Latest Updates
-
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்கள் நண்பர்களிடம் கூட சொல்லக்கூடாதாம்... இல்லனா ஆபத்துதான்...!
Chanakya Niti: சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு தத்துவஞானி ஆவார். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்காலத்தில் அவர் இந்தியாவை பொருளாதார அமைப்பிலும் அரசியலிலும் ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார். அவருடைய வார்த்தைகளும் ஆலோசனைகளும் எந்த காலத்திற்கும் பொருத்தமானவை. சாணக்கியரின் கொள்கைகள் நீங்கள் பின்பற்றினால், உங்கள் வாழ்க்கையை எளிதாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாற்றலாம்.
சாணக்கியர் வாழ்க்கையின் பல கடினமான உண்மைகளை நீண்ட காலமாகப் பேசியுள்ளார். அவருடைய அறிவுரைகளை பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் வாழ்க்கையில் வெற்றிபெற சில விஷயங்களை மற்றவர்களிடமிருந்து மறைக்க வேண்டும், அவற்றை ஒருபோதும் பிறரிடம் சொல்லக்கூடாது. ஏனெனில் அது உங்கள் வாழ்வில் அழிவை ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால், இந்த விஷயங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

இலட்சியங்கள் மற்றும் ஆசைகள்
ஒரு மனிதன் தனது கனவுகள் எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கே உயர்வார்கள் என்று கூறப்படுகிறது. கனவு காணாதவர்கள் வாழ்க்கையில் வளரவே முடியாது. ஆனால் உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் உங்கள் கனவைப் பற்றி எப்போதும் வெளிப்படையாக பேசினால், அது உங்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறும்.
உங்களைப் பற்றி நீங்கள் பேசுபவர்களிடம் உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதனால் உங்கள் நம்பிக்கைக் குறையலாம். அவர்கள் உங்கள் நம்பிக்கையை குறைக்கலாம். எனவே உங்கள் கனவுகளை நனவாக்கிய பின்னரே அனைவரிடமும் அதை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நிதி நிலை
உங்களின் பொருளாதார நிலை எப்படி இருந்தாலும், உங்களிடம் உள்ளதையும், இல்லாததையும் மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நல்லது. உங்களுக்கு மிகவும் நம்பகமானவர்களிடமிருந்தும் உங்கள் நிதி நிலையை மறைக்க வேண்டும். இந்த விஷயத்தை உங்களுக்குள் எப்போதும் ரகசியமாக வைத்திருப்பது நல்லது.
தனிப்பட்ட சிக்கல்கள்
ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். இது ஒரு உடல் அல்லது மன பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் இது போன்ற பிரச்சனைகளை எல்லாம் தேவையில்லாமல் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். ஏனெனில் அவர்கள் உங்களின் பிரச்சினைகளை உங்களுக்கே எதிராக பயன்படுத்திக் கொள்ளலாம்.
நம்பிக்கைகள்
ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென தனிப்பட்ட நம்பிக்கைகள் இருக்கும். உங்களிடம் அப்படி ஏதாவது இருந்தால், அது முற்றிலும் உங்கள் தனிப்பட்ட விஷயம். எந்த காரணமும் இல்லாமல் உங்கள் நம்பிக்கைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், அது உங்களை பின்னாளில் சிக்கலில் மாட்டிவிடும். எனவே உங்கள் நம்பிக்கைகளை உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள்.
உறவுகள்
உங்கள் உறவுகளைப் பற்றிய முழுமையான தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. உலகில் சரியான உறவு என்று எதுவும் இல்லை. காதலி-காதலன் அல்லது கணவன்-மனைவி போன்ற உறவுகள் மிகவும் பொதுவான உறவுகளாகும். தேவையில்லாதவர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொண்டால், அது வதந்திகளை உருவாக்கி உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
