Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
தீபாவளி நாளில் இவற்றை பார்த்தால்.. லட்சுமி தேவி வீட்டிற்கு வரப்போகிறார் என்று அர்த்தமாம்..
Diwali 2023: ஒவ்வொரு ஆண்டும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு பண்டிகை தான் தீபாவளி. தீப ஒளித்திருநாளான தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் வெறும் பட்டாசுகள் மட்டும் வெடிக்கப்படுவதில்லை, மக்கள் லட்சுமி மற்றும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளை செய்வார்கள். இப்படி செய்யும் பூஜையால் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, வாழ்க்கை செல்வ செழிப்போடு இருக்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த தீபாவளி நாளில் சில சுப யோகங்களும், அரிய கிரக நிலைகளும் நிகழ்கின்றன. இதன் விளைவாக இந்த தீபாவளியால் ஏராளமான நற்பலன்கள் கிடைக்கும்.
தீபாவளியன்று செல்வத்தைப் பெற செய்யப்படும் லட்சுமி பூஜையால் லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைந்து, உங்கள் வீட்டிற்கு வரப் போகிறார் என்றால் அது ஒருசில அறிகுறிகளை நமக்கு வெளிக்காட்டுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒருசிலவற்றை தீபாவளி நாளில் காண்பது லட்சுமி தேவியின் வருகையை குறிக்கிறது. இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
ஆந்தை
தீபாவளி நாளின் இரவில் ஆந்தையை காண்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் இந்த நாளின் இரவில் நீங்கள் ஆந்தையை கண்டால், லட்சுமி தேவியின் சிறப்பான அருள் உங்களுக்கு உள்ளது என்று அர்த்தம். ஏனெனில் ஆந்தை லட்சுமி தேவியின் வாகனம். ஆகவே தீபாவளியில் ஆந்தையைக் கண்டால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
மூஞ்சுறு
நம்பிக்கைகளின் படி, தீபாவளி நாளில் உங்கள் வீட்டில் மூஞ்சுறு சுற்றுவதைக் கண்டால், குபேரனின் சிறப்பான அருள் உங்கள் மீது உள்ளது என்று அர்த்தம். இத்தகைய சூழ்நிலையில் கையில் பணம் அதிகம் சேரும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அமைதியின்றி இருந்த வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைக்கும்.
பசு
இந்து மதத்தில் பசுவிற்கு முக்கியத்துவம் உண்டு. பசு மாட்டில் அனைத்து தெய்வங்களும் குடியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பசுவை தீபாவளி நாளில் உங்கள் வீட்டின் வாசனில் கண்டால், லட்சுமி தேவி உங்கள் வீட்டிற்கு வருகை தருகிறாள் என்று அர்த்தம். இந்த சூழ்நிலையில் வீட்டில் உள்ளோரிடம் செல்வம் பெருகும். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
பல்லி
அனைத்து வீடுகளிலுமே பல்லி பொதுவாக காணப்படும். ஆனால் அந்த பல்லியை தீபாவளி நாளில் உங்கள் வீட்டில் அதிகமாக கண்ணில் பட்டால், லட்சுமி தேவி உங்கள் வீட்டிற்கு வரப்போகிறார் என்று அர்த்தம். மேலும் லட்சுமி தேவியின் அருளால் வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கி, ஆசைகள் ஒவ்வொன்றும் நிறைவேறும்.
பூனை
நம்பிக்கைகளின் படி, தீபாவளி நாளில் பூனையை இரவு நேரத்தில் காண்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வருவதோடு, லட்சுமி தேவியின் அருளால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications