Latest Updates
-
ஜூலை 16-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. -
தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
வழுக்கை தலையில் முடி வளரணுமா? அப்ப கடுகு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
மிதுன ராசிக்கு வக்ர நிலையில் சென்ற புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அதிக செலவழிக்காமல் எடையை குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட்' ஃபாலோ பண்ணுங்க.. -
Varalakshmi Vratham 2026: வரலட்சுமி விரதம் 2026 எப்போது? பூஜை நேரம், கலசம் அமைப்பது எப்படி போன்ற தகவல்கள் இதோ! -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
கொங்குநாடு சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கப்போகுதாம்
திருப்பதியில் உள்ள மலைகளும் அதன் சிறப்புகளும்..!
திருப்பதி திருமலை கோவில் பல அற்புதங்களுக்கு பெயர் பெற்றது. இந்த கோவில் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரசிதி பெற்ற புனித யாத்திரைகளில் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரம் என்று நம்பப்படும் வெங்கடேசப் பெருமானுக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்து உள்ளது.
முதலில் நமக்கு திருப்பதி என்றாலே நினைவுக்கு வருவது ஏழு மலைகள்தான். இந்தியாவின் பணக்கார கோயில்களில் முதலிடத்தில் இருக்கும் திருப்பதி சுவாமியை தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கக் கூட தயங்குவதில்லை. அப்படி பெருமாளை தரிசிக்க வேண்டும் என்றால் ஏழு மலைகளை கடந்துதான் செல்ல வேண்டும்.
இப்படி மலைகளை மையமாக்கி பெருமாள் இருப்பதால் இவருக்கு மலையப்பர், ஏழுமலையான், மலை குனிய நின்றான் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. இந்த திருப்பதி ஏழு மலைகளுக்கான சிறப்பம்சங்கள் என்னென்ன? ஏன் ஒவ்வொரு மலைக்கும் ஒரு குறிப்பிட்ட பெயர் வந்தது? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க...

திருவேங்கடவன் கோவில் கொண்டுள்ள சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளின் பெயர்கள் கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும்.
விருஷாத்ரி மலை
விருஷன் என்னும் அரசன் மோட்சத்தை அடைய இம்மலைக்கு வந்து தவம் செய்தார். அவனது பெயரில் இம்மலை 'விருஷாத்ரி' எனப் பெயர் பெற்றது. விருஷபன் என்ற அசுரன் பெருமாளுடன் சண்டையிட்டான். இறுதியில் தன் தவறை உணர்ந்து இதற்கு பரிகாரமாக பக்தர்களின் பாதம் படும் இடத்துக்குத் தன் பெயரை வைக்கும்படி வேண்டினான். அதன்படி, அவனது பெயரில் இது 'விருஷபாத்ரி மலை' எனப் பெயர் பெற்றது.
கருடாத்ரி மலை
கருடாழ்வார் தன் பாவத்தை போக்க இங்கு தவம் செய்தார். அதனால் இது 'கருடாத்ரி மலை' எனப் பெயர் பெற்றது. இதை கருட மலை எனவும் அழைக்கலாம். இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது 'கருட மலை' எனப் பெயர் பெற்றது.
அஞ்சனாத்ரி மலை
குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதி வராகரை வேண்டி அஞ்சனாதேவி தவம் செய்த மலை. அந்தக் குழந்தைதான் ஆஞ்சநேயர். இவளது பெயரில் ஏற்பட்ட மலை 'அஞ்சனாத்ரி மலை' எனப்படுகிறது.
நாராயணாத்ரி மலை
பூலோகத்தில் பெருமாள் தங்குவதற்காக நாராயண மகரிஷியால் அடையாளம் காட்டப்பட்ட மலை இது. அதனால் இது நாராயணாத்ரி மலை என அழைக்கப்படுகிறது.
வேங்கடாத்ரி மலை
வேம் + கடம் = வேங்கடம். வேம் - பாவம், கடம் - எரிபடுதல். அதாவது இந்த மலையில் நமது பாதங்கள் பட்டதும் பாவங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்பது பொருள். பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு 'வேங்கடாத்ரி மலை' என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு கோலத்தில் காட்சி தருகிறார்.



Click it and Unblock the Notifications