Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Cyclone Michaung: 'மைச்சாங் புயல்' பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
Cyclone Michaung: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மைச்சாங் புயல் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், டிசம்பர் 03 முதல் கன மழை பெய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு வங்க கடலில் டிசம்பர் 03 ஆம் தேதி மைச்சாங் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 04 ஆம் தேதி கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையம் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்ச் விடுத்துள்ளது.

மேலும் இந்த புயல் காரணமாக டிசம்பர் 03 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்று கூறியிருந்தது. மேலும் டிசம்பர் 04 ஆம் தேதி மிகக் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் 3-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் சென்னை மற்றும் மச்சிலிப்பட்டினத்தை குறிவைத்து வட தமிழக கடற்கரையை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புயல் டிசம்பர் 4 ஆம் தேதி கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மைச்சாங் புயல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் நான்காவது வெப்பமண்ட சூறாவளியாகும். மேலும் 90-100 கிமீ வேகத்தில் சென்னையை நோக்கி வரும் இந்த சூறாவளி பெரிய சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், அதை சமாளிக்க மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சூறாவளி என்றால் என்ன?
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) கூற்றுப்படி, வேகமான மற்றும் அடிக்கடி அழிவுகரமான காற்று சுழற்சியால் வேறுபடும் குறைந்த அழுத்தப் பகுதியைச் சுற்றியுள்ள வளிமண்டல இடையூறுகளால் சூறாவளிகள் ஏற்படுகின்றன. சூறாவளிகள் பொதுவாக வன்முறை புயல்கள் மற்றும் மோசமான வானிலை ஆகியவற்றுடன் இருக்கும். சூறாவளியை புயல் என்றும் அழைப்பர்.
மைச்சாங் என்ற பெயர் எப்படி வந்தது?
மியான்மர் வழங்கிய பரிந்துரையின் படி, மைச்சாங் என்று இந்த சூறாவளிக்கு பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மைச்சாங் வலிமை மற்றும் நெகிழ்ச்சியைக் குறிக்கிறது. இந்த புயல் வங்காள விரிகுடாவில் உருவான நான்காவது சூறாவளி மற்றும் 2023-ல் இந்திய பெருங்கடலில் உருவாகும் 6 ஆவது புயலாக இருக்கும்.
மைச்சாங் புயல் எப்போது கரையை கடக்கிறது?
மைச்சாங் புயல் டிசம்பர் 04 ஆம் தேதி மாலை ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கும், வடதமிழகத்தின் சென்னைக்கும் இடையே இந்தியாவின் கிழக்கு கடற்கரையைக் கடக்கும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.
மைச்சாங் புயல் கிழக்கு கடற்கரையில் உள்ள மாநிலங்களைப் பாதிக்குமா?
நிச்சயம் இல்லை. மைச்சாங் புயல் ஒடிசாவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்பட வாய்ப்பில்லை என்று புவனேஸ்வரில் உள்ள சிறப்பு நிவாரண ஆணையத்தின் அலுவலக அதிகாரி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
