Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி இந்த 3 கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் யாரையும் திருமணம் செஞ்சுக்கணும்னு ஆசைப்படாதீங்க...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவரான சாணக்கியர் வாழ்க்கையின் வெற்றிக்கான ரகசியங்கள் மட்டுமின்றி இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கும் பல வழிகளைக் கூறியுள்ளார். கணவன்-மனைவி இடையேயான உறவு மிகவும் உணர்ச்சிகரமானது. இந்த உறவின் அடித்தளம் அசைந்து விட்டால், அதில் மகிழ்ச்சியோ நிம்மதியோ இருக்காது.
இல்லற வாழ்வை அழகாக்க கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நம்புவது முக்கியம். அவர்களுக்கிடையில் பரஸ்பர நம்பிக்கை பலவீனமாக இருந்தால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை பெற முடியாது. கணவன்-மனைவி இடையே அன்பு மற்றும் நம்பிக்கையின் உறவை அப்படியே வைத்திருக்க சாணக்கியர் சில ஆலோசனைகளை வழங்குகிறார்.

சாணக்கிய நீதியில் திருமணத்திற்கு முன் ஒருவர் தனக்கு வரவிருக்கும் வாழக்கைத்துணையிடம் மூன்று கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன் உங்கள் வருங்கால கணவன் அல்லது மனைவியிடம் இந்தக் கேள்விகளைக் கேட்பதன் மூலம், நீங்கள் திருமணத்தை நோக்கி தைரியமாக ஒரு அடி எடுத்து வைக்கலாம். இந்த மூன்று கேள்விகளுக்கும் திருப்திகரமாக பதில் கிடைத்த பின்னரே திருமணத்திற்கு சம்மதிக்கவும் இல்லையெனில் திருமண வாழ்வு தொடங்குவதற்கு முன்பே உறவு சிதைந்துவிடும்.
வாழ்க்கைத்துணையின் வயதை உறுதி செய்யவும்
சாணக்கிய நீதி படி, திருமணத்திற்கு முன் உங்கள் வருங்கால வாழ்க்கை துணையின் உண்மையான வயதை அறிந்து கொள்ளுங்கள். கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் வயதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம்.
கணவன் மனைவி உறவில் வயது வித்தியாசம் இருந்தால், அந்த உறவில் புரிதல் குறைபாடு இருக்கலாம். கணவன்-மனைவி இடையே புரிதல் சரியாக இல்லை என்றால், அது திருமணத்தில் விரிசலை ஏற்படுத்தும். அதனால்தான், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவன்-மனைவி இடையே வயது வித்தியாசம் இருக்கக்கூடாது என்று சாணக்கியர் கூறினார்.
ஆரோக்கியம்
திருமணத்திற்கு முன் உங்கள் வருங்கால வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். திருமணத்திற்கு முன் அவர்களுக்கு கடுமையான நோய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன்பு துணைக்கு உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் மறந்து விடக்கூடாது, திருமணத்திற்குப் பிறகும் உங்கள் துணை நோய்வாய்ப்படலாம். அந்த நேரத்தில் அவர்களுடன் துணையாக இருக்க வேண்டியது உங்கள் கடமை. அந்த நேரத்தில் அவர்களை விட்டுவிடக் கூடாது. ஆனால் நோய்வாய்ப்பட்ட ஒருவரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுப்பது எதிர்காலத்தில் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
கடந்த கால உறவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
சாணக்கிய நீதி படி, உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணைக்கு கடந்த காலங்களில் ஏதேனும் காதல் உறவுகள் இருந்ததா என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில் கடந்த காலத்தில் ஏதேனும் உறவு இருந்தால் அந்த நபரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க முடியாது.
கடந்த காலத்தை விட்டுவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க அவர்கள் ஒப்புக்கொண்டால், எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் திருமணத்திற்கு முன்பு அவர்கள் எந்த மாதிரியான உறவு வைத்திருந்தார்கள் என்பது முக்கியம். இதை அறியாமேல் திருமணம் செய்து கொள்வது எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications
