Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
சாணக்கிய நீதி படி உடலில் இந்த அடையாளம் உள்ள பெண்கள் மோசமான குணங்கள் உள்ளவர்களாக இருப்பார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் மற்றும் சாணக்கிய நீதிக்கு இந்திய கலாச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது, அதனால்தான் இன்றும் சாணக்கிய நீதி மிகவும் பிரபலமாக இருக்கிறது. சாணக்கியர் ஒரு நல்ல ஞானி மற்றும் வழிகாட்டி என்பதை நாம் நன்கு அறிவோம். சாணக்கியர் உலகில் நடக்கும் மற்றும் நடக்கக்கூடிய பல விஷயங்களைப் பற்றிப் பேசியுள்ளார் மற்றும் அவற்றை தனது நூல்களில் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் என்று வரும்போது, பெரும்பாலான மக்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் அழகாக இருந்தாலும் சில பெண்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக சிதைக்கக் கூடியவர்காளக இருக்கிறார்கள். சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்றினால் வாழ்க்கை மீதான கண்ணோட்டமே மாறக்கூடும். திருமண வாழ்க்கைப் பற்றி சாணக்கிய நீதி கூறும் விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பெண்களின் குணம்
ஒரு பெண் ஒரு குடும்பத்தை சொர்க்கமாகவோ அல்லது நரகமாகவோ மாற்றும் ஆற்றல் கொண்டவர் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியர் பெண்களின் குணாதிசயத்தின் அடிப்படையில்தான் குடும்பத்தின் நிம்மதி உள்ளது என்று கூறுகிறார். அதன்படி சில குணங்கள் கொண்ட பெண்கள் குடும்பத்தின் அமைதியையும், நிம்மதியையும் கெடுக்கும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கழுத்தின் அளவு
கழுத்தின் அளவிற்கும் பெண்களின் குணாதிசயங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சாணக்கியர் கூறுகிறார். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, கழுத்து நான்கு விரல்களை விட பெரியதாக இருக்கும் பெண்கள் குடும்பத்தின் அமைதியையும் மகிழ்ச்சியையும் அழித்துவிடுவார்கள். இதுபோன்ற விஷயங்களுக்கு அறிவியல் விளக்கம் இல்லை என்றாலும், சாணக்கியர் இவற்றை தனது அனுபவத்திலிருந்து எழுதியுளளார்.
உள்ளங்கை அளவு
உள்ளங்கையின் அளவிற்கும் பெண்களின் இயல்புக்கும் தொடர்பு இருப்பதாக சாணக்கிய நீதி கூறுகிறது. தட்டையான உள்ளங்கையை உடைய பெண்களின் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் என்பது ஐதீகம். சாணக்கிய நீதி படி, அத்தகைய பெண்கள் உள்ள வீட்டின் செல்வமும் அதிகரிக்கும் என்று கூறுகிறது. அந்த பெண்கள் உள்ள குடும்பம் எந்த வித நெருக்கடியையும் அவர்கள் அனுபவிக்க வேண்டியதில்லை.
கண்ணின் நிறம்
பெண்களின் உடலில் கண் நிறமும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் மஞ்சள் நிற கண்கள் கொண்ட பெண்கள் பெரும்பாலும் தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை அவர்களுக்கு பல பிரச்சனைகளை கொடுக்கிறது. இதனால் குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படும் என்கிறார் சாணக்கியர்.
முரட்டுத்தனம்
பெண்களுக்கு முரட்டு குணம் நல்லதல்ல, அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இந்த வகை பெண்கள் வீட்டின் சாபக்கேடு போன்றவர்கள், அவர்கள் ஒருபோதும் தங்கள் மனதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். பெண்களுக்கு மோசமான மற்றும் முரட்டுத்தனமான சுபாவம் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், மேலும் அவர்களால் குடும்பத்திற்கு தீங்கு ஏற்படும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications

