Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருப்பவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்கும் குதிரையாக இருப்பார்களாம்...!
Chanakya Niti: இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவரான சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும், சூழ்நிலைகளையும் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் மனிதர்களின் மனம் மகிழ்ச்சி மற்றும் துக்கத்தால் சிதறாமல் இருக்க பல வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கூடுதலாக, சாணக்கிய நிதி ஒரு நபரின் வாழ்க்கையை எளிதாக்க உதவும் சில வாழ்க்கை ரகசியங்களையும் விளக்குகிறது. வெற்றி என்பது எல்லோரிடமும் நிலைத்து நிற்பதில்லை.
ஒருவர் வாழ்க்கை முழுவதும் எப்போதும் வெற்றி நிலைத்திருக்காது. சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் ஏற்படும் சிறிய தவறுகள் உங்களை வெற்றியிலிருந்து விலக்கி வைக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கையில் தோல்வியைத் தவிர்க்க விரும்பினால், ஆச்சார்ய சாணக்கியரின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இந்த பதிவில் வெற்றியை அடைய செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

உணவு
ஒருவரின் உணவு அவரது எண்ணங்களைப் பாதிக்கிறது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். எரியும் விளக்கு இருளை விரட்டி கருப்பு புகையை வெளியேற்றுவது போல, ஒரு மனிதனின் உணவுக்கு ஏற்ப எண்ணங்கள் எழுகின்றன. எண்ணங்களை சமநிலைப்படுத்த சரியான உணவை உண்ண வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பணம்
செல்வம் மனிதர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். எனவே உங்கள் பணத்தை சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியம். பணம் தவறான கைகளுக்குச் சென்றால், அது பலருக்கு தீங்கு விளைவிக்கும். எனவே பணத்தை அதன் மதிப்பையும் தேவையையும் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவருக்கு மட்டுமே உங்களின் பணத்தைக் கொடுங்கள்.
பேராசை அறவே கூடாது
கருணை, கட்டுப்பாடான மனம் போன்ற நல்லொழுக்கத்தைக் கொண்டிருப்பதைத் தவிர வாழ்க்கையில் ஒருவர் செய்யக்கூடிய தவம் எதுவும் இல்லை என்பது ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். அதேபோல், பேராசையை விட மனிதர்களுக்கு மோசமான நோய் எதுவும் இல்லை. இந்த நோய் யாருக்காவது வந்தால், அது அவர்களின் முழு வாழ்க்கையையும் அழித்துவிடும்.
ஞானமே மிகப்பெரிய செல்வம்
ஒருவர் எவ்வளவு அழகாகத் இருந்தாலும், அவரிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும், அவர்களிடம் ஞானம் இல்லையென்றால் அவையனைத்துமே பயனற்றது என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய செல்வமே அவரது அறிவுதான். அறிவு அவருக்கு செல்வத்தையும், வாழ்க்கையில் வெற்றியையும் தருகிறது.
நம்பிக்கையே வெற்றிக்கு வழி
தன்னம்பிக்கையின் சக்தியால், ஒருவர் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட தனது வெற்றிக்கான வழியை எளிதாகக் கண்டுபிடிப்பார் என்று சாணக்கியர் கூறுகிறார். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, தன்னம்பிக்கை என்பது ஒருவரை வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியடைய அனுமதிக்காது. தன்னம்பிக்கை உள்ளவரை யாராலும் தோற்கடிக்க முடியாது.



Click it and Unblock the Notifications
