விநாயகருக்கு இந்த பொருட்களை வைத்து கும்பிட்டா உங்க வறுமை எப்போதும் உங்களைவிட்டு போகாதாம்...!

Ganesh Chaturthi 2023: இந்து மதத்தின் மிக முக்கியமான கடவுள்களில் ஒருவர் விநாயகர். விநாயகரை வழிபட்டு தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. அதனால்தான் விநாயகர் 'முழுமுதற் கடவுள்' என்று அழைக்கப்படுகிறார்.

எந்தவொரு சுப காரியமும் விநாயகரை வழிபடுவதில் இருந்து தொடங்குகிறது. பொதுவாக வார நாட்களில் புதன் கிழமை விநாயகருக்கான நாளாக வழிபடப்படுகிறது.

Ganesh Chaturthi 2023: Never Offer These Things to Lord Ganesha in Tamil

இந்தியாவின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி இந்த வருடம் செப்டம்பர் 18 ஆம் தேதி வருகிறது. இந்தியாவே விநாயகரைக் கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறது. இந்த நாளில் விநாயகருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபடுவது எவ்வளவு முக்கியமானதோ, அதேயளவிற்கு அவருக்கு பிடிக்காத பொருட்களை விலக்கி வைக்க வேண்டும்.

இந்த பொருட்களை வைத்து வழிபடுவதால் நீங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்கலாம். இந்த பதிவில் விநாயகருக்கு பிடிக்காத பொருட்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

உடைந்த அரிசி

விநாயகரை வழிபடும் போது அக்ஷதம் அதாவது அரிசி பிரசாதமாக வழங்கப்படுகிறது. எனவே, அக்ஷதை வழங்கும்போது, அதை உடைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். விநாயகருக்கு அர்ச்சனை செய்வதற்கு முன், சிறிது ஈரமான அக்ஷத்தை சமர்பிக்கவும்.

ஏனெனில் விநாயகப் பெருமானின் ஒரு தந்தம் உடைந்துள்ளது. எனவே அவர்கள் ஈரமான அரிசியை எடுத்துக்கொள்வது எளிது. கணபதிக்கு அக்ஷதை சமர்ப்பணம் செய்வதன் மூலம் மனிதனின் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

துளசி

விநாயகப் பெருமானின் வழிபாட்டில் துளசி இலைகளைப் பயன்படுத்தக் கூடாது. புராணத்தின் படி, விநாயகர் துளசியின் திருமண திட்டத்தை நிராகரித்தார். திருமண முன்மொழிவை நிராகரித்த துளசி கோபமடைந்து, விநாயகருக்கு ஒன்றல்ல இரண்டு திருமணங்கள் செய்து கொள்ள சபித்தார்.

அதற்கு எதிராக விநாயகரும் துளசியை நீ அசுரனை மணந்து கொள்வாய் என்று சபித்தார். அதனால் விநாயகப் பெருமானுக்கு துளசி வைத்து வழிபாடு செய்வது தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.

கேதகி மலர்கள்

விநாயகருக்கு வெள்ளை பூக்கள் அல்லது கேதகி பூக்களை ஒருபோதும் வழங்கிவிடாதீர்கள். புராணங்களின் படி, சிவபெருமானுக்கு கேதகி மலர்கள் பிடிக்காது. இதனால் விநாயகப் பெருமானுக்கும் கேதகி மலர்களை வைத்து அர்ச்சனை செய்யக்கூடாது என்பது நம்பிக்கை.

காய்ந்த மலர்கள்

விநாயகர் வழிபாட்டில் உலர்ந்த மற்றும் காய்ந்த பூக்களை ஒருபோதும் வழங்கக்கூடாது. உலர்ந்த பூக்களைப் பயன்படுத்துவது அசுபமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் வறுமை ஏற்படும். எனவே வழிபாட்டின் போது புதிய மலர்களை மட்டும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

வெள்ளை பொருட்கள்

விநாயகப் பெருமானுக்கு வெண்ணிற ஆடை, வெள்ளை நூல், வெள்ளைச் சந்தனம் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யக் கூடாது. புராணத்தின் படி, சந்திரன் விநாயகரை கேலி செய்ததால், விநாயகர் சந்திரனை சபித்தார். சந்திரனுடன் இணைந்திருப்பதால் வெள்ளை நிற பூக்கள் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்படுவதில்லை.

Story first published: Tuesday, September 12, 2023, 19:20 [IST]
Desktop Bottom Promotion