Latest Updates
-
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்..
12 ஆண்டுகளுக்கு பின் ரிஷபம் செல்லும் குரு பகவான்: மே முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Guru Peyarchi 2024: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இவர் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் வரை பயணிப்பார். தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் குரு பகவான் மே மாதம் 01 ஆம் தேதி சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை இருப்பார். ரிஷப ராசிக்கு குரு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது.

குறிப்பாக குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மேலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும். இப்போது ரிஷப ராசிக்கு செல்லும் குருவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலை மேம்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். தாம்பத்ய வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கனவுகள் நனவாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தால், நல்ல வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நட்லல வரன் கிடைக்கும். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலனாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வெற்றி கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவடையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். திடீரென்று பணம் தேடி வரும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் சற்று கவனம் செலுத்தினால், பதவி உயர்வுடன், சம்பள உயர்வையும் பெறலாம். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications