Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
கோவில்களில் எத்தனை முறை சுற்றி வரவேண்டும் தெரியுமா?
இந்து சமய மரபுகளில் கோயில்களுக்கு சிறப்பு உண்டு. அவர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தை தரிசித்து, தங்கள் மனதை அமைதிப்படுத்தவும், விரும்பிய விருப்பங்களை நிறைவேற்றவும் பூஜை செய்கிறார்கள். அவர்களின் இஷ்ட தெய்வங்களுக்கும் தேங்காய் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மேலும் விரும்பிய விருப்பங்கள் நிறைவேறிய பிறகு, அவர்கள் எதை வேண்டிக்கொண்டாலும், அந்த வரங்கள் வழங்கப்படுகின்றன. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கோவில்களில் எத்தனை முறை வலம் வரவேண்டும்? கடவுளை எப்படி வழிபட வேண்டும்? அப்படி வழிபட்டால் கிடைக்கும் பலன்கள என்னென்ன? என்பது பற்றி அர்ச்சகர் ஸ்ரீகாந்த் விளக்குகிறார்.

கோயிலை எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும்..
கோவில்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முழு பிரகாரத்தையும் வலம் வர வேண்டும். முற்காலத்தில் பெரியோர்கள் கூறியவாறு சுற்றி வருதல் கடவுளை மகிழ்விப்பதோடு எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நோர்மறை எண்ணங்கள் பெருகும் என கோவில் அர்ச்சகர் தெரிவித்தார். மேலும் எத்தனை முறை சுற்றி வர வேண்டும், எந்த கடவுளுக்கு எப்படி என்ன செய்வது நல்லது என்று இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
கோவில்களுக்கு செல்லும்போது அங்குள்ள அரச மரத்தை சுற்றி வரவும். இம்மரத்தடியில் ஐந்து அல்லது ஒன்பது முறை வலம் வருவது நல்லது. அந்த மரத்தில் உள்ள காற்று, தோஷங்களை நீக்கும் என்று அறிவியல் ரீதியாக கூறுகின்றனர்.
மேலும், விக்னேஷ்வரர் கோவில், சிவன் கோவில், அனுமன் குடிக் கொண்டிருக்கும் கோயிகாளில் எவ்வளவு அதிகமாக வலம் வருகிறீர்களோ, அவ்வளவு சிறந்தது. 21 அல்லது 54, அதே போல் 108 என நமக்குப் பிடித்த எண்களைப் பொறுத்து சுற்றி வரலாம். இதைச் செய்வதன் மூலம், தூய்மையான இதயத்துடன் முழுமையான தன்னம்பிக்கை வளரும்.
பிரதட்சணம்
பிரதட்சணம் செய்யும் போது அந்த இறைவனை மனதுக்குள் வேண்டிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். கோயிலை எந்தப் பக்கம் சுற்றி வர வேண்டும் என்று பார்ப்போம். கோயிலைச் சுற்றி வரும்போது எப்போதும் வலது பக்கத்திலிருந்து தொடங்க வேண்டும். ஏனெனில் கடவுள் சிலைகளில் நேர்மறை ஆற்றல் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. அதனால் பிரதக்ஷிணைகளை எப்போதும் வலது பக்கமாகத்தான் தொடங்க வேண்டும் என்றார் அர்ச்சகர் ஸ்ரீகாந்த்.
விநாயக பெருமான், முருகப் பெருமான், அம்பிகை, சிவபெருமான், மகாவிஷ்ணு, நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கு எந்தெந்த வகையில் நாம் வழிபட்டு வலம் வர வேண்டும்? அப்படி வலம் வந்தால் என்ன பலன் என்பதைப் பார்க்கலாம்.
விநாயகர் கோயில்
விநாயக கோயிலில், ஒரு முறை சுற்றி வலம் வந்தாலே போதுமானது. இதனால், நமது செயல்களில் ஏற்படும் தடைகள் நீங்கி, இயல்பாகவே வெற்றிகள் வந்து சேர்ந்துவிடும்.
முருகப் பெருமான் கோயில்
முருகப் பெருமான் கோயிலில், ஆறு முறை வலம் வர வேண்டும். இதனால், எதிரிகளை வெல்லக்கூடிய திறமையும், கூர்ந்த மதியும் ஏற்படுகிறது.
அம்பிகை பராசக்தி வழிபாடு
அம்பாள் கோயில்களில், பராசக்தி வழிபாட்டில், ஐந்து முறை கோயிலைச் சுற்றி வலம் வர வேண்டும். இதனால், வெற்றி, மன அமைதி, ஆகியவை கிடைக்கும். குறிப்பாக வெள்ளிக் கிழமை தொடங்கி, செவ்வாய்க் கிழமை வரை தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தினசரி வலம் வந்தால், நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.
சிவபெருமான் கோயில்
சிவபெருமான் கோயில்களில், ஐந்து முறை வலம் வர வேண்டும். இதனால், எண்ணியது நிறைவேறும். மீண்டும் பிறவா நிலை, செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.
திருமால் கோயில்
திருமால் கோயில்களில் மகாவிஷ்ணுவை மூன்று முறை வலம் வர வேண்டும். இதனால் ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு, அஷ்டலட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும்.
நவக்கிரகங்கள்
நவக்கிரக கோயில்கள், விக்ரகங்களை ஒன்பது முறை சுற்றி வலம் வர வேண்டும். இதனால், ஜாதகத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கும் தன்மை, வாழ்க்கை பயனுள்ளதாக மாறுதல், தினசரி கடமைகளில் ஒழுங்கு ஆகியவை பக்தர்களுக்கு கிடைக்கும்.
கோயில்களில் செய்ய வேண்டியவை..
ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும். கோபுரத்தை கண்டதும் கை கூப்பி வணங்க வேண்டும். பிறகு தல விநாயகரை வணங்கி உள்ளே செல்ல வேண்டும். கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வழிபட வேண்டும். இதைத் தொடர்ந்து துவார பாலகர்களை வழிபட்டு கருவறை முன்புள்ள விநாயகரை வணங்க வேண்டும். பிறகு கருவறையில் இறைவனை கண்ணார கண்டு, மனதில் இருத்தி வழிபட வேண்டும். அர்ச்சகர் தரும் திருநீறை கீழே சிந்தாமல் நெற்றியில் பூசி உடன் இறைவனின் பெயரை உச்சரித்தபடி கருவறையை 3 தடவை வலம் வந்து வழிபடுதல் வேண்டும். குறிப்பாக (விருப்பம் இருந்தால்) விபூதி, குங்குமம் பெறும் முன்பே அர்ச்சருக்கு தட்சனை கொடுத்து விட வேண்டும். அதுவே நியதி. அதே போல, உங்களுக்கு விருப்பம் இருந்தால் சுவாமி உண்டியலில் காசு போடலாம்.
முதல் முறை வலம் வரும் போது அம்பாள் சன்னதி, உற்சவர், நடராஜரை வழிபட வேண்டும். இரண்டாம் தடவை வலம் வரும்போது, முருகன், நவக்கிரகம், பைரவர், அறுபத்து மூவரை வழிபட வேண்டும். மூன்றாம் முறை வலம் வரும்போது தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டீகேசுவரரை வழிபட வேண்டும். சண்டீகேசுவரரை வழிபாடு செய்ததும் ஆலய வழிபாடு முழுமை பெறுவதாக அர்த்தம். இதையடுத்து மீண்டும் கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி, சிறிது நேரம் வடக்கு முகமாக அமர்ந்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.



Click it and Unblock the Notifications