Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
இந்திய அரசாங்கம் ஒரு 1 ரூபாய் நாணயத்தை அச்சிட எவ்வளவு செலவு செய்யுது தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவா?
இந்தியா டிஜிட்டல் இந்தியாவாக மாறிய பிறகு பணத்திற்கு இருக்கும் மதிப்பு மெல்ல குறைந்து வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிறைந்த இன்றைய உலகில் ஒரு ரூபாய் நாணயம் நமக்கு முக்கியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் அதன் உண்மையான மதிப்பு தெரிந்தால் நாம் அதனை ஒருபோதும் தாழ்வாக நினைக்க மாட்டோம்.
நாம் மிகவும் அலட்சியமாக நினைக்கும் இந்த நாணயத்தை தயாரிப்பதற்கு உண்மையில் எவ்வளவு செலவாகும் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? 1 ரூபாய் நாணயத்தை தயாரிக்க குறைந்தபட்சம் ஒரு ரூபாய்க்கு மேல் செலவாகும் என்ற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயத்தை அச்சிடுவதற்கான செலவு அதன் உண்மையான மதிப்பை விட அதிகமாக உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, ஒரு ரூபாய் நாணயத்தின் உற்பத்தி செலவு ரூ.1.11.
உற்பத்திச் செலவுகள் மற்றும் நாணயத்தின் மதிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு மற்ற 1 ரூபாய் நாணயம் மட்டுமின்றி மற்ற நாணயங்களுக்கும் நீள்கிறது. 2 ரூபாய் நாணயம் தயாரிப்பதற்கு ரூ.1.28 செலவாகும், 5 ரூபாய் நாணயம் தயாரிக்க ஆகும் செலவ ரூ.3.69 மற்றும் 10 ரூபாய் நாணயம் தயாரிக்க ஆகும் செலவு ரூ.5.54.
நாணயத்தின் உண்மையான மதிப்பு ஏன் வேறுபடுகிறது?
21.93 மிமீ விட்டம், 1.45 மிமீ தடிமன் மற்றும் 3.76 கிராம் எடை கொண்ட ஒரு ரூபாய் நாணயம் துருப்பிடிக்காத எஃகு மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த நாணயங்கள் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள Indian Government Mints(IGM)-ஆல் அச்சிடப்படுகின்றன. ஹைதராபாத் மின்ட் செலவுகளை வெளிப்படுத்தினாலும், மும்பை நாணயம் அச்சிடும் நிலையம் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 இன் பிரிவு 8(1)(d) இன் கீழ் ரகசியத்தன்மையை மேற்கோள் காட்டி, தரவுகளை வெளிப்படுத்துவதைத் தவிர்த்தது.
நாணயத்தை அச்சிடுவது யார்?
இந்தியாவில், கரன்சி அச்சடிக்கும் பொறுப்பு, அரசுக்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் இடையே பிரிக்கப்பட்டுள்ளது. நாணயங்கள் மற்றும் ரூ 1 நோட்டு, பிரத்தியேகமாக இந்திய அரசால் அச்சிடப்பட்டது. ரூ.2 முதல் ரூ.500 வரையிலான நோட்டுகள், இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டது. ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.
கரன்சி நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவுகள்
நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு மதிப்பின் அடிப்படையில் மாறுபடும். 1,000 நோட்டுகளுக்கான உற்பத்தி செலவுகள் என்னவெனில்,
10 ரூபாய் நோட்டுகள்: ₹960
100 ரூபாய் நோட்டுகள்: ₹1,770
200 ரூபாய் நோட்டுகள்: ₹2,370
500 ரூபாய் நோட்டுகள்: ₹2,290
தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டைப் பொறுத்தவரை, ஒரு 2000 நோட்டை அச்சிடுவதற்கு தோராயமாக ₹4 செலவாகும்.
அதிக உற்பத்திச் செலவு இருந்தபோதிலும், நாணயங்கள் மற்றும் நோட்டுகள் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாததாகவே இருக்கின்றன, இது சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பரிவர்த்தனைகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது.



Click it and Unblock the Notifications
