Latest Updates
-
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும்
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் இந்த 6 விஷயங்களை ஒழுங்கா பண்ணலான அவங்க எதிர்காலம் வீணாப்போயிருமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குடும்பத்தைப் பற்றிய பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். மணம் நிறைந்த மலர்கள் நிறைந்த மரம் காடு முழுவதையும் நறுமணமாக்குவது போல, ஒரு குடும்பத்தின் பெருமை ஒரு மகனால் பெருகும் என்று சாணக்கியர் கூறினார்.
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு குடும்பத்தில் பல குழந்தைகள் இருப்பது ஒரு பொருட்டல்ல. அவர்கள் அதிகமாக இருப்பதால் குடும்பத்தின் கௌரவம் உயராது. குடும்ப மரியாதையை அதிகரிக்க ஒரு நல்லொழுக்கமுள்ள மகன் போதும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

குழந்தைகளை வளர்ப்பதுக் குறித்து சாணக்கியர் பல அறிவுரைகளை கூறியுள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்லொழுக்கமுள்ளவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும், அவர்களைக் கவனித்து, அவர்களின் எதிர்காலம் சிதையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
இந்த பதிவில் குழந்தைகளை அழிக்கும் சில நடத்தைகள் மற்றும் சாணக்கிய நீதியின் படி அவர்களை சரியான பாதையில் வழிநடத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மோசமான குணம் குடும்பத்தை அழிக்கும்
திருதராஷ்டிரனின் நூறு மகன்களில் ஒருவரைக்கூட யாரும் மரியாதையுடன் நினைவுகூர முடியாது. அந்த நூறு மகன்களாலும் குடும்பத்திற்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை. காய்ந்த மரம் தீப்பிடித்து, காடு முழுவதும் சாம்பலாவதைப் போல, கெட்ட குணமுள்ள மகன் முழு குடும்பத்தையும் குடும்பத்தின் நற்பெயர், மானம், மரியாதையை அழிக்கிறான் என்று சாணக்கியர் கூறுகிறார்.
தவறான தொடர்புகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்
தவறான தொடர்புகளிலிருந்தும், நட்புங்களில் இருந்தும் குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும். தவறான தொடர்புடன் வளரும் குழந்தை குடும்பத்தின் கௌரவத்தை அழித்துவிடும் என்கிறார் சாணக்கியர். துரியோதனனை அழித்தது அவரின் தவறான தொடர்பான சகுனிதான். எனவே உங்கள் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே நல்ல சூழலில் வளர்த்து, கெட்ட சகவாசங்களில் இருந்து விலக்கி வைக்கவும்.
நல்ல கல்வி கொடுக்க வேண்டும்
குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். எனவே குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க பெற்றோர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்காத பெற்றோர்கள் பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு எதிரிகளாக மாறுவார்கள்.
சாணக்கியரின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கு அறிவையும் கல்வியையும் வழங்குவது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் கல்வியால் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை நன்றாக வடிவமைக்க முடியும். குழந்தைகளுக்கு அறிவையும் கல்வியையும் கற்பிக்க பெற்றோர்கள் செய்யும் கடின உழைப்பு எதிர்காலத்தில் உங்களுக்கு நல்லொழுக்கத்தை அளிக்கும்.
நல்ல குணங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்
சாணக்கிய நீதியின் இரண்டாம் அத்தியாயத்தின் 10வது ஸ்லோகத்தில் மகன்களையும் மகள்களையும் நல்ல குணங்களுடன் வளர்க்க வேண்டும் என்று சாணக்கியர் எழுதியுள்ளார். நல்ல செயல்களைச் செய்ய அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்ல குணங்கள் மற்றும் நல்ல நடத்தை உள்ளவர்களுக்கு மட்டுமே குடும்பத்தில் மரியாதை கிடைக்கும்.
அதிக செல்லம் கூடாது
அதிகப்படியான செல்லம் குழந்தைகளுக்கு சாபமாக இருக்கும் என்கிறார் சாணக்கியர். ஏனென்றால் அதிக செல்லத்துடன் வளர்க்கப்படும் குழந்தைகள் கெட்ட பழக்கங்களுக்கு விரைவில் ஆளாகின்றனர். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அதிகம் செல்லம் கொடுக்காமல் அவர்களின் விருப்பங்களை மட்டும் நிறைவேற்ற வேண்டும்.
கண்டிப்பு முக்கியம்
சாணக்கிய நீதியின் பன்னிரண்டாவது ஸ்லோகத்தில், அதிக பாசத்தால், மகன்களுக்கு பல குணக் குறைபாடுகள் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அவர்களின் தீய செயல்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலம், நல்ல குணங்கள் அவர்களிடம் வளரும். எனவே மகன்களையும் சீடர்களையும் அதிகமாகப் கொஞ்சாதீர்கள். சாணக்கியர் அவ்வப்போது கண்டிக்க வேண்டும் என்கிறார்.



Click it and Unblock the Notifications
