Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
சாணக்கிய நீதி படி பணத்தை இப்படி செலவு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் சீக்கிரம் பணக்காரராகி விடலாமாம்...!
Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியர் ஒரு இராஜதந்திரி, பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதியாவார். சமூகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை தனது கொள்கைகள் மூலம் மாற்ற முயற்சித்தவர். சாணக்கிய நீதி என்ற நூலில் அவர் தனது அறிவையும், அனுபவத்தையும்ம் பகிர்ந்துள்ளார். சமூக, வணிக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை எவ்வாறு சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று இந்நூலில் அறிவுறுத்தியுள்ளார். சாணக்கிய நீதி ஒரு நபர் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாழ உதவும் பல கொள்கைகளை குறிப்பிடுகிறார்.

சமநிலையான வாழ்க்கைக்கு பணம் இருப்பது மிகவும் முக்கியம் என்கிறார் சாணக்கியர். சில விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு நபர் பணத்தைச் சேமிக்கலாம் மற்றும் அதனை எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பணத்தை தவறாக செலவழிப்பவர்கள்
லட்சுமி தேவி செல்வத்தின் கடவுளாவார். லட்சுமி தேவி சபாலா என்று கருதப்படுகிறார். ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, பணத்தை தண்ணீரைப் போல செலவழிப்பவர்கள் மற்றும் கெட்ட நேரங்களுக்கு பணத்தை சேமிக்காதவர்கள் முட்டாள்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அத்தகையவர்கள் சில சமயங்களில் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆடம்பரப் பொருட்களுக்காகத் தொடர்ந்து பணம் செலவழிப்பதால் பணப் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கிடையில், கடினமான காலங்களில் பணத்தைச் சேமித்து வைப்பவர் ஞானி என்று அழைக்கப்படுகிறார்.
கெட்ட செயல்கள் மூலம் சம்பாதிக்கும் பணம் ஆபத்தானது
சாணக்கியரின் கூற்றுப்படி பணத்தை ஆதாரமாகப் பயன்படுத்த வேண்டும். கெட்ட செயல்களால் சம்பாதித்த பணத்தால் எந்தப் பயனும் இல்லை என்றும் சாணக்கியர் கூறுகிறார். அந்த மாதிரியான பணம் உங்கள் கையிலிருந்து நழுவுவது உங்களுக்குத் தெரியாது.
சரியான இடத்தில் வாழ வேண்டும்
சாணக்கியரின் கொள்கையின்படி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அத்தகைய இடத்தில் தங்கியிருப்பதன் மூலம் ஒருவர் ஒருபோதும் பணத்திற்காக சிரமப்பட வேண்டியதில்லை. சரியான வழியில் நீங்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தினால் விரைவில் பணக்காரராகலாம்.
பணத்தை சரியாக முதலீடு செய்ய வேண்டும்
வாழ்க்கையில் நெருக்கடிக்கு பணத்தை சேமிக்க வேண்டியது அவசியம், ஆனால் எல்லா பணத்தையும் சேமிப்பது முட்டாள்தனம் என்று சாணக்கியர் கூறுகிறார். பணத்தை சேமிப்பதற்கான சிறந்த வழி, முடிந்தவரை சரியான இடங்களில் முதலீடு செய்வதுதான். ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் சிறிது காலத்திற்குப் பிறகு கெட்டுப் போவது போல, பயன்படுத்தாமல் விடப்படும் பணமும் வீணாகிறது என்கிறார் சாணக்கியர்.
செலவு செய்ய பயப்படக்கூடாது
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, இன்றைய காலத்தில் எல்லோரும் பணக்காரர்களாக இருக்க விரும்புகிறார்கள். தங்கள் வாழ்க்கையில் பணத்திற்கு கஷ்டப்படக்கூடாது என்று அனைவருமே விரும்புகிறார்கள். ஒரு நபர் பணம் சம்பாதிக்க மிகவும் கடினமாக உழைக்கிறார்.
கஷ்டப்பட்டு சம்பாதிக்க பணத்தைத் தனக்காகச் செலவழிக்கும்போதோ, முதலீடு செய்யும்போதோ, தானம் செய்யும்போதோ, தான் உழைத்துச் சம்பாதித்த பணம் வீணாகப் போகிறதோ என்று எண்ணுகிறார். பணத்தை யாராலும் தடுக்க முடியாது என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். உங்கள் வசதிக்காக நீங்கள் பணம் செலவழிக்கவில்லை என்றால், அது வேறு வழியில் உங்கள் கையை விட்டு நழுவிப் போகிறது.
பணத்தை தேக்கி வைக்கக்கூடாது
பணத்தை ஒருபோதும் தேக்கி வைக்கக்கூடாது. அதை ஏதாவது ஒரு வகையில் செலவழிக்க வேண்டும். ஒரு குளத்தில் தண்ணீர் நிரம்பினால், சிறிது காலம் கழித்து அது பாசி மற்றும் அழுக்குகளால் மூடப்பட்டு பயன்படுத்த முடியாததாகிவிடும்.
தண்ணீர் எப்போதும் ஓட வேண்டும். குளத்தில் தண்ணீர் தொடர்ந்து ஓடும்போது அதில் அழுக்கு தங்காது. அதேபோல, ஒருபோதும் பணத்தை நிறுத்த வேண்டாம். ஏனென்றால், நீங்கள் சம்பாதிப்பதையே நீங்கள் செலவிடுகிறீர்கள் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications
