Latest Updates
-
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்! -
உங்களுக்கு குடல் புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 7 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்..! -
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது! -
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?
விநாயகர் சதுர்த்தி அன்று உங்க ராசிப்படி விநாயகரை வழிபடுங்க.. ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்!
Ganesh Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தியை பிள்ளையார் சதுர்த்தி என்றும் அழைப்பதுண்டு. விநாயக பெருமான் பூமியில் அவதரித்த நாள், அதாவது அவர் பிறந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் விநாயகருக்கு பிடித்த பலவிதமான உணவுப் பொருட்கள் படைத்து பூஜை செய்து வழிபடப்படும். மேலும் சில பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியானது 10 நாட்கள் வரை கொண்டாடுவதுண்டு. சொல்லப்போனால் இது இந்துக்களில் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்று.

முதன்மை கடவுளாக கருதப்படும் விநாயகர் செழிப்பு, நேர்மறை மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாக கருதப்படுகிறார். எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன் விநாயகரை வழிபட்டால், அந்த காரியம் தடையின்றி வெற்றிகரமாக முடிக்கப்படும் என்பது நம்பிக்கை. அதுவும் விநாயகரின் அருளைப் பெற்றிருப்பவர்கள் எதிலும் தோல்வி அடையமாட்டார்கள்.
நீங்களும் விநாயகரின் பரிபூர்ண அருளைப் பெற விரும்பினால், விநாயகர் சதுர்த்தி அன்று உங்கள் ராசிக்கேற்ற மந்திரம் மற்றும் உணவுப் பொருட்களை படைத்து வழிபடுங்கள். கீழே விநாயகரின் அருளைப் பெற ஒவ்வொரு ராசிக்காரரும் விநாயகருக்கு எதை படைக்க வேண்டும் மற்றும் எந்த மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஓம் விக்னேஷ்வராய நமஹ என்னும் விநாயகர் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதோடு இவர்கள் மாதுளை அல்லது பேரிச்சம் பழத்தாலான லட்டுக்களை செய்து படைத்து, சிவப்பு ரோஜாவை அர்ப்பணித்து வழிபடுவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஓம் சிவபுத்ராய நமஹ என்ற விநாயகர் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மேலும் விநாயகருக்கு பாசிப்பருப்பாலான லட்டு மற்றும் பச்சை ஏலக்காயைப் படைத்து வழிபட வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் ஓம் லம்போதராய நமஹ என்னும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். அதோடு, அரிசி புட்டு மற்றும் வெள்ளை ரோஜாவைப் படைத்து விநாயகரை வழிபட வேண்டும்.
கடகம்
கடக ராசியைச் சேர்ந்தவர்கள் ஓம் கௌரிபுத்ராய நமஹ என்ற விநாயகர் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதோடு, இந்த ராசிக்காரர்கள் வெள்ளை நிற பூக்களை விநாயகருக்கு படைத்து, அரிசி கொழுக்கட்டையை செய்து படைத்து வழிபடுவது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஓம் பக்தவாசாய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை விநாயகர் சதுர்த்தி நாளில் சொல்ல வேண்டும். மேலும் பேரிச்சம் பழம், வெல்லம் மற்றும் செவ்வரளி பூக்களைப் படைத்து வழிபடுவது நல்லது.
கன்னி
கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் ஓம் லம்போதராய நமஹ என்ற விநாயகர் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். அதோடு பாசிப்பருப்பு லட்டு மற்றும் உலர் திராட்சையை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். இதனால் விநாயகரின் பரிபூர்ண அருளைப் பெறலாம்.
துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் ஓம் ஸ்வர்வ்கல்யாண்ஹேதவே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வாழைப்பழம், வெள்ளை பூக்கள் மற்றும் வாசனை திரவியங்களைப் படைத்து வழிபட, விநாயகரின் ஆசியைப் பெறலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஓம் ஏகாந்தாய நமஹ என்ற கணேச மந்திரத்தை 108 முறை விநாயகர் சதுர்த்தி அன்று பாராயணம் செய்ய வேண்டும். அதோடு மாதுளை மற்றும் பேரிச்சம் பழத்தாலான லட்டுக்கள் மற்றும் சிவப்பு நிற ரோஜாக்களைப் படைத்து வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் ஓம் உமாசுதாய நமஹ என்ற விநாயகர் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். மேலும் மஞ்சள் நிற இனிப்புக்கள் மற்றும் வாழைப்பழத்தை விநாயகருக்கு படைத்து வணங்க வேண்டும்.
மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்கள் ஓம் விக்னஹராய நமஹ என்னும் கணேச மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதோடு விநாயகருக்கு எள்ளு லட்டுவை செய்து படைத்து வழிபட்டால், விநாயகரின் ஆசியைப் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஓம் ஸுக்ஹர்தாயை நமஹ என்ற விநாயகர் மந்திரத்தை 108 முறை கூறி, விநாயகருக்கு பால்கோவாவை படைத்து, விநாயகருக்கு பிடித்த அருகம்புல்லை வழங்கி வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் ஓம் பார்வதிபுத்ராய நமஹ என்ற மந்திரத்தை விநாயகர் சதுர்த்தி நாளில் 108 முறை கூறி, கடலை மாவு லட்டு மற்றும் பாதாமை படைத்து வழிபட்டால், விநாயகரின் அருளைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications