Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 3 பழக்கங்கள் உங்கள் செல்வத்தை அழித்து உங்களை வறுமையில் தள்ளுமாம்...!
Chanakya Niti: நாம் ஒப்புக்கொள்ளா விட்டாலும் தற்போதைய உலகில் பணம்தான் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஒருவரின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலிருந்து ஆடம்பரத் தேவைகள் வரை அனைத்தையும் பூர்த்தி செய்ய பணம் அவசியமானதாகும். சாணக்கியரின் கூற்றுப்படி, நெருக்கடி காலங்களில் பணமே ஒருவரின் உற்ற நண்பர். பணம் சம்பாதிப்பது மட்டுமின்றி, அதை சரியாக பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்பவர்களுக்கு வாழ்க்கையில் பணத்துக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது.
சாணக்கிய நீதியில் பணம் தொடர்பான பல முக்கிய விஷயங்களை ஆச்சார்ய சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையை வசதியாகவும், எளிமையாகவும் மாற்ற பணம் அவசியம் என்று சாணக்கியர் கூறுகிறார், ஆனால் பணத்தை மிக விரைவாக அழிக்கும் சில நடவடிக்கைகள் உள்ளன. சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, பணத்தை ஒருவர் சில வழிகளில் சம்பாதிக்கக் கூடாது, சில வழிகளில் செலவு செய்யக்கூடாது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தவறான வழியில் சம்பாதிக்கும் பணம்
சாணக்கியரின் கூற்றுப்படி, பிறரைத் துன்புறுத்துவதன் மூலமும், புண்படுத்துவதன் மூலமும், எதிரியுடன் உறவாடுவதன் மூலமும் சம்பாதித்த பணம் நீண்ட காலம் நிலைக்காது. அப்படிப் பணம் கையில் இல்லாமல் இருப்பதே நல்லது. ஒரு நபர் ஒருபோதும் அத்தகைய செல்வத்திற்கு ஆசைப்படக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
பிறருக்குத் தீங்கிழைத்து, கடவுளுக்கு எதிரான செயல்களைச் செய்து அல்லது எதிரியுடன் சேர்ந்து சேகரித்த பணம் விரைவில் கையை விட்டு சென்றுவிடும். ஏனென்றால், அத்தகைய பணம் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பயனுள்ளதாக இருக்காது. மனிதன் எப்பொழுதும் கடின உழைப்பாலும், நற்செயல்களாலும் மட்டுமே செல்வத்தை குவிக்க வேண்டும்.
ஏமாற்றி சம்பாதித்த பணம்
தவறாக சம்பாதித்த பணம் உங்களுக்கு சில காலம் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. ஆனால் நீங்கள் அதைவைத்து வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அத்தகைய பணம் எதிர்காலத்தில் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். திருடி அல்லது ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர் விரைவில் ஏழையாகி விடுவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
வரவுக்கு மீறிய செலவு
ஒருவர் எந்த சூழ்நிலையிலும் தங்களுடைய வருமானத்தை மீறி செலவு செய்யக்கூடாது. வருமானத்தை விட அதிகமாக செலவு செய்பவர்கள் வாழ்க்கையில் பல பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கிறார் சாணக்கியர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடன் பிரச்சினையில் தவிக்க வேண்டியிருக்கும். எனவே பணம் சம்பாதிப்பதுடன், பணத்தைச் சேமிப்பதும் மிகவும் அவசியம்.
ஏமாற்றி சம்பாதித்த பணம் அவமானத்தை ஏற்படுத்தும்
சாணக்கிய நீதி படி, ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர் ஒருபோதும் சமூகத்தில் மரியாதையை அடைய மாட்டார். அவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் எங்கும் யாரும் மதிக்க மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில் அவர்களின் வாழ்க்கை அர்த்தமற்றதாகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு சமூகத்தில் மக்கள் இடம் கொடுப்பதில்லை. மோசடி மூலம் பெறப்பட்ட செல்வம் உங்கள் குடும்பத்தின் அழிவுக்கு கூட வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications
