Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 6 ரகசியங்களை கணவரிடம் எந்த சூழ்நிலையிலும் சொல்ல மாட்டார்களாம்...!
Chanakya Niti: கணவன் மனைவிக்கு இடையேயான உறவு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. திருமண உறவில் நேர்மை, விசுவாசம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றால் வலுவடைகிறது. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும், ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அது நடக்காது என்பதே உண்மை.
ஆச்சார்ய சாணக்கியரும் தனது சாணக்கிய நீதியில் இதைத்தான் குறிப்பிட்டுள்ளார். அதன்படி ஒரு பெண் தன் கணவரிடம் வெளிப்படுத்தக்கூடாத சில ரகசியங்களை சாணக்கியர் கூறியுள்ளார். ரகசியங்கள் மோசமான விஷயங்கள் அல்ல, மேலும் இந்த ரகசியங்கள் திருமணத்தை பலப்படுத்துகின்றன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இரகசிய காதல்
பல பெண்களுக்கு திருமணத்திற்கு முன்னும் பின்னும் சில தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும். அது தீவிரமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. திருமணமான பெண்கள், மற்றொரு ஆண் மீது ஏற்படும் தங்கள் காதலை மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முயற்சிப்பார்கள். குறிப்பாக கணவருக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். ஏனென்றால் இது அவர்களின் திருமண வாழ்க்கையைப் பாதிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
கருத்து வேறுபாடுகள்
திருமணத்திற்குப் பிறகு, கணவன்-மனைவி அனைத்து முக்கிய முடிவுகளையும் ஒன்றாக எடுக்க வேண்டும். இருவரும் விவாதித்து முடிவெடுக்க தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் சில நேரங்களில் பெண்கள் தங்கள் கருத்துக்களை அல்லது கருத்து வேறுபாடுகளை மறைக்கிறார்கள். கணவனுக்குப் பிடிக்காது என்ற எண்ணத்தினாலோ அல்லது தன் கருத்துக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை என்பதாலோ இந்த விஷயத்தை மறைக்கிறார்கள்.
பாலியல் ஆசைகள்
பெரும்பாலான மனைவிகள் உடல் உறவின் இன்பத்தையும், திருப்தியையும் தங்கள் கணவரிடம் மறைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் பொய் சொல்கிறார்கள்.
சேமிப்பு
பணத்தை சேமிப்பதில் ஆண்களை விட பெண்கள் எப்போதும் ஒரு படி மேலே இருக்கிறார்கள். தன்னிடம் கிடைப்பது கொஞ்ச பணமாக இருந்தாலும் பணத்தை சேமிக்க முயற்சிப்பார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் தங்கள் கணவரிடம் இருந்து அதை ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் அவசரகாலத்தில் மனைவியின் இந்த சேமிப்பு குடும்பத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஆரோக்கிய பிரச்சினைகள்
கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர, பெண்கள் பல சமயங்களில் தங்கள் உடல் பிரச்சனைகள் மற்றும் அசௌகரியங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்கிறார்கள். சில பெண்கள் இந்த காரணங்களால் தங்கள் கணவர் தங்களை விட்டு சென்று விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
