Latest Updates
-
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
Guru Peyarchi 2024: வருகிற குரு பெயர்ச்சியால் மே முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
Guru Peyarchi 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகள் மற்றும் இயக்கங்களானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்களில் குரு பகவான் மிகவும் மங்களகரமான மற்றும் முக்கியமான கிரகமாகும்.
இந்த குரு ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இதனால் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இந்த குரு தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார்.

தற்போது குரு பகவான் செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் தேதி குரு பகவான் சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். ரிஷப ராசிக்கு செல்லும் குருவால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது. இப்போது 2024 குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
குரு பெயர்ச்சியின் போது மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல செய்திகளைப் பெறலாம். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் புதிய சாதனைகளைப் படைப்பார்கள். வியாபாரிகள் மே மாதம் முதலாக நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மே மாதம் முதலாக மிகவும் சாதகமான காலமாக இருக்கும். செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதுவும் பதவி உயர்வுடன், சம்பள உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் சற்று ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மே மாதம் முதலாக நன்றாக இருக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த போடும் திட்டங்கள் மே மாதத்திற்கு பின் நல்ல பலனைத் தரும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குருவின் அருளால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications