சாணக்கிய நீதி படி உங்க மனைவியிடம் இந்த அறிகுறி இருந்தா அவங்க உங்ககூட சந்தோசமாக இல்லையாம்...!

Chanakya Niti: சாணக்கியர் கிமு 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் இராஜதந்திரி ஆவார். அவருக்கு மனித வாழ்க்கைக் குறித்த அனைத்து விஷயங்களிலும் ஆழமான புரிதல் இருந்தது. சாணக்கியரின் கொள்கைகள் எந்த காலகட்டத்திற்கும் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. இதனை பின்பற்றுவது கடினமாகத் தோன்றினாலும், சாணக்கியரின் கொள்கைகளை ஒருவர் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வழிநடத்தலாம்.

Chanakya Niti Signs of a Dissatisfied Wife in Tamil

பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் சாணக்கிய நீதி பிரபலமானதாக இருப்பதற்கு காரணம் அதன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய தன்மைதான். இன்றும் அதனை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண்கள் அதிருப்தி அடையும் போது செய்யும் சில விஷயங்களைப் பற்றி சாணக்ய நீதி கூறுகிறது.

இந்த அறிகுறிகளை புரிந்து கொண்டால் கணவர்கள் தங்கள் மனைவியை திருப்திப்படுத்த முடியும். மனைவியின் அதிருப்தியை நீக்க, சாணக்கிய நீதி கூறும் வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேச்சை குறைத்துக்கொள்வது

கணவர் மீது அதிருப்தியில் இருக்கும் போது மனைவிகள் பெரும்பாலும் கணவரிடம் பேசுவதை நிறுத்திவிடுவார்கள். குறைவாக பேசுவது மனைவிகளிடையே அதிருப்தியைக் குறிக்கிறது. இந்த அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், அவர் ஏன் கவலைப்படுகிறார் என்பதைக் கண்டறியவும். இவ்வாறு செய்வதன் மூலம் மனைவி சண்டைக்கான காரணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வார். ஆக்கபூர்வமான பேச்சின் மூலம் குடுமபத்தின் சூழ்நிலையை பழையபடியே மாற்றலாம்.

அனைத்திற்கும் கோபப்படுவது

கணவன் மனைவிக்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு மனைவி தன் கணவனை அதிருப்தி அடைய விரும்புவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனைவி உங்களிடம் கோபப்பட ஆரம்பித்தால், அதாவது சிறிய விஷயங்களுக்காக அவர் அடிக்கடி சண்டையிட்டு கோபப்பட்டால், அவர் ஏதாவது ஒரு விஷயத்தில் உங்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதை மனதில் வைத்து, உங்கள் அடுத்த நகர்வு உங்கள் மனைவியை மகிழ்விப்பதாக இருக்க வேண்டும்.

புறக்கணிக்கத் தொடங்குவது

மனைவிகள் தங்கள் கணவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதாக கூறப்படுகிறது. உங்கள் மனைவி திடீரென உங்களிடமிருந்து விலகிச் சென்றாலோ அல்லது அவர் தன்னைப் பற்றி மட்டும் சிந்தித்து, உங்களைக் கவனித்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் உணர்ந்தாலோ, அவருக்கு உங்கள் மீது சில அதிருப்தி இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கலாம். அவர்களின் பிரச்னையை புரிந்து கொண்டு தீர்வு காண வேண்டும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் மனைவி திருப்தி அடைவதோடு, முன்பு போலவே மீண்டும் உங்களை நேசிக்கத் தொடங்குவார்.

அதிர்ஷ்டசாலி கணவர் யார்?

ஒரு பெண்ணுக்கு பணத்தை சேமிக்கத் தெரிந்தால், அவர் அதிகமாகச் செலவு செய்ய மாட்டார் என்று சாணக்கிய நீதி கூறுகிது. அவர்கள் தனிப்பட்ட சேமிப்பு மூலம் பணம் குவிக்கிறார்கள். அவர்கள் கடினமான காலங்களில் குடும்பத்திற்கு உதவுகிறார்கள். அத்தகைய பெண்கள் தங்கள் கணவருக்கு நிதி நெருக்கடியில் உதவலாம். இப்படிப்பட்ட மனைவியைப் பெற்ற ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்கிறார் சாணக்கியர்.

மென்மையான பேச்சு

மென்மையான நடத்தைக் கொண்ட பெண்கள் எப்போதும் இனிமையாகப் பேசுவார்கள். அப்படிப்பட்ட மனைவியைப் பெறும் கணவன் அதிர்ஷ்டசாலி என்கிறார் சாணக்கியர். அப்படிப்பட்ட மனைவியோ அல்லது பெண்ணோ தங்கள் குடும்பத்துடன் நல்லுறவு வைத்து குடும்ப செழிப்பை அதிகரிக்கச் செய்கிறார்கள். மனைவி எப்போதும் மென்மையாக பேச வேண்டுமென்றும், யாரையும் தவறாக பேசக் கூடாது என்றும் சாணக்கியர் கூறுகிறார்.

Story first published: Wednesday, May 22, 2024, 6:00 [IST]
Desktop Bottom Promotion