Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள் -
ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப நாக பஞ்சமி அன்று உங்க ராசிக்கேற்ப இந்த பரிகாரங்களை செய்யுங்க..
சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் பிற பெண்களை நோக்கி செல்வதற்கு இந்த 4 விஷயங்கள்தான் முக்கிய காரணமாம்...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவர் சாணக்கியர். சாணக்கியரின் அனுபவங்களின் தொகுப்பான சாணக்கிய நீதி மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றிய பல அறிவுரைகளை வழங்குகிறது. சாணக்கிய நீதியின் படி ஒழுக்கமான வாழ்க்கையைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே சிறந்த வாழ்க்கையை நடத்த முடியும்.
மதம், பணம், வேலை, பாதுகாப்பு, குடும்பம், உறவுகள், கண்ணியம், சமூகம், உறவுகள், நாடு மற்றும் உலகம் பற்றி பல்வேறு விஷயங்களை கொள்கைகளை சாணக்கியர் தனது சாணக்கியநீதியில் விவரித்துள்ளார். சாணக்கியரின் இந்தக் கொள்கைகள் எந்த காலத்திற்கும் பொருந்தக்கூடியது.

கணவன்-மனைவி இடையேயான உறவு குறித்தும் சாணக்கியர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதை அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானது என்று கூறப்படுகிறது. இது தவறல்ல. ஆனால் இந்த ஈர்ப்பு எல்லையைக் கடக்கும் போது அது மிகவும் ஆபத்தானதாகிவிடும்.
ஈர்ப்பு என்பது மனிதர்களின் அடிப்படை குணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அது உங்கள் திருமணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினால், அது வெறும் ஈர்ப்பு மட்டுமல்ல. அத்தகைய சூழ்நிலையில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் உருவாகின்றன. அதை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால், உங்கள் திருமண வாழ்வை அழித்து விடும். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு ஆண் தன் மனைவியை வேறொரு பெண்ணுக்காக விட்டுச் செல்வதற்கு சில காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இளம் வயது திருமணம்
இளம்வயது திருமணம் சில சமயங்களில் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை கொண்டுவருகிறது. முதலாவதாக, இந்த நேரத்தில் நீங்கள் புத்திசாலித்தனம் மற்றும் இல்லற வாழ்க்கைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பீர்கள். இரண்டாவதாக இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொழில் கொஞ்சம் முன்னேறும் போது, நீங்கள் இல்லற வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்து விட்டதாக நீங்கள் உணரலாம். இதனால் தான் திருமணத்திற்கு புறம்பான உறவுகளை மக்கள் தொடங்குகின்றனர்.
உடல் அசௌகரியம்
கணவன் மனைவி உறவில் உடல் திருப்தியும் முக்கிய பங்கு வகிக்கிறது. அது இல்லாத போது, இருவருக்குள்ளும் உள்ள ஈர்ப்பு கணிசமாக குறையத் தொடங்குகிறது. பெரும்பாலான சமயங்களில் கணவன்-மனைவிக்கு இடையே உள்ள ஈர்ப்பு குறைபாடு உடல் திருப்தி இல்லாத போது தெளிவாகத் தெரியும். திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கு மக்கள் செல்வதற்கு இதுவே முக்கிய காரணம். உடல் திருப்தி என்பது படுக்கையில் ஒருவரையொருவர் திருப்திப்படுத்துவது மட்டுமல்ல, மனதாலும் வார்த்தைகளாலும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதாகும்.
உறவுகளில் நம்பிக்கைக் குறைவு
திருமண உறவின் அடிப்படையே விசுவாசம் மற்றும் நம்பிக்கைதான். தம்பதிகளிடையே பரஸ்பர நம்பிக்கை உள்ள உறவு என்றென்றும் நீடிக்கும். ஆனால் ஒருமுறை விசுவாசம் உடைந்துவிட்டால், அதை மீண்டும் எழுப்புவது கடினமாக இருக்கும். தம்பதிகளிடையே நம்பிக்கை உடைந்தால் அது உறவை மிகவும சிக்கலாக மாற்றிவிடும். சிலர் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளை தங்கள் மிகப்பெரிய சாதனையாக பார்க்கிறார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், வாழ்க்கைத் துணைவர்கள் ஒருவருக்கொருவர் அர்ப்பணித்து, தங்கள் பாலியல் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவது மிகவும் முக்கியம். இல்லையெனில், அவர்கள் உறவு விரைவில் சிதைந்துவிடும். பெரும்பாலும், தங்கள் துணையுடனான உறவில் திருப்தி அடைந்தாலும், ஒருவர் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டால், அந்த உறவு விரைவில் முறிந்து விடும்.
குழந்தை
ஒரு ஆண் அல்லது பெண்ணின் முன்னுரிமைகள் அவர்கள் பெற்றோராக மாறும்போது மாறுகின்றன. அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றம் நிகழும். ஒரு குழந்தை பிறந்த பிறகு, கணவன்-மனைவி இடையேயான உறவு மாறத் தொடங்குகிறது என்று சாணக்கியர் கூறுகிறார். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிட முடியாது. அத்தகைய சூழ்நிலையில், சில ஆண்கள் மற்ற பெண்களை நோக்கி ஈர்க்கப் படுகிறார்கள். அவர்கள் படிப்படியாக திருமணத்திற்கு புறம்பான உறவுகளில் ஈடுபடுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
