலை மாற்றங்கள், கடுமையான தலைவலி அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் மன அழுத்தத்தை தீவிரப்படுத்தலாம் .
கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் பல சூழ்நிலைகள் உங்களைச் சுற்றியுள்ளன. அவை என்னென்ன? அவற்றை எப்படி தடுப்பது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

பெண்கள் கருவுற்றதும் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்கும். அந்தப் பெண்ணும் தன் தாய்மையைக் கொண்டாடுவாள். ஆனால், உடலில் நிகழும் மாற்றங்கள், பிரசவம் குறித்த பயம், ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை கர்ப்பிணிக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கும். ஏற்ற இறக்கமான இந்த ஹார்மோன் அளவுகள், எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள், உடல் அசௌகரியம் மற்றும் உணர்ச்சி சோர்வு ஆகியவை கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணங்கள் என்று கூறலாம்.
மன அழுத்தமாக இருக்கும்போது, தலைவலி, பசியின்மை, விரைவான இதய துடிப்பு ஏற்படலாம். இதனால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தூக்கம் வராமல் அவதிபடுவார்கள்.. இது பிற்காலத்தில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற அதிக மன அழுத்தம் கர்ப்பத்தை எந்த விதத்திலும் பாதிக்காவிட்டாலும், அது குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பக்கால மனஅழுத்ததை இயல்பாக எடுத்துக்கொண்டால் தாய் - சேய் இருவருக்கும் பாதிப்பு வர வாய்ப்பு உண்டு. கர்ப்பக் காலத்தில் மனஅழுத்தம் அதிகமாகும்போது கருவுற்று இருக்கும் பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும். இதை பிரெக்னென்சி இண்டியூன்ஸ்டு ஹைப்பர் டென்ஷன் என்பார்கள்.
மன அழுத்தத்தைக் குறைக்க பல வழிகள் உள்ளன.
1. கவலை: உங்களை கவலையடையச் செய்யும் விஷயங்களைப் பற்றி அறிய முயற்சிக்கவும். அதன் வேர்களை அடையாளம் கண்டுகொள்வது சிகிச்சையை எளிதாக்குகிறது. உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உங்களை கவலையடையச் செய்தால், அத்தகையவர்களைச் சுற்றி கவனமாக இருங்கள். "அனைத்தும் எங்கள் சொந்த நலனுக்காக" என்ற கொள்கையை நீங்கள் எப்போதும் பின்பற்ற வேண்டும்
2. ஒய்வெடுத்தல்: கொஞ்சம் ஓய்வெடுக்காமல் இருப்பது, சரியான தூக்கமின்மை, மன அழுத்தம் உட்பட எதிர்மறை உணர்ச்சிகளை அதிகரிக்கும். எனவே, போதுமான அளவு தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
3. சரிவிகித உணவை உண்ணுதல்: கர்ப்ப காலத்தில் நன்கு சமநிலையான உணவை உட்கொள்ள வேண்டும். இது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமின்றி, கர்ப்பிணிப் பெண்ணின் ஆரோக்கியத்தையும், குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
4. உடற்பயிற்சி: தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். கார்டிசோல் அளவைக் குறைக்க உதவுவதால் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். கார்டிசோல் ஒரு ஹார்மோன் ஆகும், இது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது.
5. தியானம்: மனதிற்கு மிகவும் அமைதியானதாக இருப்பதால், கர்ப்ப காலத்தில் தியானம் செய்வது சிறந்தது. தியானம் மூளையில் உள்ள மற்ற கவனச்சிதறல்களை நீக்கி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மகப்பேறு யோகா பயிற்சி, குறிப்பாக கர்ப்பிணிகள், மன அழுத்தத்தை குறைக்கிறது. மெல்லிய இசையைக் கேட்பது மன அழுத்தத்தைப் போக்கவும், ஓய்வெடுக்கவும் சிறந்தது.
6. சுவாசம்: நம்முடைய சுவாச முறைகள் கூட மன அழுத்தத்துக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கும். அதனால் எப்போதும் சுவாசத்தில் கவனம் கொண்டிருப்பது அவசியம். கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படும்போது சுவாசம் மிக ஆழமானதாகவோ அல்லது மிகக் குறுகிய அளவிலான மூச்சாகவோ இருக்கலாம்.இத்தகைய சுவாசத்தின் மூலம் உடலுக்குத் தேவையாக ஆக்சிஜனில் பற்றாக்குறை ஏற்படும். அதனால் கர்ப்ப காலத்தில் சுவாசம் சீராக இருக்க மூச்சுப் பயிற்சியும் தியானமும் செய்வது நல்லது.



Click it and Unblock the Notifications











