Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உங்க பிறந்த தேதியின் படி உங்களுக்கு எத்தனை குழந்தை பிறக்க வாய்ப்பிருக்காம் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
ஜோதிடத்தை போலவே நியூமராலஜியும் நம்முடைய எதிர்காலத்தை கணிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஜோதிடத்தில் கிரக நிலைகளைப் பொறுத்து எப்படி எதிர்காலம் கணிக்கப்படுகிறதோ, அதேபோல நியூமராலஜியில் எண்களைப் பொறுத்து எதிர்காலம் கணிக்கப்படுகிறது.
ஒரு நபரின் பிறந்த தேதியிலிருந்து விதியைப் படிக்க முடியும் என்று எண் கணிதம் நம்புகிறது. ஒருவரின் தொழில் வாழ்க்கை, காதல் மற்றும் திருமண வாழ்க்கை போன்றவற்றுடன் ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது என்பதையும் பிறந்த தேதி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நியூமராலஜியின் படி உங்கள் எதிர்காலத்தைக் கணிக்க முதலில் உங்கள் விதி எண்ணைக் கண்டறிய வேண்டும். இதைக் கண்டறிய, உங்கள் பிறந்த தேதியின் அனைத்து எண்களையும் ஒற்றை இலக்கம் வரும் வரை கூட்ட வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் ஜூன் 23, 1992 இல் பிறந்திருந்தால்,
2 + 3 + 6 + 1 + 9 + 9 + 2 = 32. மேலும் 3 + 2 = 5
எனவே உங்கள் விதி எண் 5.
விதி எண் 1
விதி எண்ணை 1 ஆக கொண்டவர்கள் பெரிய குடும்பத்தை பெற அதிர்ஷ்டமுள்ளவர்கள். அவர்களுக்கு அதிக குழந்தை பெற வாய்ப்புள்ளது. ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. அவர்களுக்கு ஒரு குழந்தை நிச்சயமாக இருக்கும், அதற்கு மேல் அவர்களின் விருப்பம்தான்.
விதி எண் 2
நியூமராலஜி கணிப்புகளின் படி விதி எண்ணை 2 ஆக கொண்டவர்கள் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற கொள்கையை உடையவர்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் ஒரு குழந்தையுடன் தன்னிறைவு பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.
விதி எண்3
விதி எண்ணை 3 ஆக கொண்டவர்கள் குழந்தை பெறுவதில் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நியூமராலஜி கூறுகிறது. ஆனால் முயன்றால் முடியாதது எதுவுமில்லை. எனவே அவர்கள் நிச்சயம் குழந்தை பெறுவார்கள்.
விதி எண் 4
நியூமராலஜியின் படி விதி எண்ணை 4 ஆக கொண்டவர்கள் சிறந்த குடும்பத் தலைவராகவும், தங்கள் துணையை அதிகம் நேசிப்பவராகவும் இருப்பார்கள். எனவே இவர்களுக்கு மூன்று முதல் நான்கு குழந்தைகள் வரை பிறக்க வாய்ப்புள்ளது.
விதி எண் 5
விதி எண் 5-யை கொண்டவர்கள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் அது இரட்டை குழந்தைகளாக இருக்கும் கூடுதல் அதிர்ஷ்டமும் இவர்களுக்கு உண்டு.
விதி எண் 6
இந்த எண்ணின் கீழ் பிறந்தவர்கள் குழந்தைகள் மீது அதிக பிணைப்புக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பெரிய இடைவெளியுடன் இரண்டு குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.
விதி எண் 7
இந்த எண்ணின் கீழ் பிறந்தவர்கள் வாழ்க்கையை மிகவும் திட்டமிட்டு வாழக்கூடியவர்கள். எனவே அவர்கள் ஒரே குழந்தையை பெற்றுக்கொண்டு அவர்களை சிறப்பாக வளர்க்க முயற்சி செய்வார்கள்.
விதி எண் 8
விதி எண் 8-ல் பிறந்தவர்கள் தங்கள் குடும்பத்தை இரண்டு குழந்தைகளுடன் திட்டமிடுவார்கள். ஆனாலும் தங்கள் விருப்பப்படி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார்கள்.
விதி எண் 9
நியூமராலஜியின் படி விதி எண் 9- ல் பிறந்தவர்கள் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்வார்கள். இருவருக்கிடையிலும் மிகக்குறைந்த இடைவெளியே இருக்கும்.



Click it and Unblock the Notifications

