Latest Updates
-
முட்டையை இந்த மாதிரி வித்தியாசமா புலாவ் செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியை விட அட்டகாசமாக இருக்கும் -
இந்திய சினிமாவின் பிறப்பிடம் என்று அழைக்கப்படும் நகரம் எது? இந்திய சினிமாவின் தந்தை யார் தெரியுமா? -
1/2 கிலோ மட்டன் வாங்குனா இந்த மாதிரி கிராமத்து ஸ்டைலில் பச்சை மிளகாய் தொக்கு செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
3/4 கிலோ சிக்கனை வாங்குனா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (25 October 2026-31 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
Aippasi Annabhishekam 2026: ஐப்பசி அன்னாபிஷேகம் அன்று சிவனுக்கு எந்தெந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம்? -
குரு பெயர்ச்சி 2026: கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரியுமா? -
தலைமுடி எலிவால் மாதிரி இருக்கா? அப்ப இந்த விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
November 2026 Lucky Zodiac Signs: நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்ப அதிர்ஷ்டமானதா இருக்கும்...
Parle-G பிஸ்கட் எப்படி உலகிலேயே அதிகம் விற்பனையாகும் பிஸ்கட்டாக மாறியது? அதன் வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா
Parle-G பிஸ்கட் பற்றி இந்தியாவில் உள்ள அனைவருமே நன்கு அறிவார்கள். இது பிஸ்கட் என்பதையும் தாண்டி இந்திய மக்களின் உணர்வுகளோடு கலந்த ஒன்றாகும். அதனால்தான் இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பிஸ்கட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள். பல ஆண்டுகளாக வெறும் 5 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த பிஸ்கட்தான் உலகிலேயே அதிகம் விற்பனையாகும் பிஸ்கட் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் இந்தியாவில் காலை அல்லது மாலை தேநீர் பரிமாறப்படும் போது, Parle-G பிஸ்கட் உட்கொள்வது ஒரு சம்பரதாயமாகவே இருந்தது. இந்த நிறுவனம் 1929 ஆம் ஆண்டு மோகன்லால் தயாளால் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, இந்தியா கடுமையான உணவு பஞ்சத்தை எதிர்கொண்டதால், மற்ற பிராண்டுகளைப் போலவே, Parle-G-ம் பல சிரமங்களை எதிர்கொண்டது.

சுவாரஸ்யமாக அதன் தனித்துவமான சுவை மற்றும் பேக்கேஜிங் காரணமாக இந்த நிறுவனம் தடைகளைத் தாண்டி அதன் புகழை மீண்டும் பெற்றது. ஒரு அழகான சிறுமியின் புகைப்படத்துடன் கூடிய பிஸ்கட்டின் எளிமையான பாக்கெட் நாடு முழுவதும் உள்ள நுகர்வோரின் இதயங்களைக் கவர்ந்தது.
புத்திசாலித்தனமான பேக்கேஜ்
Parle-G-யின் புத்திசாலித்தனமான பேக்கேஜிங் 1960 ஆம் ஆண்டு மகன்லால் தஹியா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இருப்பினும், பிஸ்கட் கவரில் உள்ள பெண்ணை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை, அது ஒரு கற்பனைக் கதாபாத்திரம் மற்றும் யாரையும் மாதிரியாக வைத்து வடிவமைக்கப்படவில்லை. பார்லே-ஜி-யின் நிலையான மற்றும் எளிமையான வடிவமைப்பு பல தலைமுறைகளை கடந்தும் அனைவரையும் ஈர்த்தது, மேலும் இந்தியாவின் அனைத்து வீடுகளிலும் தவிர்க்க முடியாத பொருளாக அதனை மாற்றியது.
Parle-G-ல் உள்ள G-ன் அர்த்தம் என்ன?
Parle-G-யில் உள்ள "ஜி" என்பது குளுக்கோஸைக் குறிக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் "ஜீனியஸ்" என்பதாகும். குறைந்த விலை, பரவலான மற்றும் எளிதில் கிடைக்கும் தன்மை காரணமாக பிஸ்கட் அதை மார்க்கெட்டில் நிலைத்து நிற்க செய்தது. அதன் மலிவான விலை பல இந்திய குடும்பங்களுக்கு அதை நிரந்தர சிற்றுண்டியாக மாற்றியது. அது மட்டுமின்றி, அதன் மாறாத தரம் பிராண்டின் மீதான நுகர்வோர் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
பார்லே-ஜி இந்தியாவில் வெறும் பிஸ்கட்டோ அல்லது சிற்றுண்டியோ மட்டுமல்ல, அது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே மாறியுள்ளது. பலர் தங்கள் குழந்தைப் பருவ நினைவுகளை பார்லே-ஜியுடன் தொடர்புபடுத்துகின்றனர். இப்போதும் 90'ஸ் கிட்ஸ்கள் Parle-G பிஸ்கட் மீது பிரிக்க முடியாத பந்தத்தைக் கொண்டுள்ளனர்.
Parle-G எப்படி உலகின் சிறந்த பிஸ்கட் ஆனது?
1980-களில், கோக் மற்றும் பெப்சி இடையே உலகளாவிய போர் நடந்து கொண்டிருந்தபோது, இந்தியாவின் உள்நாட்டு சந்தையைக் கைப்பற்ற Parle நிறுவனம் வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தது. Parle தம்ஸ் அப், லிம்கா, கோல்ட் ஸ்பாட் மற்றும் ஃப்ரூட்டி போன்ற பானங்களைக் கொண்டு வந்தது. இந்த உத்தி மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் இருந்ததால், கோகோ கோலா நிறுவனம் Thumbs Up-யை வாங்க முடிவு செய்தது.
உலகிலேயே அதிகம் விற்பனையாகும் பிஸ்கட்
2011 ஆம் ஆண்டில், பார்லே-ஜி அதிகாரப்பூர்வமாக உலகிலேயே அதிகம் விற்பனையாகும் பிஸ்கட்டாக அறிவிக்கப்பட்டது. பணவீக்கம் உயர்ந்த போதிலும் அதன் விலையை மாற்றாமல் இருந்ததால் அதன் வெற்றி யாராலும் தடுக்க முடியாததாக இருந்தது. காலப்போக்கிற்கு ஏற்ப தங்கள் விலைகளை கணிசமாக அதிகரித்த மற்ற பிராண்டுகளைப் போலல்லாமல், Parle-G பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருந்தது, இது பெரிய அளவிலான மக்களுக்கு அத்தியாவசியமான மற்றும் அணுகக்கூடிய உணவுப் பொருளாக சேவை செய்தது, செய்கிறது, இனிமேலும் செய்யும்.



Click it and Unblock the Notifications

