Latest Updates
-
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள்
சாணக்கிய நீதி படி உங்க வாழ்க்கையில் நீங்க நம்பவே கூடாத பெண்கள் யார் தெரியுமா? இவங்கள நம்புனா அவ்வளவுதான்...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவரான சாணக்கியர் தனது நெறிமுறைகளுக்கு பெயர் பெற்றவர். சாணக்கியரின் கொள்கைகள் சந்திரகுப்த மௌரியரை மகதத்தின் பேரரசர் ஆக்கியது. சாணக்கியரின் பண்டைய கொள்கைகள் இன்றும் பொருத்தமானவை.
மனித வாழ்க்கையை எளிமையாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுவது தொடர்பான பல விஷயங்களை அவர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். செல்வம், சொத்து, மனைவி, நட்பு மற்றும் திருமணம் போன்ற அனைத்து தலைப்புகளிலும் சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஆழமாகப் பேசியுள்ளார்.

சாணக்கிய நீதியில் பெண்களைப் பற்றி பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, சாணக்கிய நீதியில் அவர்களின் குணம், சிந்தனை, எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி சில பெண்களை நம்பவே கூடாது என்று சாணக்கியர் கூறியுள்ளார். அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மோசமான குணமுள்ள பெண்
ஏமாற்றும் மற்றும் மோசமான குணமுள்ள பெண்ணை ஒருபோதும் நம்ப வேண்டாம் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண்களை ஒருபோதும் நம்ப முடியாது. அவர்கள் எப்போதும் மற்ற ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் கணவன் அவருடைய முதன்மையான எதிரியாக மாறுகிறார்கள்.
ஏனென்றால் அவர்களின் எண்ணங்களுக்கு அவரது கணவன் தடையாக மாறுகிறார், இது கணவர்களுக்கு வருங்காலத்தில் ஆபத்தை உண்டாக்கும். எனவே கெட்ட குணம் கொண்ட பெண்ணை ஒருபோதும் நம்பக்கூடாது என்று சாணக்கியர் நியாயமாக கூறுகிறார்.
அழகைக் கண்டு ஏமாறக்கூடாது
ஒரு பெண்ணை அவருடைய அழகை வைத்து எப்போதும் நம்பக்கூடாது. அப்படிப்பட்டவர்களை நம்புவது பெரிய தவறு. வெளிப்புற அழகை விட அவர்களின் குணங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். அழகை விட பெண்ணின் கலாச்சாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பேராசை கொண்ட பெண்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பெண்ணிடம் இருக்கும் பேராசை மிகவும் ஆபத்தானது. இது வீட்டின் அமைதியைக் கெடுப்பது மட்டுமல்லாமல், சில நேரங்களில் அது முழு குடும்பத்தையும் அழிக்க வழிவகுக்கும். எனவே நீங்கள் ஒரு பேராசை கொண்ட பெண்ணை ஒருபோதும் நம்பக்கூடாது. அவர்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் முடிந்தவரை அவர்களைவிட்டு வெளியேறுவது நல்லது.
தற்பெருமை கொண்ட பெண்கள்
தற்பெருமை கொண்ட பெண்களை ஒருபோதும் நம்பாதீர்கள் என்கிறார் சாணக்கியர். சரஸ்வதி தேவியும், லக்ஷ்மி தேவியும் எப்பொழுதும் திமிர் பிடித்த பெண்களிடம் கோபமாக இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் அவர்களால் தங்களால் அறிவையோ புத்திசாலித்தனத்தையோ பயன்படுத்த முடியாது. கர்வமுள்ள பெண்களின் நடத்தை முழு குடும்பத்தின் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அழிக்கிறது. வாழ்க்கையில் நம்ப வேண்டிய பெண்கள் யார் யாரென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
அம்மா
உலகில் ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டுமே கண்மூடித்தனமாக நம்ப முடியும், அது அவர்களின் அம்மா என்று சாணக்கியர் நம்பினார். ஒரு தாய் தன் குழந்தைக்கு ஒருபோதும் தீங்கு செய்ய மாட்டார். அவர்களின் இதயத்தில் மற்றவர்கள் மீது பொறாமை இருக்காது, எப்போதும் தன் குழந்தைகளின் நலனையே விரும்புகிறார்.
அறிவுள்ள பெண்
ஒரு பெண் ஒரு குடும்பத்தின் அடித்தளமாக இருப்பதால் கல்வி கற்பது மிகவும் முக்கியம் என்று சாணக்கியர் நம்பினார். ஒரு படித்த அறிவுள்ள பெண் உங்கள் பல தலைமுறைகளுக்கு கல்வி கற்பித்து குடும்பத்தை காப்பாற்றுகிறார். எனவே பெண்களுக்கு கல்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.



Click it and Unblock the Notifications
