Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
திருமணம் என்ற வார்த்தையை பொதுவாக பேசும்போது அத்துடன் குருபலன் என்பதும் ஆன்மீகத்திலும் ஜாதகத்திலும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தோன்றும் முதல் வார்த்தையாக இருக்கிறது. பொதுவாக ஜாதக ரீதியாக குரு பலன் வந்தால் திருமணம் நடந்து விடும் என்பது நம்பிக்கை. குரு பலன் என்பது ஜாதகத்திற்கு அல்லது ராசிக்கேற்ப குறிப்பிட்ட ராசியில் குரு பெயர்ச்சியாவதை குறிக்கிறது. தற்போது மே மாதம் ஒன்றாம் தேதியன்று குரு பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது.
இந்த குருபெயர்ச்சியால் யாருக்கு திருமணம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்துக் கொள்வோம். உதாரணமாக ஜாதகப்படி லக்னம், ராசி, இரண்டாவது வீடு, ஏழாவது வீடு ஆகிய வீடுகளில் குரு பெயர்ச்சியானால் குரு பலன் வந்துவிட்டதாக பொருள் கொள்ளலாம். எனவே, இதுபோன்ற அமைப்பு இருந்தால், திருமணம் நடக்கும் என்று பொதுவான பலன் ஆகும்.

குரு பலன் என்பது கோச்சாரப்படி உங்கள் ஜாதகத்திற்கு அல்லது ராசிக்கேற்ப குறிப்பிட்ட ராசியில் குரு பெயர்ச்சியாவது ஆகும். உதாரணமாக உங்கள் ஜாதகப்படி உங்கள் லக்னம், ராசி, இரண்டாவது வீடு, ஏழாவது வீடு ஆகிய வீடுகளில் குரு பெயர்ச்சியானால் உங்களுக்கு குரு பலன் வந்திருக்கிறது. அந்தப் பெயர்ச்சி காலத்தில் திருமணம் நடக்கும் என்று பொதுவாகக் கூறுவார்கள். ஆனால் குரு பலன் வரும் அனைவருக்குமே அந்த கால கட்டத்தில் திருமணம் நடந்து விடுமா என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி
சனிக்கு அடுத்தபடியாக மெதுவாக நகரும் இரண்டாவது கிரகம் குரு தான், ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாற 13 மாதங்கள் எடுத்துக் கொள்ளும் குரு மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு பயணிக்கிறார். மே 1, 2024 அன்று பிற்பகல் 14:29 மணிக்கு ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான், மே 3, 2024 அன்று இரவு 22:08 மணிக்கு, எரிப்பு நிலைக்கு செல்வார். ஏழாவது வீடு என்பது களத்திர ஸ்தானம் ஆகும். குரு நேரடி பார்வையாக ஏழாவது வீட்டைப் பார்க்கும் பொழுது அது சுப பார்வையாக திருமணம் கைகூடும்.
அதேபோல கும்பராசியை சேர்ந்தவர்களுக்கு இரண்டாவது வீடு மீனம் ஆகும். இரண்டாவது வீடு என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் அடிப்படையான பல விஷயங்களைக் குறிக்கும். அதில் குடும்பம் மற்றும் குழந்தைகள் ஆகியவையும் அடங்கும். எனவே இரண்டாவது வீட்டில் குரு ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது கும்ப ராசியினருக்கு திருமணம் கை கூடி வரும் வாய்ப்பை அதிகரிக்கும். இதே போல, ஜாதகத்தின் லக்ன அடிப்படையில் பலன்கள் அமையும்.
திருமணம் என்று வரும் பொழுது ஏன் குரு முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறது
ஜாதக ரீதியாக ஒரு நபரின் வாழ்வில் ஒவ்வொரு காரகத்துக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கிறது. உதாரணமாக சந்திரன் என்பது மனம். அந்த வகையில் திருமணத்திற்கு காரகனாக குரு பகவான் விளங்குகிறார். எனவே ஒரு நபரின் ஜாதகத்தில் குரு எந்த இடத்தில் இருக்கிறார் மற்றும் கோச்சார அடிப்படையில் எந்த கட்டத்தில் பெயர்ச்சி ஆகிறார் என்பதன் அடிப்படையில் அவரின் திருமணம் எப்போது நடக்கும் என்பதை கணிக்கலாம்.
குருபலன் மட்டும் போதுமா?
குரு பலன் வந்தால் திருமணம் நடந்துவிடும் என்பதை உறுதியாக கூற முடியாது. பொதுவாகவே ஒரு ஜாதகத்தை கணிக்கும் பொழுது அதில் லக்னத்தின் மற்றும் ராசியின் அடிப்படையில் வரும் பலன்களை 50% வரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நடப்பு கோச்சாரப்படி எந்தெந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகு முக்கியமாக ஜாதகருக்கு என்ன தசா புத்தி நடக்கிறது என்பதைத் தான் பார்க்க வேண்டும். தசா புத்தி அடிப்படையில் தான் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகள் ஏற்படுகிறது.
பிறப்பு ஜாதகத்தில் குரு நன்றாக இருந்தாலோ அல்லது மறைவு ஸ்தானத்திலோ அல்லது நீச்சமாக இருந்தாலும், ஒரு நபருக்கு தசாபுக்தி சாதகமாக அமைந்து விட்டால், திருமணம் விரைவில் நடந்துவிடும்.
உண்மையில் குரு பலன் என்பதை விட ஒரு நபரின் ஜாதகத்தை, பிறப்பு ஜாதகத்தில் குரு இருக்கும் இடம், களத்திர ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள், மற்றும் தசா புத்தி தான் தீர்மானிக்கின்றன. உதாரணமாக ஒரு ஜாதகருக்கு ஏழாமிடத்தில் ராகு இருக்கும் பொழுது அந்த நபருக்கு ராகு தசை வந்தால் உடனே திருமணம் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல குரு கெட்டிருக்கும் ஜாதகத்தில் சுக்கிரன் லக்னத்திலோ அல்லது ஆட்சி உச்சம் பெற்றோ அல்லது ஏழாம் வீட்டில் புதன் இருந்தாலும் குரு பலன் இல்லாமலேயே இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடும்.
எனவே குரு பலன் வந்தால் திருமணம் நடக்கும் என்பது அனைவருக்கும் பொருந்தாது. ஒரு நபரின் ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருக்கிறதா என்பதன் அடிப்படையில்தான் திருமணம் நடக்கும். உதாரணமாக இந்த ஆண்டு மீன ராசி மற்றும் கன்னி ராசி இரண்டுக்குமே குரு பலன் வலுவாக இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு ராசிக்காரர்களின் தனி ஜாதகப்படி ஆறாம் அதிபதியின் தசை அல்லது எட்டாம் அதிபதி தசை நடக்கும் போது திருமணம் கைகூடாது.
குருவால் ஏற்படும் பாக்கியங்கள்
* பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள், குரு பலத்தால் பெறக்கூடியதாகும். ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால், அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.
* ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும், அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது எனப் பொருள்.
* அரிய சாதனைகளைச் செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.
மற்ற கிரகங்களைப் போல அல்லாமல் குருவுக்கு நான்கு விதமான பார்வைகள் உள்ளன. குரு எந்த வீட்டில் இருந்தாலும், அமர்ந்திருக்கும் ராசியிலிருந்து 2, 5, 7, மற்றும் 9 ஆம் வீடுகள் என்று நான்கு வீடுகளை குரு பார்க்கிறார். எனவே குரு எங்க அமர்ந்திருந்தாலும் உங்கள் ஜாதகப்படி ஏழாவது வீட்டை குரு பார்க்கும் போது 23 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதுக்குள் திருமணம் நடைபெற்று விடும்.
அது மட்டுமின்றி குரு லக்னத்தில் இருந்தால் நேரடியாக ஏழாம் வீட்டை பார்ப்பார் அப்பொழுதும் விரைவில் திருமணம் நடக்கும் அல்லது ஏழாம் வீட்டு அதிபதியாக குரு ஆட்சியோ உச்சமோ பெற்று அமர்ந்திருந்தால் அப்பொழுதும் திருமணம் விரைவில் நடைபெறும். அடுத்ததாக சந்திரன். மற்ற கிரகங்களைப் போலவே, சந்திரன் ஏழாம் வீட்டில் இருந்தாலோ அல்லது ஏழாம் வீட்டை பார்த்தாலும் இளம் வயதில் திருமணம் நடைபெறும்.
மேற்குரிய கிரகங்களும் ஜாதகத்தில் சுப பார்வை பெற வேண்டும். பாவ கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பாவ கிரகங்களின் பார்வை ஏழாம் வீட்டை பாதித்திருந்தாலோ மேற்கூறியது போல இளம் வயது திருமணம் நடக்காது. உதாரணமாக லக்னத்தில் சுக்கிரன் இருந்து ஏழாம் வீட்டில் சனி இருக்கும் போது சனியால் திருமணம் தாமதமாகும்.



Click it and Unblock the Notifications











