Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
அம்பானியும், அவங்க வீட்டுல இருக்குறவங்களும் என்ன படிச்சுருக்காங்க தெரியுமா? இதுல 2 மருமகளுங்க தான் வேற லெவல்!
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி சமீபத்தில் தனது இளைய மகனுக்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமணம் உலகமே வியந்து பார்க்கும் வகையில் மிகவும் கோலாகலமாக ஒரு திருவிழா போன்று நடைபெற்றது. அம்பானி வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அல்லது எந்த வணிக முயற்சியாக இருந்தாலும், அது தலைப்புச் செய்திகளில் பல நாட்கள் இடம் பெறும்.
பல நூறு மில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்ட முகேஷ் அம்பானி தான் ரிலையன்ஸ் நிறுவனத்தை நிறுவினார். தற்போது அவரது மகன்களும் இந்நிறுவனத்தில் இணைந்து நிர்வகித்து வருகின்றனர்.இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிறுவியுள்ள முகேஷ் அம்பானி என்ன படித்துள்ளார் என்று தெரியுமா? அதோடு அம்பானி வீட்டில் உள்ளோர்களின் கல்வித் தகுதி என்னவென்று தெரியுமா? கீழே அம்பானி வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் கல்வி தகுதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

முகேஷ் அம்பானி
மிகப்பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானி, மும்பையின் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். மேலும் இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.
நீதா அம்பானி
முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி மும்பையில் இருக்கும் நர்சி மோஞ்சி வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் வணிகவியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
ஆகாஷ் அம்பானி
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மூத்த மகன் தான் ஆகாஷ் அம்பானி. இவர் தனது பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் முடித்தார். அதன் பின் அமெரிக்காவில் உள்ள ப்ரௌன் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
ஆனந்த் அம்பானி
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி. இவர் அமெரிக்காவில் உள்ள ரோட் தீவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். சமீபத்தில் தான் இவருக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இஷா அம்பானி
முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் மகள் தான் இஷா அம்பானி. இவர் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை முடித்துள்ளார். அதன் பின் அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க கலிபோர்னியா சென்றார்.
ஸ்லோகா மேத்தா
ஆகாஷ் அம்பானியின் மனைவி தான் ஸ்லோகா மேத்தா. இவர் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின் அவர் தனது பட்டபடிப்பை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸில் முடித்தார்.
ராதிகா மெர்ச்சண்ட்
ஆனந்த் அம்பானியின் காதல் மனைவி தான் ராதிகா மெர்ச்சண்ட். இவர் மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். மேலும் மும்பையில் உள்ள பி.டி. சோமானி இண்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச இளங்கலை டிப்ளோமா படித்தார். அதன் பின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.
ஆனந்த் பிரமல்
இஷா அம்பானியின் கணவர் தான் ஆனந்த் பிரமல். இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதன் பின் இவர் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்துள்ளார்.



Click it and Unblock the Notifications