Latest Updates
-
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்! -
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது? -
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்': இந்த 6 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்க போகுது! -
மணமணக்கும்.. ஆட்டுக்குடல் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறாங்களாம் -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெற்று ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி எல்லோரையும் உங்க கண்ட்ரோலில் வைக்க நீங்க இந்த விஷயத்தை அவசியம் கத்துக்கணுமாம்!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவரான சாணக்கியர் வெற்றிகரமான வாழ்க்கையைப் பெறுவதற்கான பல வழிகளைக் கூறியுள்ளார். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் நம்முடைய கருத்துக்கு மற்றவர்களை எப்படி சம்மதிக்க வைக்க வேண்டும், அவர்கள் நம் பேச்சைக் கேட்க வைக்க என்ன செய்ய வேண்டும் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரை சமாதானப்படுத்துவது என்பது மிகவும் கடினமான செயலாகும், ஆனால் சிலரிடம் இந்த குணங்கள் இயற்கையாகவே இருக்கும். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் இதைப் பற்றி சில விஷயங்களைக் கூறியுள்ளார், இவர்களின் உதவியுடன் உங்களின் வார்த்தைகளுக்கு மற்றவர்களைக் கீழ்ப்படியச் செய்யலாம் அல்லது அவர்களைக் கட்டுப்படுத்தலாம்.

இதற்கு, சரியான நபரை அடையாளம் காண வேண்டியது அவசியம். சாணக்கியரின் நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த குணத்தை நீங்கள் பெறலாம்.
எந்தவொரு விஷயத்தையும் பொது மக்களிடம் ஒப்படைக்கும் முன் அல்லது அவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு முன், அதைப் பற்றிய முழுமையான தகவல் அல்லது அறிவு இருப்பது முக்கியம். குறிப்பாக, சில சமயங்களில் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் மனம் மாறாத பலர் நம்மைச் சுற்றி இருப்பார்கள். அவர்களின் மனநிலையை மாற்ற சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
பேராசை கொண்டவர்கள்
சாணக்கிய நீதி, பேராசைக்காரனைப் பணம் கொடுத்தால்தான் சமாதானப்படுத்த முடியும் என்கிறது. அதாவது பணமில்லாமல் பேராசை கொண்ட ஒருவரை நீங்கள் எந்த வகையிலும் கவர முடியாது. கொஞ்சம் பணம் செலவழிக்காமல் பேராசைக் கொண்டவர்களை நீங்கள் ஒருபோதும் உங்களின் கருத்துக்கு சம்மதிக்க வைக்க முடியாது.
திமிர் பிடித்தவர்கள்
ஒரு திமிர்பிடித்த நபரை சம்மதிக்க வைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ நீங்கள் அவர்களுக்கு தலைவணங்க வேண்டும். கைகூப்பி கேட்பதன் மூலமோ அல்லது தலை குனிந்து மன்றாடுவதன் மூலமோ அவர்களை உங்கள் வழிக்குக் கொண்டு வரலாம். திமிர் பிடித்தவர்கள் தங்கள் வழியை சரி என்று நினைக்கிறார்கள். எனவே நீங்கள் அவர்களின் வழியில்தான் செல்ல வேண்டும்.
முட்டாள்கள்
ஒரு முட்டாளை நம்ப வைக்க வேண்டுமானால், அவருடைய மனநிலையை ஆராய்ந்த பிறகு, அதைக்கேற்றார் போல நீங்கள் செயல்பட வேண்டும். இது அவரை மகிழ்ச்சியடையச் செய்து உங்களை நம்ப வைக்கும். அப்போதுதான் நீங்கள் நினைத்ததை செய்ய அவரை வற்புறுத்த முடியும்.
புத்திசாலிகள்
ஒரு புத்திசாலியான நபர் எந்த விஷயத்திலும் உண்மையைச் சொல்லி, லாஜிக்காக பேசி எதையும் நம்ப வைக்க முடியும், இப்படிப்பட்டவர்களை கட்டுப்படுத்த, நீங்களும் புத்திசாலியாக இருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள்.
நீங்கள் ஒருவரை வற்புறுத்துவதற்கு முன், அவர்களின் ஆளுமையை சரியாகப் புரிந்துகொண்டு, அவர்களின் இயல்புக்கு ஏற்ப உங்கள் நடத்தையை மாற்றுவது உங்களுக்கு நல்லது என்று சாணக்கியர் பரிந்துரைக்கிறார்.



Click it and Unblock the Notifications
