Latest Updates
-
10 கிராம் 1 கோடிக்கு விற்கப்படும் உலகின் விலையுயர்ந்த மரம் எது தெரியுமா? இதுல அப்படி என்னதான் இருக்கு? -
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா?
சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் தோன்றும். அந்த வகையில் சித்திரை மாதம் வரும் பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தோன்றுகிறது. இந்த நன்னாளில் சிவபெருமான் மற்றும் அம்பாள், முருகன் உள்ளிட்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. இந்த ஆண்டு பௌர்ணமி திதி நேரம், ஏப்ரல் 22, திங்கட்கிழமை மாலை 05.55 மணி முதல் ஏப்ரல், 23, 2024 செவ்வாய்க்கிழமை இரவு, 07.48 மணி வரை இருக்கிறது.
இந்த நிலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கிரிவலம் போக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏப்ரல் 22,23 ஆகிய இரண்டு நாட்களும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. சித்ரா பெளர்ணமி 23ஆம் தேதியான இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 24ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. 23ஆம் தேதி முழுமையாக சித்ரா பெளர்ணமி என்பதால் அன்றைய தினம் முழுவதும் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம்.

நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. அக்னியே குளிர்ந்து மலையாகி, ஈஸ்வர அம்சமாக உள்ள இடம் திருவண்ணாமலை. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை. மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.
அண்ணாமலையாரே ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார். கார்த்திகை மாதம் தீபம் திருவிழா முடிந்து கிரிவலம் வருவார். அதே போல தை மாதம் 2ஆம் நாள் கிரிவலம் வருவார். அண்ணாமலையை தொழுது கிரிவலம் வந்தால், மது, மாது, சூது, கொலை, களவு போன்ற ஐந்து பாதகங்கள் தொலையும் என்று புராணங்கள் கூறுகின்றன. கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணமும் உருவாகும். நேற்று இரவு பவுர்ணமி திதி தொடங்கியது. நாளை அதிகாலை வரைக்கும் பவுர்ணமி உள்ளது எனவே, திருவண்ணாமலையில் சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
இந்நிலையில், இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்னவென்றால், ஏப்ரல் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமைஆன இன்று. அதாவது நாளை அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஏப்ரல் 24ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே, இன்று சித்ரா பவுர்ணமி என்பதால் அந்நாள் முழுவதும் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிவலம் வருவதற்கு ஒரு முறை உள்ளது. அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வந்து மீண்டும் ராஜ கோபுரத்தில் முடிக்க வேண்டும். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களையும், ஆசிரமங்களையும், கோவில்களையும் தரிசனம் செய்ய வேண்டும். கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு அன்னமிடுவது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், நமது பாவப்பிணிகள் அகலும். இவ்வாறாக கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறிச்சென்றுள்ளனர்.



Click it and Unblock the Notifications