சாணக்கிய நீதி படி இந்த பழக்கம் உள்ளவர்கள் வாழ்க்கையில் சீக்கிரம் ஏழையாகி விடுவார்களாம்...!

Chanakya Niti: இன்றைய நவீன காலத்தில் ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்குப் பணம் தேவை, எந்தத் தேவையாக இருந்தாலும் அதனை நிறைவேற்ற பணம் தேவை. சாணக்யாவின் கூற்றுப்படி, நெருக்கடி காலங்களில் பணம் ஒரு நபரின் சிறந்த நண்பர்.

பணம் சம்பாதிப்பதோடு, அதன் சரியான பயன்பாடு குறித்தும் ஒருவர் தெரிந்து கொள்வது அவசியம். பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்பவர்களுக்கு பணத்துக்கு பஞ்சம் இருக்காது. சாணக்கிய நீதியில் பணம் தொடர்பான பல முக்கிய விஷயங்களை ஆச்சார்ய சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார்.

Chanakya Niti: These Things Make You Poor Suddenly in Tamil

வாழ்க்கையை எளிமையானதாகவும், எளிதாகவும் மாற்ற பணம் அவசியம் என்று தான் நம்புவதாக சாணக்கியர் கூறுகிறார், ஆனால் பணத்தை மிக விரைவாக அழிக்கும் சில நடவடிக்கைகள் உள்ளன. சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, பணம் பெறுவதற்காக ஒரு நபர் ஒருபோதும் இதுபோன்ற செயல்களைச் செய்யக்கூடாது.

தவறான வழியில் சம்பாதித்த பணம்

சாணக்கியரின் கூற்றுப்படி, பிறரைத் துன்புறுத்துவதன் மூலமும், புண்படுத்துவதன் மூலமும், எதிரியோடு சேர்ந்து வேலை செய்வதன் மூலமும் சம்பாதித்த பணம் நீண்ட காலம் நிலைக்காது. அப்படிப்பட்ட பணம் கையில் இல்லாமல் இருப்பது நல்லது. ஒரு நபர் ஒருபோதும் அத்தகைய செல்வத்திற்கு ஆசைப்படக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.

பிறருக்குத் தீங்கிழைத்து அல்லது எதிரியுடன் சேர்ந்து சேகரிக்கும் பணம் விரைவில் கையை விட்டு நழுவிவிடும். ஏனெனில் அத்தகைய பணம் உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் ஒருபோதும் பயன்படாது. மனிதன் எப்போதும் கடின உழைப்பாலும், நற்செயல்களாலும் மட்டுமே செல்வத்தை சம்பாதிக்க வேண்டும்.

திருட்டு அல்லது மோசடி மூலம் சம்பாதித்த பணம்

தவறான வழியில் சம்பாதித்த பணம் உங்களுக்கு சிறிது காலம் மகிழ்ச்சியைத் தரும் என்று சாணக்ய நீதி கூறுகிறது. ஆனால் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அத்தகைய பணம் எதிர்காலத்தில் உங்களுக்கு வருத்தத்தைத் தருகிம். திருடியோ அல்லது ஏமாற்றியோ பணம் சம்பாதிப்பவர் ஏழையாக மாற அதிக காலம் எடுக்காது என்கிறார் சாணக்கியர்.

ஏமாற்றி சம்பாதித்த பணம்

சாணக்கியரின் கூற்றுப்படி, ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர் ஒருபோதும் சமூகத்தில் கௌரவத்தை அடைய மாட்டார். அவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் எங்கும் யாரும் மதிக்க மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில் அந்த நபரின் வாழ்க்கையும் அழிக்கப்படுகிறது.

இப்படிப்பட்டவர்களுக்கு சமூகத்தில் மக்கள் இடம் கொடுப்பதில்லை. அதனால் அப்படிப்பட்டவர்கள் கடனால் அவதிப்படுகின்றனர். மோசடி மூலம் பெறப்பட்ட செல்வம் உங்கள் குடும்பத்தின் அழிவுக்குக் கூட வழிவகுக்கும்.

பேராசை

சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் ஒருபோதும் சுயநலமாகவும், பேராசையுடனும் இருக்கக்கூடாது. செல்வத்தின் தெய்வமான லட்சுமி, சுயநலவாதிகள் மற்றும் பேராசை கொண்டவர்களிடமிருந்து விலகி நிற்கிறார். எனவே பண விஷயங்களில் பேராசை மற்றும் சுயநலம் வேண்டாம். இப்படிப்பட்டவர்களின் கைகளில் பணம் நீண்ட காலம் நீடிக்காது.

தகுதிக்கு மீறிய செலவு

வருமானத்தை விட அதிகமாக செலவு செய்பவர்கள் வாழ்க்கையில் அதிக பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கிறார் சாணக்கியர். எனவே பணம் சம்பாதிப்பதுடன், பணத்தைச் சேமிப்பதும் மிகவும் அவசியம்.

Story first published: Saturday, February 10, 2024, 6:05 [IST]
Desktop Bottom Promotion