Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்களை வாழ்க்கையில் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவே கூடாதாம்...!
Chanakya Niti: சாணக்கியர் மனித வாழ்வு சீராகவும், வெற்றிகரமாகவும் இருக்க பல கொள்கைகளை வழங்கியுள்ளார். இந்த கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞரும், அனைத்துப் பாடங்களையும் அறிந்த ஒரு சிறந்த ஞானியாக இருந்தார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சாணக்கியர் கூறிய விஷயங்கள், இன்றும் பொருத்தமானவையாக இருக்கிறது. மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுபவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்கிறார் சாணக்கியர்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க அல்லது வெற்றிகரமான நபராக இருக்க நாம் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கியரின் தந்திரங்கள் சிறந்த வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. அவற்றைப் பின்பற்றுபவர்கள் வாழ்வில் ஒருபோதும் கலக்கமடைய மாட்டார்கள்.
தவறவிடக்கூடாத விஷயங்கள்
சாணக்கியரின் கொள்கைகள் எப்போதும் பிரச்சனைகளில் இருந்து வெளிவர ஒரு வழியை பரிந்துரைக்கின்றன. சாணக்கிய நீதியின் படி, ஒரு உண்மையான வெற்றிகரமான மனிதன் மற்றவர்களை வெற்றிபெற ஊக்குவிப்பவன். செல்வத்தின் தெய்வமான லட்சுமியும் அத்தகையவர்களுடன் துணை நிற்கிறார்.
மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுபவர் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது, தனது இலக்கை அடைய முடியாது. வாழ்க்கையில் வெற்றி பெற சில விஷயங்களை எதற்காகவும் தியாகம் செய்யக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்ட விஷயங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
நட்பு
உங்கள் தகுதியுடன் ஒத்து போகிறவர்களுடன் மட்டுமே எப்போதும் நட்பு கொள்ளுங்கள் என்கிறார் சாணக்கியர். பிரபலமானவர்களுடனான நட்பு நீண்ட காலம் நீடிக்காது. ஆடு, புலி, பாம்பு ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று நட்பாக இருக்க முடியாது. உங்கள் இயல்புக்கு எதிர் இயல்புடையவர்களுடன் நட்பு கொள்ளாதீர்கள்.
உங்கள் நட்பு ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். மற்ற விஷயங்களுக்காக உங்கள் நட்பை ஒருபோதும் தியாகம் செய்ய வேண்டாம் என்றும் சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
அறிவு
அறிவு காமதேனு பசுவைப் போன்றது. ஒவ்வொரு பருவத்திலும் அது மனிதனுக்கு அமிர்தத்தைத் தருகிறது என்கிறார் சாணக்கியர். எனவே எப்பொழுது, எங்கு கிடைத்தாலும் அறிவைப் பெற முயல வேண்டும். அறிவு ஒருபோதும் வீணாகாது. அறிவும் அரசியலும் எப்போதும் ஒன்றல்ல.
ஏனெனில் ஒரு அரசன் தன் நாட்டில் மட்டுமே மதிக்கப்பட முடியும். ஆனால் ஒரு அறிஞர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவருக்கு மரியாதை கிடைக்கும். அறிவு என்பது நெருக்கடி காலங்களில் ஒரு நபரின் மிகப்பெரிய பலமாக மாறும் ஒரு சக்தியாகும்.
எனவே அறிவு பெறுவதற்கான வாய்ப்புகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்கிறார் சாணக்கியர்.
பெருமை
சாணக்கியரின் கூற்றுப்படி, நீங்கள் ஒருபோதும் பெருமையுடன் விளையாடக்கூடாது. உங்கள் பெருமை எப்போதும் செல்வத்தை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும். தங்களின் பெருமையை விட்டுவிட்டு பணத்தின் மீது ஈர்ப்பு கொள்வது பெரிய முட்டாள்தனம்.
சுயநலத்திற்காக பெருமையை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. இதைச் செய்பவர்கள் சமூகத்தில் மரியாதையை இழக்கிறார் என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே எந்த நிலையிலும் உங்கள் பெருமையை தியாகம் செய்யாதீர்கள் என்கிறார் சாணக்கியர்.
அனுபவங்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்பவர் வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியை சந்திக்க மாட்டார். நீங்களே அனுபவித்து அனைத்தையும் கற்றுக்கொள்ள விரும்பினால், அதற்கு உங்கள் ஆயுள் போதாது.
நீங்கள் வெற்றியை அடைய விரும்பினால், மற்றவர்களின் அனுபவங்களை அறிய முயற்சி செய்யுங்கள். யாருடைய அனுபவத்தையும் புறக்கணிக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications
