Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
சாணக்கிய நீதி படி இந்த 5 குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் மிகப்பெரிய பாக்கியசாலிகளாம்...!
Chanakya Niti: சாணக்கிய நீதி மற்றும் சாணக்கியரின் தந்திரங்கள் உலகப் புகழ் பெற்றவை. ஆச்சார்ய சாணக்கியர் தனது அனுபவங்களை சாணக்கிய நீதியில் விரிவாகக் கூறியுள்ளார். திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனை. சாணக்கியர் திருமணத்தைப் பற்றியும் பல் விஷயங்களைக் கூறியுள்ளார்.
ஒரு பெண்ணுக்கு திருமணம் பற்றி பல கற்பனைகள் இருக்கும். ஆனால் நீங்கள் வேறொரு குடும்பத்திற்குச் செல்லும்போது, அவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அவர்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அந்த குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர ஒரு பெண் சில குணங்களைக் கொண்டிருக்க வேண்டும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குடும்பத்தைக் கவனிப்பவர்கள்
குடும்பத் தலைவி என்பது ஒரு குடும்பத்தைப் பாதுகாப்பவருக்கு வழங்கப்படும் பெயராகும். எனவே வீட்டின் குடும்பத்தலைவி அதற்கு தகுதியானவர் என்பதை நிரூபிக்க வேண்டும் . ஒரு வீட்டின் செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பற்றிய தெளிவான யோசனை ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் அதை சரியாக நிறைவேற்றினால், குடும்பத்தை அனைத்து விதமான சிரமங்களிலிருந்தும் பாதுகாக்க முடியும்.
மனக்கட்டுப்பாடு கொண்ட பெண்
நிதானத்துடனும் சமநிலையுடனும் விஷயங்களைக் கையாளும் பெண்கள் குடும்பத்தை வழிநடத்த சிறந்தவர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் அவசரத்தில் முடிவெடுப்பவர்களாகவும், எடுத்த முடிவை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்களாகவும் இருந்தால், அவர்கள் குடும்பத்தில் அசௌகரியம் மற்றும் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். அதனால் பதற்றத்தை உருவாக்காமல் அமைதியாக இருக்கும் பெண்கள் குடும்பத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவார்கள் என்பதே உண்மை.
மனதின் அழகு
ஒரு பெண்ணின் வெளிப்புற அழகை மட்டும் பார்த்து நீங்கள் அவர்களை திருமணம் செய்து கொண்டால், உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லாது. ஆனால் அழகான இதயமும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான முக்கிய காரணியாகும். வெளித்தோற்றத்தின் அழகைப் போலவே மனதின் அழகும் முக்கியம். அப்படிப்பட்ட பெண்ணை மணந்தால், உங்கள் குடும்பத்தில் லட்சுமி வசிப்பார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
திருமணத்தை விரும்பும் பெண்
திருமண விஷயத்தில் ஆணின் விருப்பத்தை மட்டுமல்ல, பெண்ணின் விருப்பத்தையும், கருத்தையும் மதிக்க வேண்டும். அப்போதுதான் தாம்பத்திய உறவு நன்றாக இருக்கும். திருமணம் என்பது பெண்ணுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லையெனில், அவர்களின் திருமண உறவு முழுமையடையாது. எனவே திருமண வாழ்வில் உண்மையான திருப்தியையும், மகிழ்ச்சியையும் பராமரிக்க இதுபோன்ற விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பொறுமையான பெண்
ஒரு பெண் அனைத்து விஷயத்தையும் பொறுமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏதாவது செய்தால் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் பராமரிக்க முடியும். இந்த குணம் குடும்பத்தில் ஏற்படும் எந்த பிரச்சனைகளையும் சமாளிக்கவும், குடும்பத்தில் அன்பையும், மகிழ்ச்சியையும் பராமரிக்க உதவுகிறது. ஒரு பெண்ணின் வருகையால் வீட்டின் தலைவிதியே மாறுகிறது. எனவே அவர்களிடம் இந்த நற்குணங்கள் அவசியம் இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
