Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
சிரியாவில் உள்ள மிகவும் வேடிக்கையான சில மூடநம்பிக்கைகள்! - இதுல 6 ஆவது தான் வேற லெவல்!
Superstitions In Syria: ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டு மக்களின் நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப மூடநம்பிக்கைகள் இருக்கும். மூடநம்பிக்கைகள் என்பவை எவ்வித சம்பந்தமும் இல்லாத விஷயங்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தி, அதை ஒருவித நம்பிக்கையுடன் வழக்கமாக பின்பற்றும் ஒரு நடைமுறையாகும். இந்தியாவில் கூட ஏராளமான மூடநம்பிக்கைகள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதேப் போல் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்களின் மூடநம்பிக்கைகள் வேறுபட்டிருக்கும்.
வரலாறு மற்றும் பாரம்பரியங்கள் நிறைந்த நாடான சிரியாவில் நிறைய மூடநம்பிக்கைகள் உள்ளன. அதுவும் சிரியாவில் உள்ள மூடநம்பிக்கைகள் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கும், பாரம்பரிய நம்பிக்கைகளின் நீடித்த சக்திக்கும் ஒரு சான்றாகும்.

இந்த மூடநம்பிக்கைகளை வெளியாட்கள் காணும் போது அது ஒரு பகுத்தறிவற்றதாக தோன்றலாம். ஆனால் அவை சிரிய மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் தலைமுறை தலைமுறைகளாக பின்பற்றப்பட்டும் வருகின்றன. இப்போது சிரியாவில் உள்ள சில வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான மூடநம்பிக்கைகளைக் காண்போம்.
1. ஆமை மற்றும் நல்ல அதிர்ஷ்டம்
ஆமையானது ஒரு நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாகும். இப்படியான நம்பிக்கை ஆமையின் நீண்ட ஆயுளில் இருந்து வந்தது. இதைக் கொண்டே சிரிய மக்கள் தங்களின் அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும், நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும் தங்கள் வீடுகளில் ஆமை சிலைகள் அல்லது படங்களை வைத்துள்ளார்கள்.
2. காபி வாசிப்பு
சிரியாவில் உள்ள மற்றொரு வேடிக்கையான ஒரு மூடநம்பிக்கை தான் ஒரு கப் காபியைக் கொண்டு ஒருவரது அதிர்ஷ்டத்தைப் பற்றி கூறும் முறை. இதில் ஃபில்டர் காபியைக் குடித்த பின், அந்த காபி கப்பை தலைகீழாக கவிழ்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அந்த கப்பை திருப்பி பார்க்கும் போது, அதில் உள்ள சின்னங்களைள் அல்லது குறியீடுகளைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம் மற்றும் விதியைப் பற்றி, வல்லுநர் விளக்குவாராம். எப்படியெல்லாம் அதிர்ஷ்டத்தை பாக்குறாங்க-ன்னு பாருங்க...
3. வலது காலால் வீட்டிற்குள் நுழைவது
இந்த மூடநம்பிக்கை பல தலைமுறைகளாக சிரியாவில் மட்டுமின்றி, நம் இந்தியாவிலும் தான் உள்ளது. அது என்னவெனில் வீட்டிற்குள் நுழையும் போது வலது காலால் நுழைவதாகும். இப்படி நுழைவதால் அது நல்ல அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆறறலையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
4. காதுகளில் சப்தம் கேட்பது
ஒருவரது காதுகளில் சப்தம் கேட்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. அதுவும் எந்த காதில் சப்தம் கேட்கிறதோ, அதைப் பொறுத்து பலன் வேறுபடும். அதில் வலது காதில் சப்தம் கேட்டால், யாரோ உங்களைப் பற்றி நன்றாக பேசுகிறார் என்று அர்த்த்ம். அதுவே இடது காதில் சப்தம் கேட்டால், உங்களைப் பற்றி யாரோ தவறாக பேசுகிறார்கள் என்று அர்த்தமாம். ஆனால் காது கேளாமை, காதுகளில் தொற்று போன்றவற்றால் காதுகளில் சப்தம் கேட்கக்கூடும் என நவீன மருத்துவம் கூறுகிறது.
5. கத்தரிக்கோல் மற்றும் துரதிர்ஷ்டம்
சிரியாவில் உள்ள மூடநம்பிக்கைகளுள் மற்றொன்று கத்தரிக்கோலை ஒருவர் திறந்து வைத்தால், அது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, துரதிர்ஷ்டத்தைத் தருமாம். இதனால் சிரியாவில் மக்கள் கத்தரிக்கோலை தெரியாமல் கூட திறந்து வைக்கமாட்டாராம்.
6. கையை அரித்தால் பணம் வரும்
உள்ளங்கை அரித்தால் பணக்காரர் ஆகலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? சிரிய மக்கள் கை அரிப்பை நிதி ஆதாயம் அல்லது இழப்புடன் தொடர்புபடுத்தி ஒரு நம்பிக்கையை கொண்டுள்ளனர். அது அரிக்கும் கையைப் பொறுத்து பலன் மாறுபடும். அதாலது வலது கை அரித்தால், விரைவில் பணம் தேடி வரும். அதுவே இடது கை அரித்தால், நிதி இழப்பு ஏற்படுமாம்.
7. காபி கொட்டுவது நல்லது
சிரிய மூடநம்பிக்கைகளின் படி, ஒருவர் எதிர்பாராதவிதமாக காபியை கொட்டினால், அது எதிர்பாராத அதிர்ஷ்டத்தை குறிக்கிறதாம். அதேப் போல் வீட்டின் நுழைவாயிலிலும், வீட்டின் மூலையிலும் உப்பை தூவுவது துரதிர்ஷ்டத்தைத் தடுத்து, அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதாக நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications