Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்களை உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளக்கூடாதாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அறிஞராவார் , அவர் வாழ்க்கைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் ஆழமாக ஆராய்ந்து, அதைப்பற்றிய ஞானத்தைப் பெற்று, அந்த அறிவை மற்றவர்களுக்கும் கொடுத்தார். ஒரு அறிஞராக மட்டுமல்லாமல், அவர் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் சிறந்த இராஜதந்திரியாகவும் விளங்கினார்.
சாணக்கியர் தனது அறிவாற்றலால் அழியாப்புகழ் பெற்றார். அவரது காலத்தால் அழியாத அறிவும் புலமையும் இன்றும் நிலைத்து நிற்கிறது. அவருடைய சாணக்கிய நீதியும், அர்த்தசாஸ்திரமும் இன்றும் புகழ்பெற்ற நூலாக இருக்கிறது. சாணக்கியரின் உத்திகளையும், கொள்கைகளையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

வாழ்க்கையில் வெற்றி பெறவும் இலக்குகளை அடையவும் சாணக்கியர் பல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில், வாழ்க்கையில் யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாத சில விஷயங்கள் என சாணக்கியர் சிலவற்றை பட்டியலிட்டுள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
திருமண ரகசியங்கள்
திருமண வாழ்க்கையில் பல விஷயங்கள் உள்ளன. காதல், தாம்பத்யம், சச்சரவுகள், தவறான புரிதல்கள் என அனைத்தும் இருவருக்குள் மட்டும் நடக்கும் விஷயங்களாகும். திருமணத்தில் கணவன்-மனைவி இடையேயான ரகசியங்களும் உரையாடல்களும் எப்போதும் அவர்களுக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
எந்த மூன்றாம் தரப்பினருக்கும் அதை வெளிப்படுத்த வேண்டாம். தம்பதிகளுக்கு இடையிலான உரையாடல்கள் மற்றும் விவகாரங்கள் முற்றிலும் தனிப்பட்டவை. அத்தகைய தகவல்கள் வேறு யாருக்காவது வெளிப்படுத்தப்பட்டால், அவர்கள் அதை தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். கணவன், மனைவி இருவருமே தங்கள் வாழ்க்கைத்துணையைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லக்கூடாது.
ரகசியமாக கொடுத்த மற்றும் பெற்ற விஷயங்கள்
நமக்கு யாரோ ஒருவர் கொடுத்த அல்லது நாம் மற்றவருக்குக் கொடுத்த விஷயங்களையோ, அறிவையோ அல்லது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நாம் விரும்பாத விஷயங்களையோ ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.
உதாரணமாக, குரு ஒருவருக்கு அளித்த சிறப்பு பாடங்களை அவரின் அனுமதி இல்லாமல் ஒருபோதும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் நெருக்கடியான நேரத்தில் மற்றவர்கள் அதை உங்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தலாம். அதேபோல நீங்கள் செய்யும் தொண்டு செயல்களையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
வயது மற்றும் குறைபாடுகள்
ஒருவர் தனது உண்மையான வயது, பலவீனம் அல்லது திறன்களை யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். குறிப்பாக உங்களின் எதிரிகள் ஒருபோதும் இவற்றை தெரிந்து கொள்ளக்கூடாது. ஏனென்றால் மற்றவர்கள் அவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்தலாம். அதேபோல் உங்களின் மருந்துகள் அல்லது சிகிச்சை பற்றிய தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
தனிப்பட்ட சிக்கல்கள்
வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில், மற்றவர்களின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் நம்மைப் பற்றி தவறான எண்ணம் கொண்டவர்களிடம் உதவி கேட்காதீர்கள். அவர்களுடன் தனிப்பட்ட எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அவர்கள் அதை உங்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவார்கள். மேலும் உங்களைப் பற்றிய பொய்யான செய்திகளை அனைவரிடமும் பரப்புவார்கள்.



Click it and Unblock the Notifications
