Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
எப்பொழுதும் ஒரு மகிழ்ச்சியான அம்மாவாக இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Happy Moms Habits In Tamil: நாம் எல்லோரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறோம். ஆனால் அது உண்மையில் நடப்பதில்லை. தினசரி வேலைப்பளு மற்றும் குடும்ப பிரச்சினைகள், வாழ்க்கை பிரச்சினைகள் இவற்றிற்கு நடுவில் மகிழ்ச்சியாக இருப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.
அதே மாதிரி தான் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் தாய்மார்களுக்கும் மகிழ்ச்சி என்பது அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. வீட்டு வேலைக்கு மத்தியில், குழந்தை வளர்ப்புக்கு மத்தியில் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்குவது என்பது எளிதான காரியம் கிடையாது.

குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு அவர்களுக்கு பிடித்த விஷயங்களையும் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ நிறைய அம்மாமார்கள் இன்றளவும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு மகிழ்ச்சியான அம்மாவால் மட்டுமே குழந்தைகளையும் வீட்டையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ள முடியும்.
நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது உங்கள் குழந்தைகளை கையாள்வதில் சிக்கல்கள் உண்டாகலாம். கோபம், எரிச்சல் மற்றும் மன அழுத்தத்துடன் செயல்படுவது உங்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
எனவே எப்பொழுதும் நீங்கள் ஒரு மகிழ்ச்சியான அம்மாவாக இருக்க ஆசைப்பட்டால் கீழ்க்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் முகத்திலும் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் முகத்திலும் நீங்கள் மகிழ்ச்சியை காணலாம்.
உங்கள் நாட்களை ஒழுங்குபடுத்துங்கள் :
அன்றைய பணிகளை எப்படி செய்வது எந்தெந்த விஷயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு அந்த நாள் பிஸியான ஒன்றாக இருந்தால் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கான ஓய்வு மற்றும் வேடிக்கை நடவடிக்கைகளை ஒரு போதும் மறக்காதீர்கள்.
அட்டவணைப்படுத்திக் கொள்ளுங்கள் :
நீங்கள் அன்றாடம் செய்ய வேண்டிய விஷயங்களை அட்டவணைபடுத்திக் கொள்வது நல்லது. உங்கள் நேரத்தை சரியாக செயல்படுத்த இந்த அட்டவணை உங்களுக்கு உதவி செய்யும். நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட இது உங்களுக்கு உதவி செய்யும்.
உங்களுக்கென்று நேரத்தை ஒதுக்குங்கள் :
உங்கள் குழந்தைகளுக்கென்று நேரத்தை செலவிடுவது போல உங்களுக்கென்று நேரத்தை செலவிடுங்கள். அந்த நேரத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வரலாம். ஓவியம் தீட்டுவது, பாடுதல், நடனம் ஆடுதல் மற்றும் இசை கேட்பது போன்ற விஷயங்களில் ஈடுபடலாம்.
நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள் :
உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிட மறக்காதீர்கள். அது உங்களை புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது. அவர்களுடன் நீங்கள் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் பெரிய ரிலாக்ஸை பெறுவீர்கள்.
நல்ல தூக்கம் அவசியம் :
நீங்கள் குழந்தை வளர்ப்பில் இருக்கும் போது தூங்குவது கடினமான விஷயம் என்றால் கூட உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி நல்ல தூக்கத்தை மேற்கொள்வது அவசியம். நல்ல தூக்கம் உங்கள் சோர்வை போக்கி உங்களை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. எனவே இரவு நேரங்களில் போதுமான தூக்கத்தை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கவும் உதவி செய்கிறது.
பொழுது போக்கில் ஈடுபடுங்கள் :
பாடுதல், நடனமாடுதல், தோட்ட பராமரிப்பு மற்றும் சமையல் போன்ற பொழுது போக்குகளில் நேரத்தை செலவிடுங்கள். இது உங்கள் நேரத்தை அழகாக்குவதோடு உங்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.
மன ஆரோக்கியம் அவசியம் :
நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் மன ஆரோக்கியத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். மன ஆரோக்கியம் உங்களுக்கு எப்பொழுதும் மகிழ்ச்சியை தரும். உங்களுக்கு பிடித்த புத்தகங்களை படிக்கலாம். நேர்மறை எண்ணங்களுடன் செயல்படும் போது உங்கள் மன ஆரோக்கியம் மேம்பட வாய்ப்பு உள்ளது.
குழந்தைகளுடன் விளையாடுங்கள் :
குழந்தைகளுடன் விளையாடுவது எப்பொழுதும் மகிழ்ச்சியை தரக் கூடிய விஷயமாகும். குழந்தையின் சிரிப்பு ஒன்று போதும் உங்கள் கவலைகளை எல்லாம் போக்கி மன மகிழ்ச்சியை தரும். எனவே குழந்தைகளுடன் உரையாடுங்கள். குழந்தைகளுடன் பேசுங்கள்.
மற்றவருடன் உங்களை ஒரு போதும் ஒப்பிடாதீர்கள் :
உங்களை மற்றவருடன் எப்பொழுதும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அந்த எண்ணம் உங்கள் நேரத்தை வீணடிக்க கூடியது. எனவே மற்றவருடன் ஒப்பிடாமல் உங்களிடம் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உங்களுக்குள்ள தனித் திறமைகளை மட்டும் பாருங்கள். அதுவே உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
சமூக ஊடகங்களை குறைவான அளவில் பயன்படுத்துங்கள் :
சமூக ஊடகங்கள் உண்மையில் உங்கள் நேரத்தை வீணடிப்பது. எனவே அதில் ஈடுபடாமல் உங்களுக்கான நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படுத்துங்கள். பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்றவற்றில் நேரத்தை செலவிடுவதை விட குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது உங்களுக்கு அதிகப்படியான மகிழ்ச்சியை தரும்.



Click it and Unblock the Notifications