சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் கள்ளக்காதலில் ஈடுபட இந்த 5 விஷயத்தில் ஒன்றுதான் காரணமாம்...ஷாக் ஆகாதீங்க...

Chanakya Niti: சாணக்கியர் இந்தியாவின் தலைசிறந்த ஞானிகளில் ஒருவராக அறியப்படுகிறார். அவருடைய அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற நூல்களாகும். சாணக்கியர் தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான நேரங்களை எதிர்கொண்டார், ஆனால் அவர் ஒவ்வொரு சூழ்நிலையையும் உறுதியாக எதிர்கொண்டது மட்டுமல்லாமல், அந்தச் சூழ்நிலையை தனது பலமாக மாற்றினார்.

சாணக்கியர் பல்வேறு துறைகளில் சாணக்கியர் சிறந்த அனுபவமும், ஞானமும் கொண்டவராக இருந்தார். தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் விவரித்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையிலான உறவு குறித்தும் சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் சில விஷயங்களை விவாதித்துள்ளார். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தனது எதிர்பாலினித்தவர் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இது இயற்கையானதுதான், ஆனால் இந்த ஈர்ப்பு எல்லை மீறும் போது அது நிச்சயம் அவர்களின் வாழ்க்கையில் புயலை உருவாக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

Chanakya Niti Why Do Married Men Like Other Women

உலகின் அனைத்து மதங்களிலும், கலாச்சாரங்களிலும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் ஒரு கொடிய பாவமாகக் கருதப்படுகின்றன. ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர வேறு பெண்களிடம் ஈர்க்கப்படுவதற்கான சில காரணங்களை சாணக்கிய நீதி விளக்குகிறது. அவற்றைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இளம் வயதிலேயே திருமணம் செய்வது

சாணக்கியரின் கூற்றுப்படி இளம் வயது திருமணம் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. குடும்பச் சூழ்நிலையினாலோ அல்லது முதிர்ச்சியின்மையினாலோ இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் பெரும்பாலும் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகின்றனர். ஏனெனில், அந்த நேரத்தில் அவர்கள் மனதளவில் தயாராக இருப்பதில்லை. காலப்போக்கில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், சூழல்கள் மற்றும் ஒரு புதிய உறவின் மீதான ஆசை ஆகியவை அவர்களைப் படிப்படியாக மாற்றத் தொடங்குகின்றன. இந்தச் சமநிலையற்ற தன்மை பிற்காலத்தில் அவர்களை திருமணம் மீறிய உறவுகளை நோக்கித் தள்ளுகிறது.

திருமண உறவில் உடல்ரீதியான நெருக்கம் குறைவது

பெரும்பாலான திருமண உறவுகளில் காலப்போக்கில் கணவன் மனைவிக்கிடையேயான உடல்ரீதியான அல்லது உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு பலவீனமடைகிறது. மெதுவாக அவர்களின் உறவில் நெருக்கம் குறைந்து விடுகிறது. பல நேரங்களில், வெட்கம் அல்லது தயக்கம் காரணமாக உடல் நெருக்கம் பற்றி தம்பதிகள் விவாதிப்பதில்லை, மேலும் இந்த மௌனமே அவர்களுக்குள் இடைவெளியை ஏற்படுத்திவிடுகிறது. இந்த இடைவெளியை நிரப்ப அவர்கள் திருமணம் மீறிய உறவில் நுழையலாம்.

குழந்தைகள் பிறந்த பிறகு முன்னுரிமைகள் மாறுகின்றன

குழந்தை பிறந்த பிறகு பெண்களின் முன்னுரிமைகள் மாறுவது இயல்புதான். இதன் காரணமாக, கணவன் உறவில் தங்களின் முக்கியத்துவத்தை இழப்பதாகவும், புறக்கணிக்கப்படுவதாகவும் உணரத் தொடங்குகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், அவர்கள் வெளியிலிருந்து உணர்ச்சிபூர்வமான அல்லது உடல்ரீதியான ஆதரவைத் தேடத் தொடங்குகிறார்கள். இது தற்காலிகமானதுதான், ஆனால் உரையாடல் மற்றும் புரிதலின் மூலம் இதைத் தீர்க்க முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

பிற பெண்களின் மீதான ஈர்ப்பு

ஆண்களின் மனம் நிலையற்றது என்றும், அவர்கள் எங்காவது புதிதான, உற்சாகமான அல்லது கவர்ச்சிகரமான ஒருவரைக் கண்டால், அவர்களை நோக்கி ஓடுவார்கள் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். ஆனால் இந்த ஈர்ப்பு நிரந்தரமானது அல்ல. அது பெரும்பாலும் அவர்களுக்கு வருத்தத்தையே ஏற்படுத்தும். இதனால் இந்த தற்காலிக ஈர்ப்பை தவிர்க்க வேண்டுமென்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

சுயக்கட்டுப்பாடு இல்லாமை மற்றும் தவறான நட்பு

ஒரு மனிதனின் சுயக்கட்டுப்பாடே மிகப்பெரிய வெற்றி என்று சாணக்கியர் நம்பினார். ஒரு மனிதனுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லாதபோது, ​​அல்லது அவன் தவறான சூழலில் வாழும்போது, ​​அவர்கள் திருமணம் மீறிய உறவுகளை நோக்கி ஓடத் தொடங்குகிறார்கள். சுயக்கட்டுப்பாடு இல்லாத மனிதன் ஒருபோதும் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார்.

Story first published: Monday, January 19, 2026, 8:00 [IST]
Desktop Bottom Promotion