Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 4 நபர்களுடன் நண்பராக இருப்பது உங்கள் வாழ்க்கையின் மன்னிக்க முடியாத பாவமாக இருக்கும்...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவரான சாணக்கியர் மனிதர்கள் வாழ்வதற்கான சிறந்த அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவர் தனது அறிவுரைகளை சாணக்கிய நீதி என்ற புத்தகத்தில் தொகுத்துள்ளார். சாணக்கிய நீதியில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் விளக்குகிறது. சாணக்கிய நீதியின் வார்த்தைகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம்.
அனைத்து உறவுகளையும் விட நட்பு மிகவும் வலுவான உறவு என்று கூறப்படுகிறது. ஒருவர் பிறப்பிலேயே அம்மா, அப்பா, சகோதரன் மற்றும் சகோதரி போன்ற உறவுகளைப் பெறுகிறார்கள். ஆனால் நட்பு என்பது அவர்கள் சொந்தமாக தனக்கென உருவாக்கும் ஒரே உறவாகும். அதனாலேயே நட்பு மிகப் பெரிய உறவாகக் கருதப்படுகிறது.

சாணக்கியர் நட்பைப் பற்றி சில விஷயங்களை சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். சிரித்துப் பேசும் அனைவரும் நண்பர்களே அல்ல என்கிறார் சாணக்கியர். அப்படிப்பட்டவர்கள் நண்பர்களாக மாறினால், அவர்களிடமிருந்து தூரமாக இருக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்
நீங்கள் ஒருவருடன் நட்பை உருவாக்கிக் கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. எந்த சூழ்நிலையிலும் உங்களைப் பற்றிய முழுரகசியங்களையும் நண்பர்களிடம் சொல்லாதீர்கள். ஏனென்றால் உங்கள் நண்பர் நம்பகமானவராக இல்லாவிட்டால் அது உங்களுக்கு பின்னாளில் ஆபத்தை ஏற்படுத்தும். அவர்கள் உங்களுக்கு எதிராக உங்கள் இரகசியங்களைப் பயன்படுத்துவார்கள்.
சுயநல நண்பர்களிடம் இருந்து விலகி இருங்கள். ஏனென்றால் அத்தகையவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். அவர்கள் உங்களை வைத்து தங்களை முன்னேற்றிக்கொள்ள விரும்புவார்கள். உங்களுக்கு கெட்ட நேரம் வரும்போது உங்களை விட்டு முதலில் ஓடுபவர்கள் அவர்களாகத்தான் இருக்கும்.
சுயநல நண்பர்களிடமிருந்து விலக வேண்டும்
சுயநலம் மற்றும் பேராசை கொண்ட நண்பர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். ஏனென்றால் அப்படிப்பட்டவர்கள் தங்கள் பலன்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். அத்தகையவர்கள் தங்கள் நன்மைக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் கவனமாக இருக்குமாறு சாணக்கிய நீதி அறிவுறுத்துகிறார். கட்டிப்பிடித்து கைகுலுக்கும் அனைவரும் நண்பராக இருக்க முடியாது. இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை சந்திக்கலாம்.
முட்டாள்களுடன் நண்பராக இருக்கக்கூடாது
ஒரு முட்டாள் நண்பன் உன்னை எப்போது வேண்டுமானாலும் உங்களை குழியில் தள்ளலாம். அவர்களின் முட்டாள்தனம் அவர்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே புத்திசாலிகளை எப்போதும் நண்பர்களாக வைத்திருக்க வேண்டும் என்று நீதியில் சாணக்கியர் கூறுகிறார்.
பாவம் செய்பவர்களுடன் நட்பு கொள்ளக்கூடாது
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் பாவிகளுடன் நட்பு கொள்ளக்கூடாது என்று விளக்குகிறார். அப்படிப்பட்ட ஒருவருடனான நட்பு எப்போது வேண்டுமானாலும் உங்களை ஆபத்தில் சிக்க வைக்கலாம். பாவம் செய்பவர் உங்களின் நலன் மட்டுமின்றி உங்கள் குடும்பத்தின் நலனையும் கேளிவிக்குறியாக்குவார். இதன் காரணமாக, உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் பாதிக்கப்படலாம்.
தவறான பழக்கம் உள்ளவர்களுடன் நட்புக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, தீய பழக்கம் உள்ளவர்களிடமிருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும். சாணக்கிய நீதியின் படி, தவறான பழக்கங்கள் உள்ள ஒருவருடனான நட்பு உங்களுக்கு ஒருபோதும் நன்மைகளை அளிக்காது. அத்தகையவர்களின் கெட்ட பழக்கங்கள் உங்கள் வாழ்க்கையையும் பாதிக்கும். அவர்களுடனான நட்பு உங்களின் நற்பெயருக்கு மட்டுமின்றி உயிருக்கும் ஆபத்தும் ஏற்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications
