Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
புத்த பூர்ணிமா அன்னைக்கு உங்களுக்கு புடிச்சவங்களுக்கு 'இத' அனுப்புங்க... ரொம்ப சந்தோஷப்படுவாங்க..!
Buddha Purnima In Tamil: 'நாம் இன்று எந்த நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நம் எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது' என்று நம் வாழ்க்கைக்கு தேவையான எண்ணற்ற கருத்துக்களை கூறியிருக்கிறார் கெளதம புத்தர்.
புத்தரை போதிபகவான் என்று அழைக்கிறோம். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதம புத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலக அளவில் பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் புத்த பூர்ணிமா பௌத்தர்களின் கொண்டாட்ட நாளாகும்.

இன்று புத்தர் பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் வைசாக மாதம் பவுர்ணமி நாள் 'புத்த பூர்ணிமா' என உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது. தனது இறுதி ஆண்டுகளில் பௌத்தத்தைத் தழுவிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய விடுதலைக்குப் பின்னர் சட்ட அமைச்சராக இருந்தபோது ஆண்டுதோறும் இந்நாள் பௌத்த நெறியாளர்களுக்கு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் உள்ள பெளத்தர்களால் புத்த பூர்ணிமா மே 5ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. புத்த பூர்ணிமாவுக்கு உங்களுக்கு விருப்பாமானர்களுக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள புத்தரின் பொன்மொழி வாழ்த்து செய்திகளை அனுப்புங்கள்.

வாழ்த்து 1
புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்!

பொன்மொழி
எதற்காகவும் அவசரப்படாதீர்கள்
நேரம் வரும்போது தனாகவே அது நடந்தேறும்!
புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்!

வாழ்த்து
இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய ஒரு பயணம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் மகிழ்ச்சியான புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்!

வாழ்த்து
ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகளை ஒளிரச் செய்யலாம். மேலும் மெழுகுவர்த்தியின் ஆயுள் குறைக்கப்படாது. பகிரப்படுவதன் மூலம் மகிழ்ச்சி ஒருபோதும் குறையாது- புத்தர்.
புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்!

பொன்மொழி
நிம்மதிக்கான இரண்டு வழிகள்.
விட்டு கொடுங்கள்.
இல்லை விட்டு விடுங்கள். - புத்தர்

பொன்மொழி
உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால்,
எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.
புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்!

பொன்மொழி
நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை
என்பதை உணர ஆரம்பித்து விட்டால்.
நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.-புத்தர்
புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்!

பொன்மொழி
உங்கள் மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் நீங்களே காரணம்.-புத்தர்
புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்!

பொன்மொழி
அதிகமாக பேசுவதால் மட்டும்
ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்.- புத்தர்

பொன்மொழி
நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும்
துன்பம் தருவதாக இருக்கக்கூடாது.
பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.
புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications