Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் நோய் இயற்கையா சரியாகணுமா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற 'இத' குடிங்க.. -
இந்த 4 நபர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவது உங்களை ஆபத்தில் சிக்க வைக்குமாம் - சாணக்கிய தந்திரம் -
ஜூலை 27-ல் சனி பகவான் வக்ரமடைவதால் டிசம்பர் வரை இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காயும், 2 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்.. -
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க..
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை இளைஞர்களை நெருங்கவே விடக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
Chanakya Niti: இளைஞர்களே அனைத்து சமூகத்தின் முதுகெலும்பாவார்கள். அவர்கள் நேர்வழியில் நடந்தால் சமுதாயமும் நேர்வழியில் நடக்கும் என்பது நம்பிக்கை. இதையே ஆச்சார்ய சாணக்கியரும் வலியுறுத்தினார். ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, இளைஞர்கள் சில விஷயங்களிடம் இருந்து எப்போதும் விலகியிருக்க வேண்டும்.
சாணக்கியரின் கூற்றுப்படி, இளமைப்பருவம், குடும்பம், சமூகம் மற்றும் வேலை ஆகியவற்றை சார்ந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இளைஞர்கள் எப்போதும் சில விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும், இல்லையெனில் இளைஞர்களின் வாழ்க்கை விஷமாக மாறும் என்று சாணக்கியர் சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.

போதைப் பழக்கம்
இந்த நாட்டில் நடக்கும் குற்றங்களில் பெரும்பாலானவை போதை பொருட்களால்தான் நடக்கிறது. உங்களைச் சுற்றி போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் பலர் இருக்கலாம். போதைக்கு அடிமையான ஒருவருடன் பழகுவது, அந்த பழக்கங்களை நாமும் பின்பற்றுவதற்கு காரணமாக இருக்கலாம். இந்த கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட உங்கள் வாழ்நாளின் பல வருடங்களை அர்ப்பணித்து பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பற்றி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகம் மிகவும் கேவலமாக நினைக்கும். இதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். போதைப் பழக்கம் இளைஞர்களை தவறான செயல்களை செய்யத் தூண்டுகிறது, மேலும் அவர்கள் தங்களை சுற்றி இருப்பவர்களுக்கு சிக்கலை உருவாக்குவார்கள். சாணக்யா அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்.
தவறான நட்பு
முகத்திற்கு நேராக இனிமையாகப் பேசி முதுகுக்குப் பின்னால் உங்கள் வேலையைக் கெடுக்கும் நண்பர்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் ஒரு பாத்திரம் போன்றவர்கள், அதன் மேல் பகுதியில் பால் நிரம்பியிருக்கும், மீதமுள்ள பகுதியில் விஷம் இருக்கலாம் என்கிறார் சாணக்கியர்.
மனித வாழ்க்கையில் நட்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். நல்லவர்களின் சகவாசம் உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் அதே வேளையில், கெட்டவர்களுடன் நட்பில் இருப்பது உங்கள் வாழ்க்கையில் தீராத துயரத்தை ஏற்படுத்தும். அதனால்தான் ஒவ்வொருவரும் சரியான நண்பரை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும்.
சோம்பேறித்தனம்
சாணக்கியரின் கூற்றுப்படி, சோம்பேறித்தனம் ஒரு நபரின் முன்னேற்றத்திற்கு ஒரு தடையாகும். எந்த ஒரு வேலையிலும் சோம்பேறித்தனமாக இருப்பது நேரத்தை வீணடிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் வெற்றியையும் தடுக்கிறது.
இளைஞர்கள் சோம்பேறித்தனத்தை கைவிட்டு சுறுசுறுப்புடன் அனைத்து வேலைகளையும் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் செய்ய வேண்டும், அதனால் இளைஞர்கள் சோம்பேறித்தனம் தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்க அனுமதிக்கக்கூடாது.
காமம்
இளைஞர்கள் எப்போதும் காமம் சார்ந்த மனநிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது முன்னேற்றத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையை அழிக்கவும் வாய்ப்புள்ளது. இது இளைஞர்களின் வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கிறது மற்றும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கெடுக்கிறது. எனவே இளைஞர்கள் நல்ல எண்ணங்களுடன் வாழ்வில் சமநிலையை கடைபிடிக்க வேண்டும்.
அலட்சியம்
தங்களுடைய வேலையில் கவனத்தை இழப்பதால், பல இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். எந்த வேலையிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். சில நேரங்களில் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தும், அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்த ஒரு வேலையைச் செய்வதற்கும் முன், நிச்சயமாக ஒரு அனுபவமுள்ள நபரைக் கலந்தாலோசித்து, வேலையை கவனமாக செய்யுங்கள். கவனக்குறைவு நமது முன்னேற்றத்திற்கு நல்லதல்ல என்பது சாணக்கியரின் வாக்கு.



Click it and Unblock the Notifications
