சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் கள்ள உறவில் ஈடுபட இந்த விஷயங்கள்தான் காரணமாக இருக்குமாம்...!

Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியரின் கொள்கைகள் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானவை. இந்த கொள்கைகளை தங்கள் வாழ்க்கையில் இணைத்துக் கொள்பவர்கள், சிறந்த வாழ்க்கையை வாழ முடியும். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஆன்மீகம், பணம், வேலை, குடும்பம், உறவுகள், கண்ணியம், நாடு, உலகம் மற்றும் பல விஷயங்களைப் பற்றிய கொள்கைகளை வழங்கியுள்ளார். ஒரு மனிதனின் நல்ல வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்கலும் சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. கணவன்-மனைவி இடையேயான உறவைப் பற்றிய தனது கொள்கைகளையும் சாணக்கியர் அதில் கூறியுள்ளார்.

Chanakya Niti Why Married Men Attracted Towards Other Women in Tamil

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மற்றவர் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானது, இது தவறில்லை என்கிறார் சாணக்கியர், ஆனால் இந்த ஈர்ப்பு வரம்பு மீறினால் அது நிச்சயம் பிரச்சனையாகிவிடும். அப்படி நடந்தால் இருவரது திருமண வாழ்க்கையும் முறிய வாய்ப்புள்ளது. திருமணத்திற்கு புறம்பான உறவு ஒரு கொடிய பாவமாக கருதப்படுகிறது. ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களிடம் ஈர்க்கப்படுவதற்குச் சில காரணங்களைக் குறிப்பிடுகிறார். அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஈர்ப்பு

ஈர்ப்பு என்பது மனிதனின் இயல்பான பண்பு. ஆனால் இது உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். திருமணமானவர்களின் திருமணத்திற்கு புறம்பான உறவுகள் பல காரணங்களுக்காக நிகழ்கின்றன, அவற்றில் ஒன்று மற்றொரு பெண்ணின் மீதான ஈர்ப்பு. சரியான நேரத்தில் அதைச் சரிசெய்வது உங்கள் திருமணத்தை பிரிவிலிருந்து காப்பாற்றலாம், இல்லையெனில் உங்கள் திருமணம் முறிந்து உங்கள் மனைவி உங்களை விட்டு நிரந்தரமாக பிரியலாம்.

விரைவான திருமணம்

திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கு வழிவகுக்கும் முதன்மையான காரணங்களில் ஒன்றாக இளவயது திருமணத்தை சாணக்கியர் குறிப்பிடுகிறார். முதலாவதாக, திருமணம் புரியாத வயதில் திருமணம் நடைபெறுகிறது.

இரண்டாவதாக, உங்கள் வாழ்க்கை காலப்போக்கில் மாறும்போது, ​​​​உங்கள் மனைவி உங்களுக்குப் பொருத்தமாக இல்லை, நீங்கள் இன்னும் சிறந்த துணையை அடைந்திருக்கலாம் என்றும் எண்ணங்கள் தோன்றும். இந்த எண்ணங்கள் எழும் போது பலர் திருமணத்திற்கு புறம்பான உறவுகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறார்கள்.

உடல் திருப்தி

உடல் திருப்தி இல்லாதது திருமணத்திற்கு புறம்பான உறவுகளுக்கு மற்றொரு முக்கிய காரணம் என்று சாணக்கியர் கூறுகிறார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கணவன்-மனைவி இடையே உள்ள உடல் ஈர்ப்பில் நாளடைவில் குறைபாடு தெளிவாகத் தெரியும். அத்தகைய சூழ்நிலையில், மக்கள் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை நோக்கி நகர்கின்றனர். உடல் திருப்தி என்பது படுக்கையில் ஒருவரையொருவர் திருப்திப்படுத்துவது மட்டுமல்ல, மனரீதியாகவும் திருப்தியாக உணர வைப்பதாகும்.

நம்பிக்கை குறைபாடு

தம்பதிகளின் பரஸ்பர அர்ப்பணிப்பு மற்றும் மகிழ்ச்சியான பாலியல் வாழ்க்கை ஆகியவை திருமணத்தில் மிகவும் முக்கியம். இதில் ஒன்று குறைந்தாலும் அந்த திருமண வாழ்க்கை நீடிக்காது. பரஸ்பர நம்பிக்கையின்மையே பெரும்பாலான திருமணங்கள் தோல்வியடைவதற்குக் காரணம். உங்கள் துணையுடனான உங்கள் உறவில் நீங்கள் திருப்தி அடைந்த பிறகும், மற்றொரு உறவுக்காக ஏங்குவது உங்கள் திருமண வாழ்க்கையை அழிக்கும் செயல் என்று சாணக்கியர் கூறுகிறார்.

சுவாரஸ்யம்

திருமணமான பலரும் நாளடைவில் தங்கள் துணையுடனான வாழ்க்கையில் ஆர்வமின்மையை அனுபவிக்கிறார்கள். எனவே அவர்கள் புது அனுபவத்தைத் தேடத் தொடங்குகிறார்கள். திருமணத்திற்கு புறம்பான உறவு அவர்களுக்கு சுவாரஸ்யத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும். ஆனால் இது தாற்காலிகமானதுதான், நாளடைவில் இது அவர்களுக்கு ஆபத்தாக மாறும். இறுதியில் இது திருமண உறவின் நிரந்தர பிரிவுக்கு வழிவகுக்கும்.

Story first published: Friday, October 4, 2024, 6:00 [IST]
Desktop Bottom Promotion