Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்கள் உங்க திருமண வாழ்க்கையில் இருந்தால் உங்களுக்கு பிரிவே கிடையாதாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், கல்வியாளர், ஆலோசகர், தத்துவவாதி, இராஜதந்திரி மற்றும் அரசியல்வாதி ஆவார். ஆச்சார்ய சாணக்கியரின் கொள்கைகள் மிகவும் காலம் கடந்தும் இன்றும் பிரபலமானதாக இருக்கிறது. இது பலருக்கும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றிக்கான வழிகாட்டியாக செயல்படுகிறது.
சாணக்கியரின் கொள்கைகள் வாழ்க்கையின் கண்ணாடி என்று அழைக்கப்படுகின்றன. சாணக்கியரின் கொள்கைகள் ஒரு மனிதனின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. சாணக்கிய நீதி கூற்றுப்படி, ஒரு நபரை வெற்றியடையச் செய்வதில் நல்ல உறவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஒரு நல்ல உறவுகள் உள்ள நபர் எல்லா சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பார். எந்தவொரு நபருக்கும் வாழ்க்கையில் நல்ல உறவுகள் மிகவும் முக்கியம். கணவன்-மனைவி இடையேயான உறவைப் பற்றியும் சாணக்கியர் விளக்கியுள்ளார். கணவன் மனைவி உறவை புனிதமாக வைத்திருக்க சாணக்கியர் சில தந்திரங்களை கூறுகிறார். அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கண்ணியம் அவசியம்
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, மகிழ்ச்சியான திருமணத்திற்கு கண்ணியம் மிகவும் அவசியமானது. உங்கள் பேச்சில் இனிமையையும், நடத்தையில் அடக்கத்தையும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும். அத்தகைய நபர்கள் அனைவரின் மனதையும் வெல்வார்கள். எனவே எப்போதும் உங்கள் பேச்சிலும் நடத்தையிலும் கண்ணியமாக இருக்க வேண்டும்.
ஈகோவைத் தவிர்க்க வேண்டும்
ஈகோ என்பது அனைத்து உறவுகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தும் ஒரு சிக்கலாகும். இது ஒரு வலுவான உறவில் கூட விரிசலை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகும். தம்பதிகளில் ஒருவர் ஈகோவுடன் இருந்தாலும், அந்த உறவு விரைவில் மோசமடையத் தொடங்கும். சாணக்கிய நீதி படி, உங்கள் உறவுகளில் ஒருபோதும் ஈகோ இருக்கக்கூடாது. ஈகோவை விட்டொழித்தால் என்றென்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைப் பெறலாம்.
பரஸ்பர மரியாதை
கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எப்போதும் மதிக்க வேண்டும். அப்போதுதான் திருமணத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். அனைத்து உறவுகளிலும் அடிப்படை மரியாதையை பேணுவது மிகவும் அவசியம். கோபத்தால் உங்கள் துணையை ஒருபோதும் அவமதிக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் துணையை நீங்கள் மதிக்கவில்லை என்றால், அந்த உறவு நீண்ட காலம் நீடிக்காது. பிறரை மதிக்கும் நபர்களுக்கு அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
நம்பிக்கை
எந்த உறவுக்கும் நம்பிக்கைதான் அடிப்படை என்கிறார் சாணக்கியர். உறவு என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. கணவன் மனைவி உறவு மிகவும் மென்மையானது. கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, காதலன் காதலியாக இருந்தாலும் சரி, உறவை வலுப்படுத்த நம்பிக்கை முக்கியம். தம்பதிகளுக்கு இடையே அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் எந்த நெருக்கடியையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.
மூன்றாம் நபரை அனுமதிக்கக்கூடாது
உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்பினால், உங்கள் ரகசியங்களை உங்களுக்குள்ளேயே வைத்திருப்பது நல்லது. உங்கள் உறவில் மூன்றாவது நபரை நீங்கள் நுழைய அனுமதித்தால், உங்களுக்கிடையேயான பிரச்சனை மோசமடையும். எனவே தாம்பத்திய உறவில் மூன்றாவது நபரை உள்ளே வர விடாதீர்கள்.அனுமதிக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications
