Latest Updates
-
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 6 தவறுகளை செய்யும் தம்பதிகளின் திருமணம் விரைவில் விவகாரத்தில் முடிந்து விடுமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர். அவர் ஒரு திறமையான அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரியாகவும் இருந்தார். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தவிர மனித வாழ்வின் பல அம்சங்களைப் பற்றி சாணக்கியர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சாணக்கியரின் கொள்கைகள் மனித வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இன்றும் அவரின் அறிவுரைகள் உலகம் முழுவதும் பிரபலமானதாக இருக்கிறது. சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றினால் வாழ்க்கையில் இருந்து பல பிரச்சனைகள் நீங்கும்.

சாணக்கிய நீதியில் திருமண வாழ்க்கையைப் பற்றிய பல விஷயங்களை சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். திருமண வாழ்வில் சாணக்கியரின் கொள்கைகளை கடைப்பிடித்தால் மகிழ்ச்சியான திருமணத்தை அனுபவிக்க முடியும். திருமண வாழ்க்கையை அழிக்கும் சில தவறுகளை பற்றி சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார்.
கணவன்-மனைவி செய்யும் இந்த சிறு தவறுகள் அவர்களது உறவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் என்று சாணக்கியர் கூறுகிறார். அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கிண்டல் மற்றும் கேலி
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துக்கமும் சூரியனும் நிழலும் போன்றவை. ஒரு மனிதனின் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். கணவனும் மனைவியும் எந்த விஷயத்திற்காகவும் ஒருவரை ஒருவர் கேலி செய்யக்கூடாது.
நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாமே காரணம் என்று சாணக்கியர் நம்புகிறார். உங்கள் வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களையும், தவறுகளையும் புறக்கணிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இதை செய்யாவிட்டால், உங்கள் திருமண வாழ்க்கை விரைவில் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது.
பேச்சை நிறுத்தக்கூடாது
உங்கள் திருமண வாழ்வில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், நீங்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்தக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். கணவன்-மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் இதுக்காக ஒருவருக்கொருவர் பேசுவதை நிறுத்தக்கூடாது. இல்லையேல் சிறு சண்டையே பெரியதாக மாறும். சிறு தீப்பொறியே ஒரு பெரும் காட்டை எரிப்பதற்கு போதுமானது. உங்களின் சிறிய சண்டை அப்படித்தான் உங்கள் உறவை அழிக்கும்.
ஒத்துழைப்பு இல்லாமை
கணவன்-மனைவி இருவரும் சிறிய, பெரிய பணிகளில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். பெரும்பாலான வீட்டில் ஆண்கள் வீட்டு வேலைகளை பெண்களிடம் மட்டுமே விட்டு விடுகின்றனர். இது முதலில் நன்றாகத் தோன்றினாலும் பின்னர் அது மோதலுக்கு வழிவகுக்கும்.
திருமண வாழ்வில் கணவன் மனைவி பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம். வாழ்க்கை சரியாக இருக்க, தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க வேண்டும்.
தேவையற்ற செலவு
வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ பணம் மிகவும் அவசியம். பணத்தைப் பயன்படுத்துவதில் தம்பதிகளிடையே தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே கணவன்-மனைவி இடையேயான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளில் ஒருவர் மட்டுமே செலவுகளை கையாளத் தொடங்கினால், திருமண வாழ்க்கையில் விஷயங்கள் மோசமாகிவிடும்.
அவமரியாதை
தங்கள் துணையை அவமதிப்பதை சாதரண விஷயமென்று பலர் நினைக்கிறார்கள். சாணக்கியக் கொள்கையின்படி அனைவரும் இந்தத் தவறைத் தவிர்க்க வேண்டும். திருமண உறவில் ஒரு ஆணோ பெண்ணோ அவமரியாதையாக நடந்து கொண்டால், அது விரைவில் அவர்களின் திருமணத்தின் முறிவிற்கு வழிவகுக்கும்.
கோபம்
கோபம் என்பது கணவன்-மனைவி உறவை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் ஒரு மோசமான உணர்வு. கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். சாணக்கிய நீதியின்படி, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கோபம் வரும்போது, எப்போதும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியாக இருந்து பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
