Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
சாணக்கிய நீதி படி இந்த 4 குணமுள்ள பெண்கள் ஒரு குடும்பத்திற்கு கிடைக்கும் மிகப்பெரிய சாபம் போன்றவர்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபணர் ஆவார். சாணக்கிய நீதி அவரது கொள்கைகளின் தொகுப்பாகும். அரசியல், பொருளாதார மேலாண்மை மற்றும் சமூகக் கொள்கை உள்ளிட்ட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி சாணக்கியர் தனது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். மேலும் குடும்பம் தொடர்பான பல விஷயங்களையும் கூறியுள்ளார்.
தன்னுடைய நீதி நூலில், பெண்களுடன் தொடர்புடைய சில நல்லொழுக்கங்களையும், தீமைகளையும் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் சில இயல்புகள் காரணமாக அவர்கள் வீட்டை சொர்க்கமாகவோ அல்லது நரகமாகவோ மாற்ற முடியும்.

பெண் தெய்வம் போன்றவர் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர் வீட்டின் லட்சுமி என்று அழைக்கப்படுகிறார். ஒரு பெண்ணால் வீட்டை சொர்க்கமாகவோ நரகமாகவோ மாற்ற முடியும். எனவே ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கும் போது மிகுந்த சிந்தனையுடன் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் உங்கள் வாழ்வில் துன்பம்தான் நிறைந்திருக்கும். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது மிகுந்த சிந்தனையுடன் செய்யப்பட வேண்டும். சாணக்கிய நீதியில் குறிப்பிட்ட குணம் கொண்ட பெண்கள் வீட்டை நரகமாக்குகிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
மோசமான குணம்
கெட்ட குணமுள்ள, ஒழுக்கக்கேடான மற்றும் முரட்டுத்தனமான பெண் ஒரு வீட்டிற்கு சாபம் போன்றவர். நல்ல வாழ்க்கையை நரகமாக மாற்ற மட்டுமே அவர்கள் எப்போதும் சிந்திப்பார்கள். அத்தகைய பெண் முழு குடும்பத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்துபவராக இருப்பார்கள்.
பெரியவர்களை அவமதிப்பவர்கள்
விருந்தினரை வரவேற்காத, பெரியவர்களை மதிக்காத பெண்ணுடன் பழகுவது உங்களை குடும்பம் மற்றும் உறவினர்களிடமிருந்து அந்நியப்படுத்தும். அத்தகைய பெண் குடும்பத்திற்கு அவமானத்தையும் ஆபத்தையும் உருவாக்குகிறார். வீட்டில் விருந்தோம்பல், பெரியவர்களை மதிப்பது பெண்ணின் நல்ல பண்பாகும்.
குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, வெளி விருந்தினர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களை மதிப்பது பெண்ணின் அடிப்படை குணமாகும். ஒரு பெண் அதைப் பின்பற்றவில்லை என்றால், அது குடும்பத்தில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும்.
பணரீதியாக ஏமாற்றுபவர்கள்
கல்வி, நிதி மேலாண்மை மற்றும் நெறிமுறைகள் எந்தவொரு நபரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இணைப்புகளாகும். படிக்காத ஒரு பெண் தேவையில்லாமல் பணத்தை செலவழித்து, தன் குழந்தைகளுக்கு நல்ல மதிப்புகளை கொடுக்காமல் இருப்பது குடும்பத்திற்கு நல்லதல்ல.
அவர்கள் வீட்டை பொருளாதாரரீதியாக நிலையற்றதாக மாற்றுகிறார்கள். மேலும், இதுபோன்ற பெண்கள் புதிய தலைமுறையை நன்றாக வளர்க்காமல் பெரும் கேடு விளைவித்து வருகின்றனர். குடும்பத்தின் நிலை என்னவாக இருந்தாலும், பெண்கள் தேவையில்லாமல் பணத்தைச் செலவு செய்வதும், குழந்தைகளைக் கவனிக்காமல் இருப்பதும் குடும்பச் சிதைவுக்கு வழிவகுக்கும்.
பேராசைக் கொண்டவர்கள்
தீய எண்ணங்கள் மற்றும் பேராசை கொண்ட பெண்களை விட்டு விலகி இருப்பது நல்லது என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அத்தகைய பெண்ணுடன் இருப்பது உங்களை எப்போது வேண்டுமானாலும் பெரிய சிக்கலில் மாட்ட வைக்கலாம். அவர்களால் குடும்பத்துக்கும் ஆபத்து ஏற்படும். மேலும், பெண்கள் தங்கள் குடும்ப விவகாரங்களை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தால், உங்கள் குடும்பம் அழிவின் விளிம்பில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
