Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
தாஜ்மஹால் கட்ட ஷாஜகான் எவ்வளவு செலவு செய்தார்? இப்போது தாஜ்மஹால் கட்ட எவ்வளவு செலவாகும் தெரியுமா?
இந்தியா அதன் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது. அதேபோல இந்தியாவின் வரலாறு மிகவும் தனித்துவமானது. இந்திய வரலாற்றை வடிவமைத்ததில் முகலாயர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவை கிட்டதட்ட 350 ஆண்டுகள் ஆட்சி செய்த முகலாயர்கள் இந்திய வரலாற்றில் அசைக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தினர்.
முகலாயர்களின் தாக்கம் இந்தியாவின் கலாச்சாரம் முதல் உணவுப்பழக்கம் வரை இன்றும் தொடர்கிறது. அதேபோல இந்திய கட்டுமானங்களிலும் முகலாயர்களின் தாக்கம் வலிமையானது. முகலாயர்கள் அவர்களின் ஆட்சிக் காலத்தில் பல நினைவுச்சின்னங்களை உருவாக்கினார்கள். அவர்கள் உருவாக்கிய ஒரு பிரமாண்டமான மற்றும் கம்பீரமான கட்டுமானம்தான் உலக காதலர்களின் சின்னமான தாஜ்மஹால். இன்றும் உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் கம்பீரமாக நிற்கிறது.

இது முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் அவரது மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாகக் கட்டப்பட்டது. வரலாற்று குறிப்புகளின் படி, இந்த உலக அதிசயத்தைக் கட்ட கிட்டத்தட்ட 22-25 ஆண்டுகள் ஆனது. கட்டுமானம் 1632 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நேர்த்தியான மொசைக் கைவினைத்திறன், முகலாய மற்றும் இந்திய கட்டிடக்கலை இணைந்த இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை மற்றும் விலைமதிப்பற்ற கற்களின் பயன்பாடு போன்றவை இதை ஒவ்வொரு ஒரு அற்புதமான கட்டமைப்பாக மாற்றியது.
இந்த உலக அதிசயத்தை உருவாக்க லேபிஸ் லாசுலி, கார்னிலியன், ஓனிக்ஸ், தங்கம், பளிங்கு போன்ற விலைமதிப்பற்ற கற்கள் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பெறப்பட்டன. இந்தக் கட்டிடக்கலை அற்புதத்தை உருவாக்க முகலாயர்கள் எவ்வளவு பணம் செலவழித்திருப்பார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
தாஜ்மஹாலை கட்ட எவ்வளவு செலவானது?
தாஜ்மஹால் பற்றி பல வதந்திகள் இன்றும் உள்ளது. பெர்சியா, ஒட்டோமான் மற்றும் பிற இடங்களிலிருந்து பல தொழிலாளர்கள் இதைக் கட்ட வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 1000-க்கும் மேற்பட்ட யானைகளும் இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டன. தாஜ்மஹாலுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பதற்கான சரியான தொகை தெரியவில்லை, இருப்பினும், தோராயமாகஅந்த காலகட்டத்திலேயே ரூ. 3.2 கோடி செலவாகியிருக்கலாம் என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கைகளைத் தவிர, இந்திய வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்கார் 'முகலாய இந்தியாவில் ஆய்வுகள்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார், அதில் அவர் தாஜ்மஹாலின் மதிப்பீட்டுச் செலவைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் அவர் சுமார் 42 மில்லியன் ரூபாய் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை இப்போது ஒருவர் இதேபோன்ற கட்டிடத்தை கட்ட விரும்பினால் எவ்வளவு செல்வாகும்?
இப்போது எவ்வளவு செலவாகும்?
சில தனிப்பட்ட மதிப்பீடுகள் தற்போது தாஜ்மஹால் போன்ற ஒரு கட்டுமானத்தை உருவாக்க சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படலாம் என்று கூறுகின்றன. துல்லியமான தொகையை கூற முடியாது என்றாலும் பல அறிக்கைகள் குறைந்தது ஒரு பில்லியனுக்கு மேல் செலவாகும் என்று உறுதியாக கூறுகின்றன. இன்று தாஜ்மஹால் கட்டப்பட்டால், இந்திய ரூபாயில் சுமார் 7500 கோடி ரூபாய் செலவாகலாம் என்று அறிக்கைகள் கூறுகிறது. இந்த உலக அதிசயத்திற்கு விலை நிர்ணயம் செய்வது கடினம் என்றாலும், வரும் நூற்றாண்டுகளில் இதுபோன்ற மற்றொரு காதல் சின்னத்தை உருவாக்க நிச்சயம் வாய்ப்பில்லை.



Click it and Unblock the Notifications
