Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Diwali 2023: தீபாவளி அன்று காலையில் இந்த விஷயங்களை செய்தால் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவாராம்...
Diwali 2023: தீபாவளி பண்டிகையை கொண்டாட நாம் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். விடிந்தால் தீபாவளி என்ற மகிழ்ச்சியில் அனைவரும் இப்போது இருந்தே பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கியிருப்போம்.
தீபாவளி ஒரு வெற்றியின் கொண்டாட்டமாக இருந்தாலும், இந்நாளில் செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியையும், விநாயகரையும் செழிப்பிற்காக மக்கள் வழிபடுவதுண்டு. பெரும்பாலும் இந்த பூஜை மாலை வேளையில் நல்ல நேரம் பார்த்து செய்யப்படுகிறது.

பொதுவாக தீபாவளி என்றாலே காலையில் எழுந்ததும் தலையில் எண்ணெய் வைத்து சீகைக்காய் தேய்த்துக் குளித்து விட்டு, புதிய ஆடைகளை அணிந்து, பட்டாசுகளை வெடிப்போம். ஆனால் இந்த நன்னாளில் ஒருசில விஷயங்களை காலையில் மேற்கொள்வதன் மூலம், லட்சுமி தேவியின் அருள் கிடைப்பதோடு, லட்சுமி தேவி வீட்டில் குடியிருந்து, வீட்டை செல்ல செழிப்போடு வைத்துக் கொள்வார். இப்போது செல்வம் பெருக தீபாவளி அன்று காலையில் எந்த மாதிரியான விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
வீட்டை சுத்தம் செய்யவும்
தீபாவளி அன்று காலையில் எழுந்ததும் வீட்டை பெருக்கி, வீட்டில் உள்ள குப்பைகளை வீட்டில் இருந்து அகற்றிவிட வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அழுக்கு நிறைந்த வீட்டில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி குடியேற மாட்டார். எனவே தீபாவளி நாளில் வீட்டை பளிச்சென்று வைத்துக் கொள்ளுங்கள்.
கங்கை நீரை தெளிக்கவும்
தீபாவளி நாளில் வீட்டை காலையில் எழுந்ததும் சுத்தம் செய்த பின், வீட்டில் புனிதமான நீராக கருதப்படும் கங்கை நீரைத் தெளிக்க வேண்டும். ஒருவேளை கங்கை நீர் கிடைக்காவிட்டால், நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சிறிது கலந்து, அந்நீரை வீட்டில் தெளிக்கலாம். இப்படி தெளிக்கும் போது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்பட்டு, வீடு நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும்.
துளசி நீர்
வீட்டில் துளசி செடியைக் கொண்டிருந்தால், தீபாவளி நாளன்று காலையில் எழுந்ததும் குளித்து முடித்த பின் துளசி செடிக்கு நீரை ஊற்றுங்கள். துளசியானது விஷ்ணு பகவானுக்கு மிகவும் பிடித்தது மற்றும் துளசியில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. லட்சுமி தேவி மற்றும் விஷ்ணு பகவானின் வழிபாட்டில் துளசியின்றி வழிபாடு முழுமையடையாது. எனவே தீபாவளி நாளில் காலையில் துளசி செடிக்கு நீரை ஊற்றிய பின், ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
அழகான ரங்கோலி
பண்டிகை காலம் என்றாலே அதில் அழகான வண்ணமயமான ரங்கோலி கோலம் நிச்சயம் இடம் பெறும். அதுவும் வீட்டு வாசல் அழகாக இருந்தால் தான், அந்த வீட்டிற்குள் லட்சுமி தேவி குடிபுகுவதோடு, மகிழ்ச்சியடைந்து ஆசியை வழங்குவார். ஜோதிடத்தின் படி, நல்ல வண்ணமயமான ரங்கோலி கோலம் வீட்டினுள் நேர்மறை ஆற்றலை அதிகம் பாயச் செய்யும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications