Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
குரு பூர்ணிமா 2024 ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் முக்கியத்துவம் என்ன?
ஆடி மாதத்தின் பெளர்ணமி நாளைதான் குரு பூர்ணிமா என்கிறோம்.. பெளர்ணமி என்பது முழு நிலவுதாள்.. இது அனைத்து மதங்களிலும் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்து மதத்தில் புனித நாளாகவும் வழிபாட்டு நாளாகவும் இந்த நாள் கருதப்படுகிறது.
அதிலும் ஆஷாட மாதம் எனப்படும் ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமி தினம் தனித்துவமானது. இந்த ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமி குருவிற்குரிய நாளாக கருதப்படுகிறது. த்ரிக் பஞ்சாங்கத்தின் படி, குரு பூர்ணிமா ஆஷாட மாதத்தில் பூர்ணிமா திதியில் (பௌர்ணமி தினம்) அனுசரிக்கப்படுகிறது.

குரு பூர்ணிமா எப்போது?
இந்த ஆண்டு குரு பூர்ணிமா ஜூலை 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஜூலை 20ம் தேதியான இன்று மாலை 06.10 மணி முதல், ஜூலை 21ம் தேதியான நாளை மாலை 04.51 மணி வரை பெளர்ணமி திதி உள்ளது. அன்றைய தினம் உத்திராடம் நட்சத்திரமும் இணைந்து வருவது இன்னும் சிறப்பானதாகும். உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன் ஆவார்.
குரு பூர்ணிமா 2024 முக்கியத்துவம்
குரு பூர்ணிமா நாளில் குருமார்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களை நினைவு கூர்ந்து, அவர்களை போற்றி வழிபடும் நாளாக குறிப்பிடப்படுகிறது. குரு என்பவர் சரியான பாதையைக் காட்டுபவர். தனது படிப்பினைகளாலும் ஞானத்தாலும் உலகை தொடர்ந்து அறிவூட்டுபவர். அவர் நீதியின் பாதையைப் பின்பற்ற ஊக்குவிக்கிறார்.. எண்ணங்களின் யதார்த்தத்தை நமக்குக் கற்பிக்கிறார். அவருடைய அறிவுறுத்தல் இல்லாமல், நம் வழியில் வரும் இருளை அகற்றுவது கடினம்..
குருதான் மனிதநேயத்தைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறார். சில நேரங்களில் அவர் ஆன்மீக குருவாக இருக்கிறார், மிக ஆழமான ஆன்மீக புரிதலுடன் நம் வாழ்க்கையை ஒளிரச் செய்கிறார். நல்ல வாழ்க்கை வாழ ஒரு குரு தேவை. பெரும்பாலான நேரங்களில், சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதில் நமக்கு சற்று குழப்பம் இருக்கும்.. எனவே உங்கள் தாய் மற்றும் தந்தையிடமிருந்து வழிகாட்டுதலையும் ஆசீர்வாதத்தையும் பெறுங்கள், அவர்கள் முதல் குருக்களாக இருப்பார்கள்...
குரு பூர்ணிமா 2024 வரலாறு
இந்து புராணங்களின்படி, வேத வியாசரின் பிறந்த நாளையே நாம் குரு பூர்ணிமாவாக கொண்டாடுகிறோம்.. இந்துக்களின் மிக முக்கியமான, புனிதமான நூல்களான மகாபாரத காவியத்தையும், பாகவத புராணத்தையும் எழுதியவர் வேத வியாசர்தான். வாய்மொழியாக மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்த வேதங்களை, எழுத்து வடிவத்திற்கு முதன் முதலில் கொண்டு வந்தவர் வேத வியாசர்தான்.
அதனால் தான் இவரை குருவிற்கு எல்லாம் மேலான சிறப்பான குருவாக இந்து மதம் போற்றுகின்றனது. இவரே குரு-சிஷ்ய கலாச்சாரத்தின் அடையாளம் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இவரது பிறந்த நாளான ஆஷாட மாதத்தில் வரும் பெளர்ணமியை வியாச பூர்ணிமா என்றும் அழைப்பதுண்டு.
குரு பூர்ணிமா 2024 ஐ எப்படி கொண்டாடுவது?
குரு பூர்ணிமாவின் இந்த புனிதமான நாளில், பக்தர்கள் தங்கள் குருவிடம் பிரார்த்தனை செய்து, குரு மந்திரங்களை உச்சரித்து, அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தீபத்தை ஏற்றி, ஆசீர்வாதங்களைப் பெறுவது நல்லது..
குரு பூர்ணிமா அன்று என்ன செய்ய வேண்டும்?
அதிகாலையில் எழுந்து உங்கள் தந்தை, தாய் மற்றும் சகோதரர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெறுங்கள். குளித்த பிறகு, சூரியனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அறிவிற்கும் ஞானத்திற்கும் கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானை வணங்குங்கள். உங்களுக்கு ஆன்மிக குரு இருந்தால், உங்கள் நன்றியைத் தெரிவிக்கவும்..
அவருடைய பாதங்களைத் தொட்டு ஆசிகளைப் பெறவும் நீங்கள் அவரைச் சந்திக்க வேண்டும். குரு பூர்ணிமாவின் இந்த புனித நாளில், குருக்களுக்கு ஆடைகள், காலணிகள், பழங்கள் மற்றும் தக்ஷிணை வழங்குங்கள். உங்கள் தாய் தந்தைக்கும் இனிப்பு கொடுங்கள். அன்று முழுவதும் குரு மந்திரத்தை சொல்லுங்கள்.



Click it and Unblock the Notifications