Latest Updates
-
சுக்கிரன் ஜூலை 16-ல் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
இந்தியாவின் 'மௌன கிராமம்' என்று அழைக்கப்படும் வினோத கிராமம் எது தெரியுமா? இந்த கிராம மக்கள் ரொம்ப பாவம் -
மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி கிரேவி செய்யுங்க.. சிக்கன் கிரேவி மாதிரி செமயா இருக்கும்.. -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா இந்த நார்த் இந்தியன் தம் ஆலுவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
டல்லான முகத்தை பொலிவாக்கணுமா? அப்ப பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
இந்த 5 சின்னங்களில் ஒன்று கையில் இருந்தாலும் அவர்கள் அரசாள பிறந்தவர்களாக இருப்பார்களாம் - உங்க கையில் இருக்கா? -
புதன் மிதுன ராசியில் வக்ரமடைவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
இதுல உங்கள் விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்.. -
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
உலகம் இந்த 4 வழிகளில் தான் அழியப் போகிறதாம்- கணித்து கூறிய நிபுணர்கள்.. ஷாக் ஆகாம படிங்க...
பொதுவாக மரணத்தைப் பற்றிய பயம் அனைவருக்குமே இருக்கும். ஒருவருக்கு எப்போது மரணம் ஏற்படும் என்பது முன்பே தெரிந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது. எப்போதும் பயத்துடனேயே வாழ்க்கையை கழிக்க வேண்டியிருக்கும். அதுவே உலகம் அழியப் போகும் நாள் தெரிந்தால் எப்படி இருக்கும்? இது அதைவிட கொடுமையாக இருக்கும் தானே!
இதுவரை உலகம் அழியப் போகிறது என்று மாயன் காலெண்டரில் கணித்து கூறப்பட்ட பல ஆண்டுகளை கடந்து வந்துவிட்டோம். இருப்பினும், மனிதன் பூமியில் உயிர் வாழ்வதற்கு கடுமையான ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்கள் இன்னும் உள்ளன என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றன. இதுக்குறித்த ஃபோர்ப்ஸ் அறிக்கை ஒன்றில், பூமியின் முடிவுக்கான நான்கு சாத்தியமான வழிகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த 4 வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பூமி சூரியனுக்குள் மூழ்கிவிடும்
வானியல் இணையதளம் மற்றும் பிபிசி சயின்ஸ் ஃபோகஸ் உலகம் முடிவுக்கு வருவதற்கு சாத்தியமான பல்வேறு காட்சிகளைகளை வழங்கியுள்ளன. அதில் ஒன்று பூமி சூரியனுக்குள் மூழ்குவது. இதன் படி, சூரியன் ஒரு கருந்துளையாக (Black Hole) மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படி மாறும் போது பூமி சூரியனுக்குள் மூழ்கி, இறுதியில் பூமியில் உயிர்கள் எதுவும் உயிர் வாழ முடியாத வகையில் முடிவுக்கு வரும்.
2. பெருங்கடல்களின் கொதிநிலை
பூமியானது அதன் அளவு, தூரம், நிறை மற்றும் வளிமண்டலத்தின் காரணமாக, உயிர்களை ஆதரித்து வருகிறது. மேலும் இதன் அமைப்பால் தான் பல பில்லியன் ஆண்டுகளாக பூமியில் உயிர் வாழ்வதற்கான நீர் போதுமான அளவு இருக்கிறது. ஆனால் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அணுக்கரு இணைவால் மையப்பகுதியில் ஏற்படும் ஹீலியம் உருவாக்கத்தால், பூமியில் உள்ள பெருங்கடல்களின் கொதிநிலை அதிகரித்து, எதிர்காலத்தில் பூமியின் நிலைத்தன்மையை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு பில்லியன் ஆண்டுகளில் சூரியனின் அதிகரித்துவரும் வெப்பமானது நமது பெருங்கடலை கொதிக்க வைத்து, பூமியில் பெரிய வெப்பநிலை உயர்வை ஏற்படுத்தும்.
3. ஒரு பெரிய விண்கல் பூமியைத் தாக்கும்
Astronomy.com இன் சமீபத்திய அறிக்கையின் படி, 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மெக்சிகோவில் ஒரு பெரிய நகர அளவிலான விண்கல் பூமியைத் தாக்கியது. அப்படி தாக்கிய போது பூமியில் ஏராளமான உயிர் பழியாகின. இப்படிப்பட்ட விண்கல் தாக்குதல் ஒவ்வொரு 100 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுவதாக நாசா சுட்டிக் காட்டுகிறது. அதிர்ஷ்டவசமாக, அடுத்த தாக்குதல் ஏற்படுவதற்குள், மனிதகுலம் அதன் சொந்த சவால்களை எதிர்கொள்ளலாம், நேரடி தாக்குதல்களால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்கலாம்.
4. பூமி ஒரு தரிசு பாறையாக மாறும்
5 முதல் 7 பில்லியன் ஆண்டுகளில் சூரியனில் ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்துவிடுவதால், பூமியின் எதிர்காலம் மோசமாகக்கூடும். இப்படி ஹைட்ரஜன் குறையும் போது சூரியன் ஒரு சிவப்பு நிற ராட்சத கிரகமாக மாறும். அதுவும் கிட்டத்தட்ட 100 மடங்கு பெரியதாகவும், மிகவும் பிரகாசமாகவும் மாறும். இவ்வாறு சூரியன் மாறும் போது பூமி வெறுமையாக்கப்பட்டு, ஒரு தரிசு பாறையாக மாறி சூரியனிடமிருந்து தொலைவில் தள்ளிப்போகும். மேலும் அருகில் இருந்த புதன், சுக்கிரன் போன்ற கிரகங்கள் சூரியனால் விழுங்கப்படும்.



Click it and Unblock the Notifications