Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த 6 விஷயங்களை பாலோ பண்றவங்களுக்கு வாழ்க்கையில் பணக்கஷ்டமே வராதாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் கூற்றுப்படி, பணம் மற்றும் பதவியால் மட்டுமே யாரும் வெற்றி பெறுவதில்லை. சமுதாயத்தில் முன்மாதிரியாகவும், மரியாதைக்குரியவர்களாக இருப்பவர்கள் மட்டுமே வெற்றிகரமானவர்களாக மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். அந்த வகையில் சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞர், அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர்.
சாணக்கியரின் இந்த கொள்கைகளை கண்டிப்பாக கடைபிடிப்பவர் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களுக்கும் தீர்வு பெறுவார் என்பது நம்பிக்கை. இன்றைய அவசர உலகத்தில் பணம் ஒரு நல்ல வாழ்க்கைக்கு இன்றியமையாதது. சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் பணத்தைப் பற்றிய சில விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.

இவற்றை ஒருவர் தன் வாழ்வில் கடைப்பிடித்தால், அவர்கள் வாழ்க்கையில் பணத்திற்கு கஷ்டம் இருக்காது. சாணக்கிய நீதியைப் பின்பற்றி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தலாம். இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், பணத்தில் எந்த பிரச்சனையும் வராது.
சிந்திக்காமல் செலவு செய்யக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, பணத்தைத் தண்ணீரைப் போல செலவழிப்பவர்கள் மற்றும் பணத்தை சேமிக்காதவர்கள் முட்டாள்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கஷ்ட காலத்தில் மோசமான துன்பங்களை சந்திப்பார்கள். ஆனால் கஷ்ட காலத்திற்காக பணத்தை சேமித்து வைப்பவர்கள் புத்திசாலிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆடம்பரமான வாழ்க்கைக்காக பணத்தை யோசிக்காமல் செலவு செய்வது நல்லதல்ல என்று சாணக்கியர் கூறுகிறார்.
சரியான இடத்தில் வசிக்க வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, பணத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும். தீய செயல்களால் சம்பாதித்த பணம் உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது, மேலும் பணத்திற்கு அடிமையாக இருக்கக் கூடாது. சாணக்கியரின் கொள்கையின்படி, வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் உள்ள இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அத்தகைய இடத்தில் வசிப்பதன் மூலம், ஒரு நபர் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும்.
நல்ல செயல்கள் மூலம் சம்பாதிக்க வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒழுக்கக்கேடான வழிகளில் சம்பாதித்த பணத்தின் ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் மட்டுமே. பதினொன்றாவது வருடத்திற்குப் பிறகு, அத்தகைய செல்வம் அழியத் தொடங்கும், அது உங்களுடைய நிம்மதியையும் அழித்துவிடும். பணம் எப்போதும் சரியான வழியில் சம்பாதிக்க வேண்டும். தவறாக சம்பாதித்த பணம் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும்.
மற்றவர்களை மதிக்க வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, மக்கள் உங்களை மதிக்க வேண்டும் என்றால், நீங்கள் மற்றவர்களை மதிக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களை மதிக்கும்போதுதான் அவர்கள் உங்களை மதிப்பார்கள். பிறருக்கு மரியாதை கொடுப்பவர்களுக்குத்தான் சமூகத்தில் மரியாதை கிடைக்கும். பிறரை அவமானப்படுத்துவதில் மகிழ்ச்சி காண்பவர்களை சமூகம் ஒருபோதும் மதிக்காது.
லக்ஷ்மி தேவியை வழிபட வேண்டும்
சாணக்கியரின் கொள்கைப்படி, மக்கள் சண்டையிடும் வீட்டில் லட்சுமி தேவி வசிக்க மாட்டார். லட்சுமி தேவி அமைதியான சூழ்நிலை இல்லாத வீட்டை விட்டு உடனடியாக வெளியேறுவார். அத்தகைய வீடுகளில் பணமும் இருப்பதில்லை. மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வீட்டில் மட்டுமே லட்சுமி தேவி குடியிருப்பார்.
செல்வத்தை நினைத்து தற்பெருமை கொள்ள கூடாது
எல்லோருக்கும் பண ஆசை இருக்கும். ஆனால் பணத்தின் மீது மோகம் இருக்க கூடாது என்கிறார் சாணக்கியர். அதாவது, பணம் சம்பாதிப்பதில் ஒருவருக்கும் எப்பொழுதும் வெறி இருக்கக் கூடாது. ஏனென்றால் பணம் கிடைத்தால் மக்களுக்கு ஆணவம் அதிகரிக்கும். தன்னிடம் இருக்கும் செல்வத்தை நினைத்து பெருமை கொள்பவர்களிடம் இருக்கும் பணம் விரைவில் கரையும்.



Click it and Unblock the Notifications
