Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம்
விமானப் பணிப்பெண்கள் அவர்கள் வேலையில் சந்திக்கும் மோசமான அனுபவங்கள்... இப்படிலாம் கூட நடக்குமா?
விமானத்தில் பறப்பது என்பது வெளித்தோற்றத்திற்கு மிகவும் ஆடம்பரமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் உள்ள உண்மை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். லண்டனைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவர் சமீபத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார், இது விமானத் துறையில் உள்ள சில இருண்ட பக்கங்களை வெளிப்படுத்துகிறது.
விர்ஜின் அட்லாண்டிக்கில் விமானப் பணிப்பெண்ணாக 17 ஆண்டுகள் பணிபுரிந்த அவர், சமீபத்தில் அளித்த நேர்காணலில், விமானப் பயணங்களின் போது எதிர்பாராமல் எதிர்கொண்ட சில சவால்களை விவரித்தார். விமானப் பயணத்தின் போது விமானப் பணிப்பெண்கள் சந்திக்கும் பிரச்சினனைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மது அருந்திய பயணிகளால் ஏற்படும் சிக்கல்கள்
லாஸ் வேகாஸுக்கு பயணம் சென்றபோது நடந்த சம்பவத்தை அவர் பகிர்ந்து கொண்டார். லாஸ் வேகாஸுக்கு பறப்பது ஒரு உற்சாகமான அனுபவம் என்று பலர் நினைக்கலாம், ஆனால் விமானப் பணிப்பெண்களுக்கு அது அவ்வாறு இருப்பதில்லை. இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் மது அருந்துவதால் அடிக்கடி கட்டுப்படுத்த முடியாமல் போவதாக அவர் விளக்கினார்.
குறிப்பாக வார இறுதி நாட்களில் நிலைமை மோசமடைந்தது, பயணிகள் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். சிலர் கழிவறைகளில் புகைபிடிப்பார்கள், கேபின் குழுவினரை மோசமாக நடத்துவார்கள், சத்தமாக கத்துவார்கள், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள், மேலும் விமானப் பணிப்பெண்களுடன் தவறாக நடந்து கொள்ளவும் முயல்வார்கள். இந்த அனுபவங்களை நினைவுகூருவது அவரை இப்போதும் கலங்க வைக்கிறது.
பிரபலமானவர்கள் தலைவலியை ஏற்படுத்துவார்கள்
சில பிரபலங்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்களின் தொந்தரவான நடத்தை பற்றியும் அவர் விளக்கினார். அவரது கூற்றுப்படி, அவர்கள் மிகவும் முரட்டுத்தனமாகவும் சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், அவர்கள் விஐபி கவனத்திற்கு தகுதியான பெரிய நட்சத்திரங்களைப் போல செயல்படுகிறார்கள்.
சில Influencer-கள், "எனக்கு ஒரு லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர்" போன்ற விஷயங்களைச் சொல்வார்கள் என்றும், அவர்களை விமானத்தில் யாரும் அடையாளம் காணாதபோது மிகவும் விரக்தி அடைவார்கள் என்றும் கூறினார். அவர்களின் அணுகுமுறை பெரும்பாலும் விமானப்பயணத்தை மிகவும் சவாலானதாக மாற்றும்.
கேபின் க்ரூ பார்ட்டிகள் எல்லை மீறும்
ஜோகன்னஸ்பர்க்கில் நிறுத்தப்படும் போது, கேபின் குழு உறுப்பினர்கள் அடிக்கடி மோசமான பார்ட்டிகளை நடத்தினர். பொதுவாக மது மற்றும் மக்கள் மீது அதிக உயரத்தில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக, அங்கு எப்போதும் குழப்பமான சூழல் நிலவுமென்று அவர் கூறினார். திருமணமான விமானிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் இந்த பார்ட்டிகளின் போது மோசமான செயல்களில் ஈடுபடுவதை அவர் பார்த்ததாகக் கூறினார்.
ஆர்கி சூழ்நிலைகள்
ஆர்கி என்றால் எல்லையில்லா களியாட்டம் என்று பொருள்படும். சில ஸ்டாப்களில் "ஆர்கி" க்கு அருகில் இருக்கும் சூழல் இருப்பதாக அவர் விவரித்தார், அந்த இடத்தில் மக்கள் எந்த வரம்புகளும் இல்லாமல் செயல்படுவார்கள். அனைத்து ஸ்டாப்களும் அந்த அளவை எட்டவில்லை என்றாலும், கிட்டதட்ட அந்த நிலைக்கு சென்றுவிடும். இந்த சூழ்நிலைகளில், குறிப்பாக சில விமான மேலாளர்கள் நடந்துகொண்ட விதத்தின் காரணமாக, அவர் மிகவும் சங்கடமாக உணர்ந்ததாக அவர் கூறினார்.
அனைத்து வேலைகளிலும் சில நேர்மறை மற்றும் எதிர்மறை பாதிப்புகள் இருந்தாலும் விமானப் பணிப்பெண்களுக்கு அதிக சுமைகள் இருப்பது இவருடைய நேர்காணலில் இருந்து புரிகிறது. விமானப் பணி வெளித்தோற்றத்திற்கு பார்க்க எளிதாக தெரிந்தாலும் அதன் இருண்ட பக்கங்கள் நிச்சயம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்யும்.



Click it and Unblock the Notifications
