Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
தீபாவளிக்கு முன் இந்த பொருட்களை வீட்டில் இருந்து தூக்கிப் போடுங்க.. இல்ல துரதிர்ஷ்டம் தலைவிரித்தாடும்...
Diwali 2024: இந்துக்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று தான் தீபாவளி. இந்த தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையானது கார்த்திகை மாதத்தில் வரும் அமாவாசை திதியில் கொண்டாடப்படும்.
இந்நாளில் லட்சுமி தேவி மற்றும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபடுவதுண்டு. இப்படி செய்வதன் மூலம் லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் ஆசியால், வீட்டில் செல்வம், மகிழ்ச்சி மற்றும் அமைதி பெருகும் என்பது நம்பிக்கை.

இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். தீபாவளி அன்று உங்கள் வீட்டில் லட்சுமி தேவி குடியிருக்க வேண்டுமானால், ஒருசில பொருட்களை தீபாவளிக்கு முன்னரே அப்புறப்படுத்திவிடுங்கள்.
இப்படி தூக்கி எறிந்துவிடுவதன் மூலம், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் மற்றும் வறுமையும் நீங்கும் என்பது நம்பிக்கை. நீங்கள் உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி குடியேற விரும்பினால், பின்வரும் பொருட்கள் வீட்டில் இருந்தால், அவற்றை தீபாவளிக்கு முன் தூக்கி எறிந்துவிடுங்கள்.
உடைந்த கண்ணாடி
பொதுவாக வீட்டில் உடைந்த கண்ணாடியை வைத்திருக்கக்கூடாது என்பார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருந்தால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து, அதன் விளைவாக வீட்டில் உள்ளோர் தங்கள் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உங்கள் வீட்டில் உடைந்த கண்ணாடி இருந்தால், அதை தீபாவளிக்கு முன்னரே அப்புறப்படுத்துங்கள். இல்லாவிட்டால் லட்சுமி தேவி உங்கள் வீட்டிற்கு வரமாட்டார்.
ஓடாத கடிகாரம்
வீட்டில் ஓடாத கடிகாரம் இருந்தால், அதையும் வீட்டில் இருந்து அகற்ற வேண்டும். ஏனெனில் ஓடாத கடிகாரமானது ஒருவரது வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக ஒருவரது முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும். எனவே இந்த தீபாவளியில் இருந்து உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தைக் காண விரும்பினால், ஓடாத கடிகாரத்தை அகற்றுங்கள்.
உடைந்த மரச்சாமான்கள்
வாஸ்துப்படி, வீட்டில் உடைந்த மரச்சாமான்கள் இருப்பது வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும். குறிப்பாக உடைந்த மரப்பொருட்கள் வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும். எனவே இப்படியான உடைந்த மரச்சாமான்களை தீபாவளிக்கு முன் அப்புறப்படுத்த வேண்டும்.
உடைந்த சிலைகள்
உங்கள் வீட்டில் தெய்வங்களின் சிலைகள் அல்லது கலைநயமிக்க சிலைகள் உடைந்து இருந்தால், அவற்றை தாமதிக்காமல் உடனே அகற்ற வேண்டுமென வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருக்க வேண்டுமானால், உடைந்த சிலைகளை தீபாவளிக்கு முன் வீட்டில் இருந்து அகற்றிவிடுங்கள்.
சேதமடைந்த இரும்பு பொருட்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உடைந்த இரும்பு பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் ராகு, கேதுவின் மோசமான விளைவுகளை அதிகரிக்கும். குறிப்பாக இப்படியான பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், அது பணம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வைக்கும். எனவே தீபாவளியில் இருந்து உங்கள் வாழ்க்கை செழிப்பாக இருக்க விரும்பினால், உடைந்த அல்லது சேதமடைந்த இரும்பு பொருட்களை தீபாவளிக்கு முன்னரே அகற்றிவிடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications