Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
500 ஆண்டுகளுக்கு பின் தீபாவளியன்று உருவாகும் 4 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Diwali 2023: இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகையானது நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டில் வரும் தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் தீபாவளி நாளில் 4 ராஜயோகங்கள் உருவாகின்றன. அதுவும் இது 500 ஆண்டுகளுக்கு பிறகு நிகழவுள்ளது.
அதில் சனி பகவானால் சச ராஜயோகமும், அதோடு ஆயுஷ்மான் யோகமும் உருவாகிறது. அதே சமயம் செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கையால் ஆதித்ய மங்கள யோகம் உருவாகிறது. அதைத் தொடர்ந்து சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும் உருவாகிறது.

இப்படி தீபாவளி நாளில் 4 ராஜயோகங்கள் உருவாவதால், அதன் விளைவாக 3 ராசிக்காரர்கள் மிகவும் அற்புதமான பலனைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் பரிபூர்ண அருளைப் பெற்று, செல்வ மழையில் நனையவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
தீபாவளி அன்று உருவாகும் 4 ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்கள் திடீர் பணத்தைப் பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும்.
நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
மேஷம்
தீபாவளி நாளில் உருவாகும் 4 ராஜயோகங்களால் மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். சனி பகவானின் அருளால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவால் எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான பலனைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரியில் முதலீடு செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.
மிதுனம்
தீபாவளி நாளில் உருவாகும் 4 ராஜயோகங்களால் மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும் மற்றும் இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications